(Reading time: 7 - 14 minutes)

என்னமோ நடக்குது - ஜான்சி

This is entry #91 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

funny ghost

ரவின் நிறம் சுற்றிலும் விரவி நிற்க , அடர்ந்த வனத்தின் அருகாமையில் அமைந்திருந்த அந்த காவலர் குடியிருப்பைச் சுற்றியிருந்த மரங்களெல்லாம் குளிர்ந்தக் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தது. தேய்பிறை நிலவும் அமாவாசைக்கு மூன்றே நாள் இருக்கின்றது என நினைவுப் படுத்திக் கொண்டிருந்தது.

 அந்தக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியின் இடது ஓரத்தில் அமைந்துள்ள அபார்ட்மெண்டினுள் இப்போது என்ன நடைப்பெறுகின்றது என்றுப் பார்ப்போமா?.

 கதவைத்தாண்டி உள்ளே நுழைந்து ஹாலைக் கடந்துச் சென்றால் முதல் பெட்ரூமில் 10 வயது ஷாம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். இரண்டாவது ரூமில் அந்தக் குடும்பத்தின் தலைவி பபிதா காலை முதல் இரவு வரைச் செய்த வேலைகளின் அலுப்பில் தூக்கத்தில் சற்றுப் புரண்டுப் படுக்கிறார்.....இனி..   

  கணவன் காவலன் தான் இருந்தாலும் கணவன் வீட்டில் இல்லாமல் இரவுப் பணிக்கு செல்லும் நேரங்களில் அவள் தானே குடும்பத்தின் காவலி.... இயல்புக்கு மாறான சர் சர் எனும் ஒலி கேட்க தூக்கத்திலும் விழிப்பு வருகிறது அவளுக்கு...எதிரில் கண்டதை நம்பவும் இயலாமல் குரல் எழுப்பத் தோன்றாமல் வாய் பிளந்தவாறே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.   

 அங்கே...........இருட்டில் ஒரு உருவம் இடுப்பளவே உயரத்தில் தலைமுடி விரிந்துக் கிடக்க கையில் ஏதோ ஒன்றைப் பிடித்து தரையோடு தரையாகப் பிடித்தவாறு இழுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.

ஐயோக் கடவுளே... என்னைப் பார்த்தா வருது... இப்போ சரண் கூட இல்லையே ஐயோ என்ன செய்யலாம்? இது என்னை விடாதுப் போலயிருக்கே .... மிரண்டவளாகப் பார்த்துக் கொண்டு உறைந்து எழுந்து அமர்ந்திருக்க...

ம்மா, அம்மா என்னும் குரல் கேட்டு உணர்விற்கு வந்தாள்..

அவளின் மகள் ஸ்வப்னாதான் அவளை உலுக்கிக் கொண்டு இருந்தாள். 

"ஏண்டி, தூங்கப் போகுமுன்னே ரெட்டைச் சடைப் போட்டு விட்டேனே...இதென்ன தலையை விரிச்சிப் போட்டுக்கிட்டு"... (தூக்கக் கலக்கத்தில உன்னைப் பேயின்னு நினைத்தேன்னு சொல்லவா முடியும், சரியான அப்பா கோண்டு, சொல்லிக் கொடுத்திட்டான்னா. பிறகு சரண் கிட்ட யாரு பேச்சு வாங்குறது)என்று மனதில் நினைத்துக் கொண்டவளாய் கூற,

"போம்மா நான் தான் அவிழ்த்திட்டேன்...சும்மாயிரும்மா இப்போ நான் சொல்லுறதக் கேளு"..

என்றவளின் பேச்சைக் கேட்டவாறு அந்த சர்ரென சப்தம் எழுப்பியது எது என்று அறிந்துக் கொள்ள அவள் கையில் என்ன இருக்கிறது என்றுப் பார்த்தாள். தன்னுடைய டெடி பியரைத் தரையோடு தரையாக இழுத்துக் கொண்டு வந்து இருக்கிறாள் போல...மானசீகமாக தன்னை நொந்துக் கொண்டு

"ஏண்டி தூங்குறவள தூங்கவும் விடாம ,காலையில பேச வேண்டியது தான.. அப்படி உனக்கு என்ன சொல்லணும இப்ப?.."

"அம்மா கதவுக்கு அந்தப் பக்கம் பேய் இருக்கும்மா"....

எ...ன்..ன......து .......ஏற்கெனவே பயத்தில் இருந்த பபிதாவால் குரலை உயர்த்தாமல் இருக்க முடியவில்லை.

ஏம்மா, சும்மாயிரும்மா நீங்க கத்துறதுல எனக்கே பயமா இருக்குது... பயந்து உங்க கிட்ட படுக்கலான்னு வந்தா... நீங்களும் கத்தினா எப்படி..... 8 வயது ஸ்வப்னா அம்மாவின் படுக்கையில் தனக்கும் தன் டெடிக்கும் இடத்தை ஒதுக்கினாள்.

"என்னடி பேயின்னு சொல்ற கூலா என் பக்கத்தில வந்து படுக்கிற ..எங்க இருக்குப் பேயி ..எப்ப பார்த்த நீ" காஞ்சனா , முனின்னு ஒரு படமும் விடாமல் பார்த்த எஃபெக்ட் அவள் குரலில் தெரிந்தது.

 அம்மா அண்ணா பக்கத்தில எப்பவும் போல படுத்து இருந்தேனா , அண்ணா சீக்கிரமா தூங்கிட்டான். அப்போ கதவையே பார்த்துக் கிட்டு இருந்தேனா......

 (மவளே அப்பாக்கு தப்பாம பிறந்துருக்க, எப்ப பாரு எதையும்கண்காணிக்கிற வேலை) மைண்ட் வாய்ஸ் , மைன்ட் வாய்ஸ்.

அப்போ கதவுக்கு அந்தப் புறத்தில வெளிச்சம் வர்றதும் போறதுமா இருந்துச்சு.கதவு லாக் செய்திருக்கான்னு கிட்ட போயி பார்த்தேனா..

( நல்ல வேளை கதவை திறக்கல நீ)

கதவை திறக்கலாமான்னு கூட யோசிச்சேன்மா ..

(அடப் பாவி)

ஆனா ஹைட் எட்டல....

(அந்த கார்பெண்டருக்கு ஒரு தேங்க் யூ சொல்லணுமே)

சரி சரிப் படுத்து தூங்கு..

அதே நேரம் கதவு இடிப் பட்ட சத்தம் கேட்க தூங்க சென்ற சின்ன & பெரிய டிடெக்டிவ்ஸ் இரண்டு பேரும் அட்டென்ஷனில் எழுந்தார்கள்.

வாங்கம்மா.. இது பெரிய டிடெக்டிவ், ஸ்வப்னாக்கு முன்னால பபிதா எல்லாம் ஜீஜீபி இல்ல..

ம்ம் சரி.. இப்போ பேசியது ஜீனியர் டிடெக்டிவ் பபிதா தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.