(Reading time: 11 - 22 minutes)

மாலை ஆறு மணி அளவில் வீட்டை அடைந்த மேகா அம்மாவை காலை வேக படுத்தி வாங்கிய உணவை  அப்படியே கொண்டு வந்து அம்மாவின் கண் முன்னே  அடுப்படி சிங்க்கில் போட்டாள்   

ஹே பொம்மு என்னாச்சுடா சாப்புடலயா

ஒரு வேல சாப்புடாடி ஒண்ணும் குரஞ்சுபோய்டமாட்டேன்

என்னடா என்னாச்சு ஏன் இவ்ளோ கோவம் என் பொம்முக்கு............ அம்மா தோசை ஊத்தி தரவா

ஒண்ணும் வேனம் ஃபர்ஸ்ட் என்ன பொம்முனு கூப்பிட்ட்ரத நிறுதுங்க சும்மா எப்ப பாரு அப்படியே கூப்பிட்டு எருச்சால் படுத்துறது...... எனக்கு பசிச்சா எனக்கு சாப்பிடதெரியும் நா ஆப்பிள் கட் பண்ணி சாப்டுகிறேன் என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள் அவரின் பொம்மு

எல்லா கோவத்தையும் தன் அன்னை மேல் காட்டிவிட்டு வந்து படுத்தவளுக்கு பசி வைத்தை கிள்ளியது

சிறிது நேரம் களித்து அவள் அறைக்குள் வந்தார் அவளின் அப்பா ராஜநாதன் சி‌பி‌ஐ ஆபிசர்

வந்தவ்ர் வதுக்கு என்ன கோவம் என்று அவளின் வலது பக்கம் அமர்ந்து அவளின் கேசத்தை வருட ஆரம்பித்தார்

அதுவரை இருந்த கோவங்கள் எல்லாம் மறைய அவரின் மடியை நாடினாள் மகள்

ஒண்ணும் இல்லப்பா ஏதோ டென்ஷன்

அது தான் என்ன

நத்திங் பா

பொய்

ஒண்ணும் இல்லப்பா

என் வதுவ டென்ஷன் செஞ்சது யாருனு சொல்லுடா செஞ்சுடுவோம்...........

ஹா...... ஹா

வது சிரிச்சாச்சு இப்ப சொல்லு என்ன டென்ஷன்

அதற்க்கு மேல் முடியாமல் பள்ளியில் நடந்த அனைத்தையும் ஓப்பித்தல் தந்தையிடம்

சரி விடுடா அதான் பிரோப்ளம் சொல்வேட்ல அதயே நினைக்காத பாஸ்ட் இஸ் பாஸ்ட் போய் ரெப்ர்ஷ் பண்ணிட்டு வா டின்னர்க்கு வெளிய போலாம்

ம்‌ம்‌ம்.. ஓகே பா என்று முகம் கழுவி வந்தவளை எதிர்க்க்கொண்டார் அம்மா சுட சுட அவளுக்கு பிடித்த பூரி கிழங்குடன் ‌‌

அவளை பார்த்து புன்னகித்தவர் அவள் அருகில் வந்து அமர்ந்தார்

சாரி செல்லம்

.............

சாரி டா

.................

சாரி மா

............

அம்மா பாவம்ல நிஜமாவே சாரி டா என்று சிறு குழந்தை போல் காதை பிடித்து மன்னிப்பு கேட்பவரை எந்த பிள்ளையால் மன்னிக்காமல் இருக்க முடியும்

அதற்க்கும் மேல் பொறுக்காது "ஒண்ணும் வேனம் போங்க "என்று தன் தாய் தன் தமிழ்ச்செல்வி தோளில் சாய்ந்து கொண்டாள் மேகவதி  

ஆம் தமிழ்ச்செல்வி அவளின் தாவரவியல் ஆசிரியை அவர் தான்  அவளின் அன்னை என வேவ்வேறு பரிமாணங்களை கொண்டு என்றுமே அவளின் வாழ்க்கைகக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்பவர் தான் அவளின் செல்விம்மா பள்ளியில் யாருக்கும் இவர்கள் உறவு தெரியாது மேகாவின் தோழி என்பதால் நிவிக்கு மட்டும் தெரியும் 

ஏன்மா இப்படி பண்ணிங்க நான் தான் எக்ஸ்க்யூஸ் கேட்டேன்ள அதுவும் ஈவினிங் சப்மிட் பண்றேனு தானே சொனேன் அப்பறம் ஏன்மா பனிஷ் பண்ணிங்க

நான் தான் உனக்கு எக்ஸ்ட்ரா டைம் குடுதேன்ல நேத்து உன் இந்து சித்திட்ட ஒன்  ஹவர்ஸ் ஸ்கைப் கால் பேசி அப்பறம் தூக்கம் வருதுணு தூங்கிட்டு  நான் குடுத்த டைம்ம  நீ வேஸ்ட் பண்ணிட்ட இப்ப வந்து என் மேலா கோவபடுற இதுலாம் ஓவர் பொம்மு

போங்கமா........... நம்ம பொண்ணு பாவமே கொஞ்சம் லைட்டா திட்டிட்டு விட்டுருவோம்னதும் தோணுச்சா உங்களுக்கு என் நோட் தொலஞ்சு போனதுக்கு ரிசனே நீங்க ரெண்டு பெரும் தான் என்று தான் தந்தையையும் சேர்த்து சொன்னாள்

அடிப்பாவி நீங்கனு என்னையும் ஏன்டி ஜாயின் பண்ற உன் நோடெக்கு ஃபுல் ரீஸன் உன் அப்பா தான்

ராஜநாதனின் பணி நிமிர்த்தமாக அவரின் அலுவலகம் பக்கத்தில் வீடு மாற்றினார். அதனால் வீட்டில் இருக்கும் வேஸ்ட் பேப்பர் புக்ஸ் என எல்லாம் பழைய பேப்பர்கரரிடம் போட்டவர் இவள் வீட்டு ஷோபா டேபிள் மேல் வைத்து விட்டு போன நோட்டயும் சேர்த்து போட்டு விட்டார் விஷயம் தெரிந்து தைய தக்கா என குதித்த மகளை கெஞ்சி கூத்தாடி சமாதானபடுத்தினார் மேலும் அந்த பேப்பர்கரரை வலை வீசி தேடினார் அவரின் கெட்ட நேரம் அந்த பேப்பர்காரர்  சிக்கவில்லை அதன்பிறகு அவள் அவளின் ஆசிரியை அன்னையிடம் பர்மிஷன் கேட்டு பனிஷாகி இதோ இன்று வெற்றிகரமாக ஸைன் வாங்கிவிட்டாள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.