(Reading time: 8 - 15 minutes)

தொடரும்.. - கார்த்திக் குமார்

This is entry #82 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

GHOST

ணி பன்னிரண்டு.. இன்றுடன் இது ஐந்தாவது நாள்.. தினமும் பத்து மணிக்கெல்லாம் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று விடும் அவன் காலை 6 மணிக்கு தான் எழுந்து கொள்வான். அதற்கிடையில் விழிப்பது என்பது கிடையாது. ஆழ்ந்த 8 மணி நேர தூக்கம் அவனுக்கு அவசியம். அவன் பழக்கமும் அது தான்.

ஆனால் இந்த ஐந்து நாட்களாய் சரியாக 12 மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது.அதுவும் அன்று நண்பர்கள் ஒன்றாக கூடி அந்த செயலை செய்ததில் இருந்து தான் இந்த மாதிரி நடக்கிறது. அலுவலுகம் சென்று வருவது அன்றாட பணிகளை செய்வது என்று நேரம் சரியாக சென்றாலும், எல்லாம் முதலில் நடந்தது போல ஒழுங்காக நடப்பதை போல் தோன்றினாலும் ஏதோ ஒரு உறுத்தல் மனதின் ஓரம் இருப்பதை உணர்ந்தே இருந்தான்.

"என்ன நடக்கிறது என்னை சுற்றி?"

"எதற்காக எனக்கு இது போல் தோன்றுகிறது?"

"அன்று நான் வேண்டாம் என்று தானே கூறினேன்?"

"அன்று அவர்களை வீட்டுக்கு அழைத்து இருக்க கூடாதோ?"

"ஏன்? ஆனால் அந்த அறுவரில் நான் மட்டும் ஏன்?"

ணி 12:05..

யோசனைகளின் நடுவே அந்தரத்தில் பறந்தது அவன் ஆத்மா.

"ப்ரியன், ஏய் ப்ரியன் என்னடா பண்ற?" மேகனின் குரல் கேட்டு திடுக்கிட்டு விழித்தான் ப்ரியன்.

அவர்களின் அறையிலிருந்து செல்லும் பால்கனியில் தடுப்பு சுவருக்கு அந்த பக்கம் இடது கால் அந்தரத்தில் காற்றில் ஆட, அவன் உடலில் பாதிக்கும் குரவை காற்று வெளியில், வலது காலை இந்த பக்கம் நிலத்தில் ஊன்றி இரு கைகளாலும் தடுப்பு சுவரை பிடித்திருந்தான்..!! அவன் இருந்த நிலை தடுப்பு சுவரின் மேல் குதிரை சவாரி செய்வது போல இருந்தது.

அவன் அருகில் ஓடி வந்த மேகன், அங்கிருந்து கீழே பார்த்தான், 10 அடுக்கு மாடி கட்டிடத்தின் ஒன்பதாவது மாடியில் இவர்கள் இருக்கும் வீடு, உயரம் பயம் காட்டியது. திரும்பி பார்த்தான் ப்ரியன் இன்னும் ஆதிர்ச்சியில் இருந்தான். எப்படி இது நடந்திருக்க முடியும்.

"டேய் என்ன டா? என்ன ஆச்சு?" மேகன் அவனை உலுக்க,

"ஆங்.. மச்சான் தெரியல டா.."

"சரி வந்து படு வா"

"ம்ம்ம்"

"சத்தம் கெடுதுன்னு முழிச்சு பாத்தா இந்த வேலை பண்ணிக்கிட்டு இருக்கான் என்ன ஆச்சோ" என்று புலம்பியவாறு மேகன் நடக்க, ப்ரியன் நின்று பால்கனியை திரும்பி பார்த்தான். இவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு அருகே இவனுக்கு எதிர் திசையில் அந்த உருவம் அமர்ந்திருந்தது. அதாவது இவன் அங்கு அமர்ந்தால் இவனை பார்த்து அது அமர்ந்திருப்பது போல இருக்கும்.

இவனை பார்த்து அது திரும்ப சட்டென கண்களை மூடி கொண்டான். மீண்டும் விழிக்கையில் அங்கு யாரும் இல்லை.

டுத்த இரண்டு நாட்களும், நாள் முழுதும் எல்லாம் ஒழுங்காக நடந்தாலும் 12 மணிக்கு விழிப்பதும் பால்கனி கதவு அருகில் செல்வதும் தொடர்ந்தது. அவன் தான் பால்கனி கதவை மூடி சாவியை மேகனிடம் கொடுத்து வைத்திருந்தான்.அதனால் வெளியே செல்ல முடியவில்லை. அடுத்த வாரம் முழுதும் இது தொடர, மிகுந்த மனஉளைச்சல் தான் மிச்சம் ப்ரியனுக்கு.

இதை பற்றி பேச சரியான ஆள் சந்துரு அன்று நடந்ததுக்கு அவன் தானே முதல் காரணம். அந்த வார இறுதியில் மேகன் அவன் சொந்த ஊருக்கு கிளம்பி விட. அந்த வீடு அவனுக்கு பயத்தை காட்டியது.

வேலைக்கென்று இந்த ஊருக்கு வந்ததில் இருந்து இந்த வீட்டில் தான் தங்கியுள்ளனர் மேகனும், ப்ரியனும். எந்த பிரச்னையும் இந்த மூன்று வருடங்களில் இல்லை. ஆனால் அன்று..?!

நடந்ததை அவன் மனம் அசை போட்டது.

ந்துரு ப்ரியனின் கல்லூரி தோழன் . அவன் ஒரு எழுத்தாளன். காதல், குடும்பம், த்ரில்லர் என நாவல்கள் எழுதி முன்னேறி கொண்டிருக்கும் ஒருவன். அவன் கதைகள் எல்லாம் பெரும்பாலும் உண்மை கதைகளை தழுவி தான் இருக்கும். அதை எழுதுவதில் தான் ஒரு கிக் இருப்பதாக அவன் அடிக்கடி கூறுவதுண்டு.

எதார்த்தம் அது தான் அவனுக்கு மிகவும் பிடித்த அவன் கதைகளில் கையாளும் முறை.அடுத்து அவன் எழுத போகும் கதையின் ஒரு பகுதியை பற்றிய சந்தேகங்களை தீர்க்க தான் அன்று அவனும் அவன் நண்பர்களும் ப்ரியனின் வீட்டிற்கு வந்தனர்.

அவன் எழுதி கொண்டிருக்கும் த்ரில்லர் நாவலில்,பேயான கதாநாயகியுடன் கதாநாயகன் பேச வேண்டும், அதற்கு நண்பர்கள் உதவுவார்கள்.

அதற்காக தேடி அலைந்து 'ஓஜா' பலகையையும் அதை கையாளும் முறைகளையும் கேட்டறிந்து கொண்டு வந்தான். கூடவே நண்பர்களும் வந்தனர்.

ப்ரியன் வேண்டாமென்று கூறியும் கேட்கவில்லை. அவனையும் மேகனையும் அழைத்து கொண்டு தான் சென்றான்.

11:45 என கடிகாரம் காட்ட, அந்த வீட்டின் பால்கனியில் ஓஜா பலகை, மெழுகுவர்த்திகள்,ஒரு நாணயம் என எல்லாம் தயார் நிலையில் இருந்தன.அனைவரும் வட்டமாக அமர்ந்து கைகளை கோர்த்து கொண்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.