(Reading time: 14 - 27 minutes)

தீ - சாணக்யசித்தார்த்தன்

This is entry #90 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

fire

பெட்ரோல் பங்க்.

சாப்பாட்டு கடை.

ஒயின்ஸ் ஷாப்.

என்று ஒரு பேப்பரில் எழுதி விட்டு, பேனாவால் பேப்பரைகுத்திக் கொண்டே யோசித்தேன்.

எழுந்து வந்து பால்கனியில் நின்றேன். ஆட்கள் நடமாட்டத்தை பார்த்தால், 10 மணி போல் இருந்தது. ஆனால் மணி 8 தான் ஆனது. இதுக்கு முன்னாடி மாதிரி இன்றைக்கு இ்ருக்காது. கடை நம்மளுக்கு புதுசு. வீடு மாதிரி சாதரணமா இத நெனைக்க கூடாதுன்னு என்ன நானே தயார்படுத்தினேன். வெளியே வந்து, என்னோட யமகா ஆர்.எக்ஸ் 100 பைக்கை ஸ்டார்ட் பண்ணேன்.

"டே ரவி" என்று பழக்கப்பட்ட குரல்.

"சொல்லுடா சதீஷ்"

"மச்சா, முக்கியமான வேல. வெள்ளிகெழம ஒரு வீட்ல வெள்ளையடிக்க போறோம். ப்ளானே தேவயில்ல. எல்லாரும் வெக்கேசன்ல போய்ருவாங்க. நம்ம வில்லாபுரம்ல பண்ணோம்ல அதே மாதிரி தான். சேகர் சொன்னாப்ல, இந்த தடவ உனக்கு 40%, எனக்கும், சேகருக்கும் சேத்து 60%. நாம கண்டிப்பா பண்றோம்."

"சரி, நான் நாளைக்கு காலைல போய் சேகர பாக்குறேன்" என்று என் பைக்க எடுத்துட்டு ஒயின்ஸ் ஷாப்க்கு போனேன். நான் வழக்கமா வாங்குறத வாங்கிட்டு, அங்க இருந்து, சாப்பாடு கடைக்குப் போய் புரோட்டா வாங்கிட்டு, பெட்ரோல் பங்க் ல பெட்ரோல் போட்டு என்னோட வீட்டுக்கு வந்தேன்.

நான் எழுதியிருந்த பேப்பரை எடுத்தேன். அதுல  சாப்பாடு கடையையும், பெட்ரோல் பங்க்கையும் அடிச்சுட்டு, ஒயின்ஸ் ஷாப்ப மட்டும் வட்டம் போட்டு கிட்டே யோசித்தேன். மணிய பாத்தேன். இன்னும் அர மணி நேரத்துல ஒயின்ஸ் ஷாப்ப மூடிருவான். கீரத்துறை ஏரியாக்கு தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன்ல இருந்துதான் ரோந்து வருவாங்கனு எனக்கு தெரியும். அதுனால, என்னோட போனை எடுத்து, நரேஷ்க்கு டயல் பண்ணேன்.

"ஹலோ, நரேஷ்"

"அண்ணே, சொல்லுங்கணே"

"உடனே என்னோட வீட்டுக்கு வா" என்று போனை கட் பண்ணினேன்.

இது, கரெட்டான டைம் தானா, இல்ல  அவசரப்படுரோமா, ஒரு வாரம் தான் மானிட்டர் பண்ணிருக்கோம். வீடுனா மானிட்டரே பண்ணமாட்டோமே, அதுவும் சரி, இதுவும் சரி ஆள் இருக்கமாட்டாங்க என்று, ஒயின்ஸ் ஷாப்பில் வாங்கியதை ஒரு க்ளாஸில் ஊத்தி டேபிள் மேல வச்சிட்டு யோசித்தேன். எதோ ஒரு தைரியத்துல, என்னோட பேக்ல தேவையானதை எடுத்துவைத்தேன்.

"டிங்க் டிங்க்."

"வா நரேஷ், உக்காரு, ஒரு மானிட்டர் வேல, பெரிய தலக்கட்டு, பி.டி.ஆர் தெரியும்ல. அவர் வீடு தான். பிசிரு தட்டக்கூடாது. நீ தெற்குவாசல் போலீஸ் ஸ்டேஷன்ல போலீஸ் ரவுண்ட்ஸ் கெளம்புறப்ப என்ட சொல்லனும். அவ்ளோ தான்."

"பூட்டுல இருந்து, நோட்டம் விடுற தொழிலுக்கு மாறிடீங்களா? அவர மானிட்டர் பண்ணி என்னணே பண்ண போறோம். எனக்கு ஒன்னும் புரியலணே"

"நீ மொதல்ல நான் வாங்கி வச்சுருக்குறத குடி, அப்பதான் நீ தெளிவா இருப்ப"

"என்ன சரக்குணே"

"டேய், இங்க பாரு, மேட்டர் பல கை மாறி நம்மட்ட வந்துருக்கு, பி.டி.ஆர் கேம்ளிங் பண்றாரு, அத நாம போட்டோ எடுத்து குடுக்கனும். அவ்ளோ தான். ஸ்டேஷன்ல இருந்து போலீஸ் கெளம்புனதும் நீ எனக்கு போன் பண்ணு. ஓ.கே. வா"

“ம்ம்ஹிம்”

நான் வெயிட் பண்ணிட்டு இருந்த டைம் வந்துச்சு. நரேஷ் அர போதைல இருந்தான். அதான் எனக்கும் நல்லது. அவன தெற்குவாசல்ல எறக்கி விட்டுட்டு நான் கீரத்துறை ஒயின்ஸ் ஷாப்க்கு வந்தேன். என்னோட போன எடுத்து நரேஷ்க்கு கால் பண்ணேன்.

"நரேஷ் பத்தரமாதான இருக்க"

"ஆட்டா ஸ்டான்ல, ஒரு ஆட்டோல உக்காந்து பாத்துட்டு இருக்கேன்ணே"

"தூங்கிறாத. போலீஸ் கெளம்புனதும் எனக்கு கால் பண்ணு, வேலை முடிஞ்சதும் நான் வந்து உன்ன கூப்டுபோறேன்"னு போன கட் பண்ணினேன்

யங்கர இருட்டு, ஆள் நடமாட்டமே இல்ல, ஒயின்ஸ் ஷாப் ஷட்டர் போட்டு பூட்டியிருந்தது. பார் பின்பக்கமா வந்தேன். சின்னதா க்ரில் கேட். அதோட பூட்ட தெறந்தேன். உள்ள ஒரே இருட்டு. டார்ச் லைட் அடிச்சு பாத்தேன். உள்ள இருக்குற எல்லா டேபிள்லயும் ப்ளாஸ்டிக் கப், சிந்தி இ்ருந்த சாராயம், ஊறுகா னு கன்றாவியா இருந்தது.

சாராய வாட பயங்கரமா அடிச்சது. ஒயின்ஸ் ஷாப் கதவ தெறந்தேன். ஒரு சிங்கம் படுத்து இருந்தது,  பாத்ததும் பயந்து போய், அலறிட்டு பின்னாடி போய் இடிச்சு கீழ விழுந்தேன். டார்ச் லைட் கார் வைப்பர் மாதிரி போய்ட்டு போய்ட்டு வந்தது. வெளிச்சம் படும் போது தான் நல்லா பாத்தேன். அது சிங்கம் இல்ல, ஒருத்தன் மஞ்ச கலர் சட்ட போட்டு படுத்து கெடந்தான். செத்துட்டானா?, இல்ல போதைல படுத்துருக்கானா? னு தெரியல. அவனோட முகத்துல லைட் அடிச்சு பாத்தேன் , அப்பயும் அவன் அப்டியே தான் இருந்தான். அவனுக்கு பக்கத்துல, எதோ தெரிஞ்சது. லைட் அடிச்சு பாத்தேன்.  நான் மானிட்டர் பண்ணது கரெக்ட்தான், சேப்ட்டி லாக்கர் அங்க தான் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.