(Reading time: 17 - 33 minutes)

வள் கால்களில் ஏதோ மாறுதலைக் கண்டதாய் எனக்கு தோன்றியது. உடனே, என் பார்வை அவள் கால்களைத் தேடி சென்றது. ஆனால், அவள் பேருந்தின் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாள். என்னால் சரியாக பார்க்க முடியவில்லை.

நெரிசலுக்கு மத்தியில், அவள் கால்களைப் பார்க்க முயன்றுக் கொண்டிருந்தேன்.

அவள் பேருந்தை விட்டு இறங்கி விட்டாள்.

அவள் பேருந்தை நோக்கி திரும்பி, சாலையை கடக்க ஆயத்தமாய் இருந்தாள்.

பேருந்து நகர ஆரம்பித்தது.

அந்த மாறுதல் என் கண்ணில் பட்டுவிட்டது.

அந்த மாறுதலைக் கண்ட அந்த நொடி, என் உடல் எடை பல மடங்கு அதிகரித்து, என் நெஞ்சில் யாரோ ஏறி நிற்பது போல் இருந்தது.

அப்போது, எனக்கு மூச்சு முட்டி, சில நொடிகள் நான் சுவாசிக்க முடியாமல் திணறினேன்.

அவள் கால் விரலில் மெட்டி அணியப்பட்டிருந்தது.

அந்த மெட்டியணிந்த கால் விரல்கள் என்னை உலுக்கி எடுத்தது.

என் பார்வை அவளின் காலில் இருந்து, முகத்திற்கு சென்றது.

அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்னை அடையாளம் தெரிந்திருக்கிறது.

அவள் தலை முடி வடுவின் தொடக்கத்தில் சிறு குங்குமம் வைத்திருந்ததையும், அவள் கழுத்தில் எப்போதும் தொங்கும் சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதர் கொண்ட சைன் இல்லாததையும், அங்கு தாலி கயிறு இருப்பதையும், அப்போது தான் கவனித்தேன்.

அவள், சாலையை கடக்க முன் நகர்ந்து கொண்டிருந்தாள்.

பேருந்து சற்று வேகமாக நகர, அவள் என் பார்வையிலிருந்து மறைந்தாள்.

நான் சற்று குனிந்து ஜன்னல் வழியே, தூரத்தில் தெரியும் அவளின் சிறு உருவத்தைப் பார்த்தேன். அவள் நான் சென்றுக் கொண்டிருக்கும் பேருந்தை பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தாள்.

அவள் உருவம் சிறியதாகிக் கொண்டே செல்வதைப் பார்த்தப்படி, நின்றுக் கொண்டிருந்தேன்.

அவள் உருவம் மெல்ல மறைந்தது.

ன் மனதின் பாரத்தை சுமக்க பெரிதும் போராடிக் கொண்டிருந்தேன்.

பேருந்தில், அவள் என்னை கண்டும் காணாததுப் போல் முகத்தை திருப்பிக் கொண்ட அந்த நொடி, என் உண்மையான காதலை ஏற்கவில்லையே என்ற ஆதங்கத்திலும், என்னுடைய இயலாமையை நினைத்து வருந்தியும் கோபத்தில் எனக்கு நானே விட்ட குத்து தான், என் தலைக்கு மேல் இருந்த கருப்பு கம்பியின் மேல் விழுந்தது. அப்போது, ஏற்பட்ட அந்த அதிர்வு தான் என் மனக்குமுறல்.

என் உண்மையான காதலை மட்டும் கொண்டு அவளை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்று எனக்கு தெரியும்.

அவளிடம் சொன்னப்படியே, கடந்த ஐந்து வருடங்களில் ஓரளவு என் பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கிறேன். வாடகை வீட்டிலிருந்த நான் தற்போது, சொந்த வீட்டிலிருக்கிறான். என் அலுவலக பணியை தவிர்த்து, ரியல் எஸ்ட்டேட் தொழிலிலும் ஈடுப்பட்டு, இரவு, பகலாக கடுமையாக உழைத்திருக்கிறேன்.

ஆனால், இப்போது, கட்டாயம் அவளது அலைப்பேசியின் முகப்பு திரையில் நாய்குட்டி படம் இருக்காது.

வடபழனி பேருந்து நிறுத்தம். விசில் சத்தம் சற்று தாமதமாகவே ஒலித்தது. பேருந்து நின்றது.

நான் பேருந்திலிருந்து இறங்கி என் அலுவலகம் நோக்கி நடந்தேன்.

என் பாரம் என்னை மெதுவாக நடக்க செய்தது.

காதலே வேண்டாம் என்று அவ்வளவு உறுதியாக கூறினாலே! இப்போது எப்படி காதல் திருமணம்! என்னை ஏன் நிராகரித்தாள்? நான் அவளை உண்மையாக தானே நேசித்தேன், என்னை ஏன் அவள் புரிந்து கொள்ளவில்லை? அவள் யாரையும் காதலிக்கவில்லை என்பதை உறுதி செய்த பின் தான் நான் என் காதலை அவளிடம் கூறினேன். நிச்சயமாக, கல்லூரிக்கு பின் தான் அவளுக்கு காதல் வந்திருக்க வேண்டும். அது ஏன் என் மேல் வரவில்லை? என்று என்னுள் ஆதங்கப்பட்டு, உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே நடந்தேன்.

வாகனங்கள் பலத்த ஹாரன் சத்தத்துடன் என்னை கடந்து சென்றுக் கொண்டே இருந்தன.

என் அலுவலகத்தினுள் நுழைந்தேன். என் இருக்கையை நோக்கி நடந்தேன். கண்ணாடி அறையினுள் இருந்து மேனஜர் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

ஆனால், நான் அவர் பக்கம் திரும்பவில்லை. நேராக சென்று என் இருக்கையில் அமர்ந்தேன். நான் அமர்ந்த அடுத்த நொடி என் மேசை மீது இருந்த தொலைப்பேசி மணி ஒலிக்க ஆரம்பித்தது.

நான் தொலைப்பேசியை எடுக்காமல், எழுந்து சென்று மேனஜர் அறைக்குள் நுழைந்தேன்.

இப்போது, அவர் என்ன பேசினாலும், அது என் காதுகளில் விழப்போவதில்லையென்று எனக்கு தெரியும். 

This is entry #61 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.