ரத்தம் வரணும் கிச்சாமி - ஸ்ரீநிவாஸ்
This is entry #83 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

அது ஒரு சனிக்கிழமை மதியம். சரவணபவனில் மதிய உணவை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினான் கிருஷ்ணசுவாமி, கிச்சாமி என்று செல்லமாக நண்பர்களால் அழைக்கப்படுபவன்..கம்பிக்கதவை தள்ளி திறக்குமுன் கீழே கிடந்த சீட்டை எடுத்தான்
அவனுடைய பெயரும், முகவரியும் அதில் எழுதப்பட்டிருந்தது.அந்த சீட்டின் பின்புறம்
சிவப்பு மையால் ரத்தம் வரணும் கிச்சாமி என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது. அதை யார் எழுதினார்கள்? எதற்காக எழுதினார்கள்? எழுதியன் ஏன் தன் பெயரை எழுதவில்லை? யாருக்கு ரத்தம் வரணும்? எதற்காக ரத்தம் வரணும் என்று பல விடை தெரியாத கேள்விகளோடு வீட்டிற்குள்ளே நுழைந்தவன், சீட்டை முன்னும் பின்னும் புரட்டி பார்த்தவன், சீட்டை எழுதியவன் யாராக இருக்கும் என்ற யோசனையுடன் சாயந்திரம் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டுவிட்டு தூங்கபோனான். அத்தோடு இந்த சீட்டு விஷயத்தை மறந்தே போனான்.
இரவு மணி பத்தரை. சாயங்காலம் அலுவலக வேலை முடித்துவிட்டு, அப்படியே அலுவலக நண்பன் நாராயணன் வீட்டில் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டுக் கொண்டு வீட்டுக்கு திரும்பின கிச்சாமியின் கண்களில் பட்டது மீண்டும் அதேபோல ஒரு சீட்டு. இந்த சீட்டில் “இதழோடு இதழ் வைத்து” என்று இருந்தது. முதல் சீட்டில் இருந்த முகவரியும், இந்த சீட்டில் இருந்த முகவரியும் அவனுடையதுதான். ஆனால் தபால் அலுவலக முத்திரை எதுவும் அந்த இரண்டிலுமே இருக்கவில்லை. அப்படியானால் யாரோ வேண்டும் என்றே போட்டுசெல்கிறார்கள் போல இருக்கிறதே. முதலில் ரத்தம் வரணும் கிச்சாமி என்று வந்தது, இப்போ என்னடாவென்றால் இதழோடு இதழ் வைத்து” என்று வந்திருக்கு. இதை காலையில் நிச்சயம் கவனிக்க வேண்டும் என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டு ஒரு பத்து நிமிடம் நெட்டில்மேய்ந்துவிட்டு உறங்கிப்போனான் கிச்சாமி.
ஞாயிற்றுக்கிழமை காலையில் எட்டு மணிக்கு சொம்பலோடு எழுந்த கிச்சாமி பல் துலக்கிவிட்டு, பால் பாக்கெட்டை எடுப்பதற்காக கதவைத் திறந்தபோது இன்னொரு சீட்டு கிடப்பதை பார்த்து அதைக்கய்யில் எடுத்தபோது, அதில் “நீ கொடுக்கும் முத்தத்தினால்” என்று இருந்தது. பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு அவசரமாக டைனிங் டேபிளுக்கு வந்து மூன்று சீட்டையும் ஒண்ணாக வைதுபார்த்தான். அது இப்படி வந்தது :
இதழோடு இதழ் வைத்து
நீ கொடுக்கும் முத்தத்தினால்
ரத்தம் வரணும் கிச்சாமி
ஓ! புரிந்தது கிச்சாமிக்கு. கள்ளி. காயத்ரி வந்திருக்கிறாள். அவள்தான் இதைசெயதவளா? என்று காதலியை பார்க்க கிளம்பினான் கிச்சாமி.
This is entry #83 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.