(Reading time: 14 - 27 minutes)

கீழ கெடந்தவனோட வயித்த பாத்தேன். அவன் மூச்சு விடுறது தெரிஞ்சது. முகத்துகிட்ட வாந்தியா இருந்தது. போதைல தான் இருக்கான்னு தெரிஞ்சுகிட்டேன். ஆனாலும் பயம் போகல. அந்த இடமே ரொம்ப அமைதியா இருந்துச்சு. மெதுவா சத்தமே கேக்காம, அவன தாண்டி லாக்கர் கிட்ட போனேன். 5*2 அடி இருந்தது. நம்பர் லாக் வேற.

மெதுவா என்னோட பேக்க கீழ வச்சேன். டார்ச் லைட்ட லாக்கர்ல அடிக்கிற மாதிரி வச்சேன். இதயம் ரொம்ப வேகமா துடிச்சது. என்னோட இதயதுடிப்பு எனக்கு நல்லா கேட்டுச்சு. மூச்ச நல்லா இழுத்து விட்டேன். காத லாக்கர்ல வச்சு, ஒரு கையால நம்பர சுத்திகிட்டே கேட்டேன். எப்டியும் லாக்கர் டோர் 5 இன்ச் திக்னஸ் இருக்கும்னு தெரிஞ்சது. பேக்ல இருந்து டூல்ஸ்ஸ தேடுனேன்.

திடீர்னு ஷாக் அடுச்ச மாதிரி இருந்தது. சட்ட பாக்கெட்ல இருந்து போன எடுத்தேன். நரேஷ் கால் வந்தது. கை நடுங்கியது. இலேசா வேர்க்க ஆரம்பிச்சது. மூச்சுகாத்து பயங்கரமா இருந்தது. கால அட்டன் பண்ணி காதுல வச்சேன். உதடு பேச துடிச்சது, பேச்சும் வர. பயத்துல கண்விழி ஆடிட்டே இருந்தது. ஆனா அந்த இருட்டுல ஒன்னுமே தெரியல.

ரொம்ப அமைதியா "சொல்லுடா"னு என்றேன். நான் பேசுறத விட, அவனோட வாய்ஸ் போன்ல சத்தமா கேட்டது.

"அண்ணே, ஸ்டேஷன்ல ஆளே இல்லணே. நான் வர்றதுக்கு முன்னாடியே ரவுண்ட்ஸ் போய்டாங்க போல"

"டேய், என்னடா இப்ப சொல்ற, உன்ன" னு போன கட் பண்ணி, ஆப் பண்ணேன்.

கொஞ்ச நேரத்துல வேலைய முடிச்சுட்டு கெளம்பனும்னு, டூல்ஸ்ஸ எடுத்தேன். மூச்ச இழுத்து தம் கட்டி, அமைதியா லாக்கோட சத்தத்த கேட்டேன். அந்த சத்தம் எனக்கு நல்லாவே கேட்டது. லாக்க தெறந்தேன். நீ யாரு, எவ்ளோ பெரிய லாக்கர்ல தெறந்துருக்க. இதுலா என்னனு நானே பெருமபட்டுகிட்டேன். ஒரு செகண்ட் எல்லாதயும் மறந்துடேன். உள்ள எவ்ளோ பணம் இருக்கும்னு தெரியல. திரும்பி, கீழ கெடந்தவன பாத்தேன். அவன் அப்டியே தான் இருந்தான். மெதுவா லாக்கர் கதவ தொறந்தேன்.

டபடபப்டபடப... குச்சிய வச்சு, ஷட்டர்ல கோடு போட்ட மாதிரி சத்தம் கேட்டுச்சு. பயத்துல கீழ விழுந்தேன். வேகமா எந்திருச்சு, லாக்கர் பின்னாடி போய் மறஞ்சுகிட்டேன். மூச்ச அடக்கி எந்த சத்தமும் போடாம இருந்தேன்.

"டேய், என்னோட சரக்கு எங்கடா?"

உள்ள இருந்து எந்த சத்தமும் கேக்கல, இலேசா வெளிய வந்து பாத்தேன். அவன் அப்டியே தான் படுத்துருந்தான். திரும்பவும் குச்சியால அடிக்குற சத்தம்.ஷட்டர் பூட்டி இருக்கும் போது, வெளிய இருந்து யாரு சரக்கு கேக்குறான்னு தெரியல. ஷட்டர்ல இருக்குற சின்ன ஓட்ட வழியா பாத்தேன். எதுமே சரியா தெரியல. செகப்பு, நீல கலர் லைட் எரிஞ்சது. போலீஸ்.

என்ன பண்றதுனே தெரியல. போலீஸ் ஏன் சரக்கு கேக்குறான். செக் பண்றானா, ப்ளாக் ல ஓட்றாங்களானு. இல்ல மாமூல் கேக்குறானானு தெரியல. முகமெல்லாம் வேர்த்து கொட்டியது. உடல் உஷ்ணம் அதிகமானது. என்னோட இரத்த ஓட்டத்த என்னால உணர முடிஞ்சது. கீழ கெடந்தவன் கிட்ட எந்த அசைவும் இல்ல.

திரும்பவும் ஷட்டர தட்டுற சத்தம். "நான் போலீஸ் தான்டா, வழக்கமா குடுக்குற சரக்க குடுடா?"

சத்தம் அதிகமா கேக்க கூடாதுன்னு ஷட்டர்ல கைவச்சு அழுத்தினேன். கால்ல என்னமோ தட்டுபட்டது. குனிஞ்சு எடுத்து பாத்தேன், ஒரு புல் சரக்கு பாட்டில். ஷட்டர தடவுனேன். கீழ சின்னதா ஒரு னாப் இருந்தது. அத தள்ளுனேன். ஒரு கை போற அளவுக்கு ஓட்ட இருந்தது. அது வழியா பாட்டில வெளிய நீட்டுனேன்.

உடனே புடுங்கிட்டு, "உன்னோட இதே ரோதனையா போச்சு"

பெருமூச்சு விட்டேன். கைய, நெஞ்சுல வச்சு அழுத்தி, இதயதுடிப்ப கட்டுபடுத்தினேன். கொஞ்ச நேரம் அங்கயே உக்காந்து, போலீஸ் கெளம்புறாங்களானு ஷட்டர்ல காத வச்சு கேட்டேன். கெளம்புற சத்தம் கேட்டது. கீழ படுத்து, ஷட்டர் ஓட்ட வழியா போலீஸ் போறத பாத்தேன். அப்டியே படுத்து, பெருமூச்சு விட்டேன். மெதுவா எந்திருச்சு, லாக்கர்கிட்ட போனேன். லாக்கர தெறந்தேன். என்னை அறியாமலே என் வாய் திறந்தது. சந்தோஷத்தில அப்டியே சிரிச்சேன். லாக்கர் ஃபுல்லா பணம்.

டூல்ஸ்ஸ கீழ கொட்டிட்டு, பேக்ல எல்லா பணத்தையும் வச்சேன். என்னால சந்தோஷம் தாங்க முடியல. ஒரு நோட்டுவிடாம எல்லாதயும் எடுத்து வச்சேன்.

பேக்க எடுத்து, மெதுவா எந்திருச்சேன். கீழ கெடந்தவன பாத்து இவன் இப்போ யாரோட, எந்த உலகத்துல, என்னவா இருக்கானோனு நெனச்சு சிரிச்சேன். மெதுவா பார விட்டு வெளிய வந்துநின்னு கொஞ்ச நேரம் யோசித்தேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.