(Reading time: 17 - 33 minutes)

ரு வருடம் கேரளாவிலே தங்கி, அவளைத் தேடி அலைந்தேன். என்னால் அவளை நெருங்க முடியவில்லை.

ஒரு நாள் என் கல்லூரி நண்பன் ஒருவன், அவளை சென்னை அம்பத்தூரில் சந்தித்ததாகவும், அவளிடம் பேச செல்வதற்குள், அவள் இருந்த பேருந்து சென்று விட்டதாகவும் அலைப்பேசியில் கூறினான்.

உடனே சென்னை வந்தேன். அவளை பல இடங்களில் தேடி அலைந்தேன். எவ்வளவு முயன்றும் அவளைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

அவளை என்னால் மறக்கவும் முடியவில்லை. அவளை நான் உண்மையாக நேசித்தேன்.

கன்னடத்திலும், தமிழிலிலும் யாரோ கத்திக் கொண்டிருப்பது எனக்கு கேட்டது. அவள் மீதிருந்த

என் பார்வை அந்த ஒலியின் பக்கம் திரும்பியது. அந்த கன்னட தம்பதியருக்கும், நடு வயதுப் பெண்ணுக்கும் சண்டை முத்தியிருந்தது.

கண்டக்டர் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுக் கொண்டிருந்தார்.

சில நடு வயது ஆண்கள் இருக்கையில் அமர்ந்தவாறே, கைகளை நீட்டி, அசைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.

அவள் என்னைப் பார்ப்பதாய் உணர்ந்தேன்.

உடனே, அவள் பக்கம் என் பார்வையை திருப்பினேன். அவள் என்னை இயல்பாக பார்த்தவாறு இருந்து, அந்த சண்டையின் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

கருப்பு நிற சுடிதார், கருப்பு நிற ஃப்ரேம் கொண்ட மூக்கு கண்ணாடி, வட்டவடிவ காதணி, சிறிய ஸ்டிக்கர் பொட்டு, என அவள் இன்னும் அப்படியே இருப்பதைக் கண்டு நான் மகிழ்ந்தேன்.

அந்த நொடி, என்னை சுற்றியுள்ள சப்தங்கள் எதுவும் எனக்கு கேட்காமல் போனது. நான் அவள் பார்க்கும் திசையில் பார்த்தேன்.

கன்னடம் பேசி வந்த தம்பதியரும், நடு வயது பெண்ணும் நேருக்கு, நேர் நின்று வேகமாக வாயசைத்துக் கொண்டிருந்தனர்.

சாலையில் வாகனங்கள் அமைதி ஊர்வலம் போய் கொண்டிருந்தன.

என் பார்வை மீண்டும் அவள் பக்கம் திரும்பியது. அவள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஏன் என்னைக் கண்டும் காணாமல் இருக்கிறாள். அவளுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா? இல்லையா? அவளிடம் பேசலாமா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டேன்.

என் முன் இருந்த கூட்டம் சற்று நகர்ந்து, அவளை மறைத்தது. அவளை பார்க்க முயன்றுக் கொண்டிருந்தேன்.

விசில் சத்தம் காதை துளைக்க, எம்.எம்.டி.ஏ காலனி என்று கண்டக்டர் கத்துவது என் காதில் கேட்டது. பேருந்து நின்றது.

அந்த கன்னடம் பேசி வந்த தம்பதியர் கன்னடத்தில் ஏதோ முணு முணுத்தப்படி, கீழிறங்கி சென்றனர்.

பேருந்து நகர ஆரம்பித்தது. நான் மீண்டும் அவளைப் பார்க்கத் தொடங்கினேன்.

அவளின் காதணிகள் அவள் கன்னங்களில் முத்தமிட்டுக் கொண்டே இருந்தது. அதற்கு, சாலையின் குண்டு, குழிகள் உதவிக் கொண்டே வந்தன.

அவளின் காதணிகள் மீது என் கல்லூரி காலத்திலிருந்தே எனக்கு பெறும் பொறாமை இருந்து வருகிறது. அவளின் காதணிகள் என் இயலாமையை சுட்டிக் காட்டுவதாய் எனக்கு தோன்றும்.

இன்னும், அவள் காதணிகளின் லீலை குறையவே இல்லை. அந்த நொடி, அவள் காதணியாக மாற ஆசைப் பட்டேன்.

சற்று முன்பு சாதரணமாக என்னை பார்த்த அவள், அதன் பிறகு, என் பக்கம் திரும்பவே இல்லை.

அவள் உண்மையாகவே என்னை மறந்து விட்டாளோ? என்று என் மனம் வலியால் துடித்தது.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவளைப் பார்த்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தும், அவள் மீதுள்ள ஈர்ப்பு எனக்கு குறையவே இல்லை. அவள் என் முதல் காதல். அவளை காதலித்தப் பின் நான் யார் மீதும் காதல் கொள்ளவில்லை. அவளின் கட்டுப்பாட்டுக்குள்ளே தான் இருந்தேன். அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை.

விசில் சத்தத்தோடு திருநகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றது.

இருக்கையிலிருந்து அவள் எழுந்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு கீழிறங்க முன் நகர்ந்துக் கொண்டிருந்தாள். கூட்ட நெரிசலில், அவளின் மென்மையான உடலை, மற்ற உடல்கள் இறுக்கி கஷ்டப்படுத்துவதைப் பார்க்க முடியாமல், கோபம் தலைக்கு ஏறி, தலை குனிந்துக் கொண்டேன்.

நெரிசலின் மத்தியில் பல கால்களை கடந்து, நடந்து செல்லும் அவளின் கால்கள் மிக அழகாக, தனியாக, நிலக்கரி மீது உருண்டோடும் பால் போல் இருந்தது.

நான் தலை நிமிர்ந்து அவளை பார்த்தேன். அவள் நெரிசலை விலக்கியவாறு, முகத்தை என் பக்கம் திருப்பினாள். ஆனால், அவள் கண்கள் என்னைப் பார்க்கவில்லை. அவளுக்கு உண்மையாகவே என்னை தெரியவில்லையா? அல்லது மறைக்கிறாளா? என்று புரியாமல் நான் அவளை பார்த்தப்படியே இருந்தேன். அவள் முகத்தை மறு திசையில் திருப்பிக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.