(Reading time: 7 - 14 minutes)

டொய்ங்க் டொடய்ங்க், டொடய்ங்க் டொடய்ங்க், டொய்ங்க் டொடய்ங்க் டொடய்ங்க் ம்யூசிக் பேக்ரவுண்டில் ஒலிக்க அம்மாவும் மகளும் தரையில் மெது மெதுவாக பாதம் பதித்து சென்றார்கள்.

அம்மா ஸ்ஸ்.... வாயில் கை வைத்து அமைதியாக இருக்கச் சொன்னவள். கிசு கிசுப்பாக..

அம்மா இப்போ ஒருத்தரையும் காணலை... பேயை அதுக்கு தெரியாம தான் காட்ச் செய்யணும். அதனால இனிமே சத்தம் வர்ற வரைக்கும் நாம ரெண்டு பேரும் இங்க கதவுக்கு கிட்டயே காத்து நிற்போம் சரியா..

சரி சரி...

பேய் வந்ததும் சட்டுன்னு கதவைத் திறந்து பட்டுன்னு பிடிச்சிடலாம்.......

(பேயை பிடிச்சி என்ன செய்றது, அதுக்கு வேற தினம் பின்னே வித விதமா பொங்கிப் போடணுமா...?) புரியாத தோரணையில் கேள்விக் கேட்க வாயைத் திறக்க வந்த அம்மாவை வடிவேலுவைப் போல கையை குவித்து வாயில் வைத்துக் காட்டி மூடச் சொன்னாள்... கூடவே ஸ்ஸ்ஸ்........எச்சரிப்போடு இருவரும் கதவின் அருகிலேயே தஞ்சமாக, கதவில் காதைப் பதித்து காதே வலிக்க ஆரம்பித்து விட்டது. எப்போ கண் அசந்தாளோ தெரியவில்லை.

 டோர்பெல் சத்தத்தில் அதிர்ந்து எழுந்தாள். இந்தக் குட்டிப் பிசாசை எங்கக் காணவில்லை தேடிக் கொண்டு கதவைத் திறந்து கணவனுக்கு வழி விட்டாள்.சரி இனி அவர் பார்த்துக்குவார் என்று எண்ணியவளாய் படுக்கைக்குச் சென்றால் கதவின் அருகில் தாயை படுக்க விட்டு விட்டு கட்டிலில் டெடிக்கும் , தனக்குமாய் இடத்தைப் பிடித்துக் கொண்டு கை கால்களை விரித்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

 அடடே குட்டி இங்கயே தூங்கிட்டாளா? சொல்லியவாறு கூடவே சரணும் மீதி இடத்தைப் பிடிக்க.. இன்னிக்கு தூங்கின மாதிரி தான் நொந்தவாறு மகன் இருக்கும் அறையை நோக்கிச் சென்றாள்.

 திகாலையில் பால்காரர் வந்து கதவைத் தட்டவும், வழக்கமாய் பால் பாக்கெட் வாங்கி திரும்பியவள் அவர் ஏதோ சொல்ல நினைப்பதைப் பார்த்து விசாரிக்க,

 நான் கொஞ்ச நாளா இங்க யாரோ நடமாடிட்டு இருக்கிறத பார்த்தேன். நான் வரும் போது உங்க வாசலில இருந்து ஓடிப் போற மாதிரிச் சத்தம் கேட்டது என்றுச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

என்னடா இது ஒரே மர்மமா இருக்கு ... இந்த மனுஷன் பேய்னு சொன்னா நம்பவும் மாட்டாரு. சும்மவே நம்மள முட்டாளுன்னு நினைச்சு வச்சிருக்குதுங்க என்று எண்ணியவாறு உள்ளே வந்தாள்.

 என்னடா இது அதிசயமா இருக்கு ஷ்யாம் என்னடா இன்னிக்கு சீக்கிரமா எழுந்திட்ட..

அம்மா வார்(War) மா இந்த டைமுக்கு தான் இருந்தது அதான்..

என்னது வாரா..

என்னம்மா உனக்கு ஒண்ணும் புரிய் மாட்டேங்குது

க்ளாஷ் ஒஃப் க்ளான்ஸ் விளையாடிட்டு இருக்கேன்.. நீங்க டிஸ்டர்ப் செய்யாதங்கம்மா..கான்ஸண்ட்ரேஷன் போயிடும். நான் தோத்துப் போயிடப் போறேன்.

ஏண்டா நீயுமாடா... சலித்துக் கொண்டு தன் வேலைகளில் ஈடுபட்டவாறே தன் கதவருகே நடமாடுவது யாராக இருக்கும் என்றுச் சிந்தித்துக் கொண்டு இருந்தாள். குப்பையை எடுக்க வருபவருக்கு கொடுக்க குப்பைக் கூடையை கையில் பிடித்தவாறே சிந்தனையில் கதவைத் திறக்க, எதிரில்...........

ஆஆஆஆ...... என கத்துவதற்கு முன்

ஆண்டி ஆண்டி நான் தான் எனப் பதறினான் பக்கத்து வீட்டு பிரபு.

என்னடா இது என்ன செய்யுற நீ?

ஆண்டி அது எனச் சொல்லும் முன்னே உள்ளிருந்து ஷ்யாமின் குரல்,

வாங்க பிரபுண்ணா , நாம இந்த தடவ ஜெயித்துடுவோல்ல..

யெஸ், யெஸ் என குதுகலித்தவனைப் பார்த்து 

ஏண்டா பிரபு இந்த வருஷம் 12த் படிக்கிற நீ இவன் கூடச் சேர்ந்து விளையாடினா எப்படி என்க,

போம்மா பிரபுன்னா தான் எங்க லீடர் தெரியுமா, அவங்க கஷ்டப் பட்டுக் கொடுக்கிற ஸ்ட்ராடஜில தான் நாங்க ஜெயிக்கிறோம் தெரியும்ல..அவங்க வீட்டில வைஃபை(Wifi) கூட ஒன் வீக்கா வேலைச் செய்யல, நாந்தான் நம்ம பாஸ்வர்ட் கொடுத்திருக்கேன் தெரியுமா? எவ்வளவு கஷ்டப் பட்டு செய்யுறத இப்ப்டிச் சொல்லிட்ட... போமா உங்களுக்கு ஒண்ணும் தெரியல..

அப்போ நீயா அது? ஏன் பிரபு கதவுக்கு பக்கத்தில ராத்திரி, அதி காலைல நடமாடுனது நீயா? என்னடா இது இப்படி பயமுறுத்திட்ட...

ஹி ஹி ஆண்டி அது கதவு கிட்ட தான் ஒழுங்கா நெட் கனெக்ட் ஆச்சுதா அது தான்.

பாஸ்வர்டா கொடுக்கிற மகனே உன்னைப் பார்த்துகிறேன்.. முறு முறுத்தபடிச் சென்றாள் பபிதா..

This is entry #91 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.