(Reading time: 11 - 22 minutes)

என் வாழ்வின் அர்த்தம் நீயடி - ராஜி

This is entry #84 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

family

ம்மா

அம்மா.......!

ஏன்டி காலைலயே இப்டி கத்துர ‌

அம்மா டைம் ஆச்சு மா. பிளீஸ் கொஞ்சம் சீக்கிரம் லன்ஞ்ச் பேக் பண்ணித்தாங்களேன்

ஏன் என்ன டைம் ஆச்சு கரெக்ட் டைம்க்கு தானே கிளம்பிட்டு இருக்க

இல்லமா இன்னைக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு அதான் சீக்கிரம் கிளம்புரேன் நீங்க லஞ்ச் மட்டும் குய்க்க பாக் பானுங்க பிளீஸ் என்று மீண்டும் தன் அம்மாவிடம் கெஞ்ச ஆரம்பித்தாள் மேகவதி 

முதல நீ போற டைம்க்கு ஸ்கூல் திறந்து இருக்குமானு யோசிச்சு பாத்தியா என்று தன் மகளிடம் குறும்புடன் கேட்டார் அவள் அன்னை

ஓபன் ஆகாட்டியும் நான் காம்பவுண்ட் வால்ல ஜம்ப் பண்ணி போவேனாக்கும்

அடிப்பாவி.......

ஹி ஹி .... சும்மா சொன்னேமா      

நானும் நிவியும் சேந்துதான் ஸ்கூல் போறோம் அதேல்லாம் ஓபன் பண்ணி இருப்பாங்க நீங்க ஃபர்ஸ்ட் சீக்கிரம் லஞ்ச் தாங்க செல்விம்மா

சரி சரி நான் பேக் பண்றேன் நீ அதுக்குள்ள பிரேக் பாஸ்ட பஸ்ட்டா மூடுச்சுடுடா பொம்மு

அம்மா.......!

ஏன்டி மறுபடியும் கத்துர அதான் லஞ்ச் பேக் பண்றேன்ல

என்ன  ‌பொம்மு பொம்முனு கூப்டாதீங்க மா பிளீஸ் - சினுங்கினாள் மகள்

ஓகே  ஓகே பாக்கலாம் நீ சாப்டியா என்று பேச்சை திசை திருப்ப முயன்றார் செல்வி

ம்ம்ம்ம்...... சப்ட்டுட்டேன்

அப்ப கிளம்பு இந்த உன் லஞ்ச் பாக்ஸ் 

தாங்க்ஸ் மா

பாத்து போடா டிராஃப்பிக்லா கொஞ்சம் மெதுவா போ

ஓகே மா பை... என்று தன் தாயின் கன்னத்தில் இதழ் பதித்து தன் சைக்கிளில் தனது பள்ளியை நோக்கி புறப்பட்டாள் மேகா

மேகா பணிரெண்டாம் வகுப்பு மாணவி வீட்டுக்கு ஒரே பிள்ளை தனது அம்மா அப்பாவின் செல்ல மகள்

தனது தோழி நிவேதியுடன் பள்ளியை அடைந்த மேகா, நிவி உதவியுடன் தனது பாட்டனி ரேக்காட் முடிக்கும் வேலையில் மும்மரமானாள்

மேகாவின் நோட் அவள் வீடு மாறும்பொழுது  தொலைந்து போய்விட்டது  அவள் ரேக்காட் வொர்க் முடிக்க வாங்கிய எக்ஸ்ட்ரா டைம்மும் இன்றுடன் முடிகிறது இன்று இவள் நோட் சப்ம்மிட் பண்ணவில்லையேனில் அவளின் தாவரவியல் ஆசிரியை தமிழிடம் அவளுக்கும் சரியான பூஜை உண்டு என்பது யாரும் சொல்லாமலே அவள் உணர்ந்த ஒன்று

நேரம் செல்ல  செல்ல மாணவர்களின் வருகை அதிகரித்தது சிறிது நேரத்தில் பள்ளியும் தொடங்கிவிட்டது

அன்று மேகாவின் துரதிஷ்டமோ என்னவோ அவளுக்கு பாட்டனி பீரியட் முதல் பீரியடாய் அமைந்து விட்டது

மேகா எவ்வளவு முயன்றும் அவளால் நோட் கம்ப்ளீட் பண்ண முடியவில்லை

பழனி மலை முருகா என்ன எப்படியாவது இன்னைக்கு புலிட்ட இருந்து காப்பாத்து நான் நிவிக்கு மொட்ட ‌போடுறேன்

அடியே.................... - நிவி

என்ன செல்லம்?

என்ன நோன்ன செல்லம், நீ வேண்டுதல் வைக்க என் தல தான் கிடச்சுச்சா சம்பிஸ்தானுடி

எனக்காக உயிர கூட குடுப்பேன்னு சொல்வியே  ஆஃப்டர் அல் இத தர மாட்டிய நிவி என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டால் மேகா

மாட்டேன்டி

வொய் டி வொய்

உன் வேண்டுதல நிறைவேத்துன எங்க அம்மா என்ன வீட்ட விட்டு துரத்தி விட்டுடுவாங்க

பரவால நீ எங்க வீட்டுக்கு வந்துடு என்று கூறும் பொழுதே நீவியின் கோவப்பார்வைக்கு ஆளானல் மேகா

ஏன்‌டி இந்த ரண களதுலயும் உனக்கு குதூகலம் கேக்குதா  நோட் கம்ப்ளீட் பண்ணிடியா

இல்லடி இன்னும் டூ எக்ஸ்பெரிமெண்ட் இருக்கு

இவ்ளோ கூல்லா வாயடிக்குற டைம்ல எதாதும் ஃபில் பண்ணலாம்லா

உனக்கு தைரியாதா எருமா லாஸ்ட் டூ எக்ஸ்பெரிமெண்ட் ரொம்ப பேருசுடி இந்த ஃபைவ் மினிட்ஸ்ல ஒண்ணும் பண்ண முடியாது எழுதி எழுதி கை வலிக்குது அதான் ரெஸ்ட் எடுக்குறேன்

‌ம்....... அப்ப என்ன பண்ணப்போற 

மேம் நாளைக்கு தானே பிரின்சிபால்ட ஸைன் வங்கப்போரேனு சொன்னாங்க சோ டுடே எக்ஸ்க்யூஸ் கேட்டுட்டு  நாளைக்கு சப்மிட் பண்றேனு பர்மிஷன் கேட்டு பாக்கணும் ஓத்துக்கிட்டா ஓகே இல்லைனா என்ன பண்ணனு தெரிலடா  மே பி புலிக்கு இன்னைக்கு நான் தான் பலி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.