(Reading time: 14 - 27 minutes)

"வ்ளோ பணம், போலீஸ் கண்டிப்பா என்ன புடிச்சுரும். நரேஷ் வேற இருக்கான், அவனுக்கும் சந்தேகம் வந்துரும். இந்த பணம், கருப்பு பணமாதான் இருக்கும். போலீஸ் என்ன புடிச்சதும், பணத்தை வாங்கிட்டு, என்ன கொன்னுடுவாங்க. நான் மாட்டக்கூடாது. இது திருட்டுனு தெரியக்கூடாது. என்ன பண்ணலாம். என்ன பண்ணலாம். எப்டியும் பெரிய அரசியல்வாதில இருந்து, சி.பி.ஐ. வர என்ன தேடுவாங்க. நான் மாட்டக்கூடாது. யோசி, யோசி, யோசி"னு எனக்கு நானே பேசிட்டு இருந்தேன். சுத்தி பாத்துட்டு அங்க இருக்குற நெறைய பாட்டில ஒடச்சேன். தீப்பெட்டிய எடுத்து, தீக்குச்சிய கொழுத்தும் போது, கை நடுங்கி, தீப்பெட்டிய கீழ போட்டேன். பயம் ரொம்ப அதிகமாச்சு. என்னோட கால் நடுங்க ஆரம்பிச்சுருச்சு. தீப்பெட்டிய எடுத்து, கொழுத்தும் போது, என்னோட இதயம், நெஞ்ச பிச்சு வெளிய வந்து துடிக்குற மாதிரி இருந்துச்சு. தீக்குச்சுய கொழுத்தினேன். என் கண்ணு முன்னாடி, தீ சுவாலை, ஆனா எனக்குள்ள, கண்ணுல படுறத எல்லாம்  எரிச்சுடு எரிச்சுடு னு ஒரு குரல். தீய கொழுத்திவிட்டு அங்க இருந்து வேகமா ஓடுனேன்.

அவசர, அவசரமா என்னோட பைக்க எடுத்துட்டு, வீட்டுக்கு வந்து பணத்த பத்தரமா வச்சுட்டு, மிச்சம் இருந்த சாராயத்த குடிச்சுட்டு, நரேஷ்ஷ பாக்க போனேன். பைக்ல போகும் போது, எனக்குள்ள ஒரு வெறி, அப்டியே இந்த உலகத்தயே எறிச்சரலாம். என்ன எவனாலயும் புடிக்க முடியாது. எனக்குள்ள ஒரு ராட்சசன உணர்ந்தேன். போலீஸ் ரவுண்ட்ஸ் போற வழியா போய், போலீஸ் கார்ல என்னோட பைக்க மோதுனேன்.

"ஏட்டயா, போய் என்னனு பாருங்க"

"சார் டி.டி"

"அவன வண்டில ஏத்துங்க"

"கீரத்துறை ஒயின்ஸ் ஷாப்ல தீ விபத்து. ஓவர். ஃபயர் சர்விஸ் ஸ்பாட்ல இருக்காங்க. ஓவர். ஈ3 இன்பெக்ட்ர் ஸ்பாட்டுக்கு போய் செக் பண்ணுங்க. ஓவர்" னு வாக்கி டாக்கி இரைந்தது.

கரெக்டான நேரத்துக்கு தான் வந்துருக்கேன்னு மனசுக்குள்ள சிரிச்சேன்.

கார் ஒயின்ஸ் ஷாப்க்கு வந்தது. ஒரே கூட்டம். எல்லாரும் டார்ச் லைட்ட அங்கயும் இங்கயும் அடிச்சுட்டு இருந்தாங்க. எல்லாரும் அவங்களுக்கு தோன்றத பேசிட்டு இருந்தாங்க. இருட்டா இருந்தனால, எவ்ளோ புகை இருக்குன்னு சரியா தெரியல.

"ஏட்டய்யா, இந்த க்ரௌவ்ட க்ளியர் பண்ணுங்க"

"என்ன ஸ்டேடஸ்"

"சார். பக்கத்துல வேற எந்த கட, வீடும் இல்லாதனால, தீ வேற எங்கயும் பரவல. ஒயின்ஸ் ஷாப் பழைய கட்டிடம்றனால, நிக்கல. இடிஞ்சு விழுந்துருச்சு. அதுனால தான் எங்களாலயும் சீக்கிரமா தீய அணைக்க முடிஞ்சது"

"ம். உயிர் சேதம் எதாவது?"

"தெரியல சார். கட பூட்டி தான் இருந்தது. உள்ள இருந்து எந்த சத்தமும் வரல."

"கட இடிஞ்சு இருக்கு, இப்போ..."னு இன்ஸ்பெக்ட்ர் பேசிட்டு இருக்கும் போது, அவர் செல்போன் குறுக்கிட்டது.

"ஹலோ"

பதட்டத்தோடு அவர் கொஞ்ச தூரம் தள்ளி போய் பேச ஆரம்பிச்சாரு. ஆனாலும் அவர் பேசுறது, எனக்கு ஓரளவுக்கு கேட்டது.

"தீயெல்லாம் அணச்சாச்சு சார். உயிர் சேதம் இருக்கானு. நாளைக்கு காலைல தான் தெரியும்."

"எங்களால போக முடியாது. கட இடிஞ்சு இருக்கு. தண்ணியா இருக்கு சார்." னு இவர் பேசிட்டு இருக்கும் போதே போன் கட் பண்ணதால பயங்கர கடுப்புல வந்தார்.

"ஏட்டய்யா, இன்னுமா இந்த கூட்டம் போகல. போச்சொல்லுயா."

"ஓ.கே. சார். தீய அணச்சுட்டேங்கல. நீங்க போங்க. இனிமே நாங்க பாத்துகுறோம்"

இவர் பேச்சுல சந்தேகப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் அங்கயே அசயாம நின்னாங்க.

"போக சொன்னா, போக மாட்டீங்களா. ஏன்டா என் தாலிய அக்குறீங்க. ஏட்டய்யா" னு மத்தவங்கள திட்ற மாதிரி தீயணைப்பு வீரர்கள திட்ட, அவங்களும் எதுவுமே சொல்லாம போய்டாங்க.

ஏட்டய்யா கூட்டத்த அனுப்பிட்டு இருக்கும் போது, இன்ஸ்பெக்டர் கார்ல இருந்து டார்ச் லைட்ட எடுத்துட்டு இடிஞ்ச கட்டிடத்துக்குள்ள போனாரு.

இவர் ஏன் உடனே உள்ள போறாரு, அப்டி போன்ல யார் பேசுனா, என்ன சொன்னாங்க, இல்ல இது வழக்கமா போலீஸ் இன்வெஸ்டிகேட் பண்றதுதானா? னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.

"உன்னோட பேர் என்ன?" னு கார் டிரைவர் என்கிட்ட கேட்டார்.

"ரவி"

"எங்க இருந்து", னு அவர் பேசிட்டு இருக்கும் போது, ஒரு அலறல் சத்தம் கேட்டது. கார்ல இருந்து கீழ இறங்கி பாத்தேன்.

இன்ஸ்பெக்டர காணோம். ஓடி போய் பக்கத்துல பாத்தேன். கீழ விழுந்து கெடந்தாரு. உணர்ச்சியே இல்ல, மயக்கத்துல இருந்தாரு. நானும் டிரைவரும் அவர தூக்கிட்டு வந்து, கார் பேனட் ல படுக்க வச்சோம். ஏட்டய்யா ஓடி வந்துட்டு இருந்தாரு.

நான் தான் அவருக்கு சி.பி.ஆர். பண்ணி சுயநினைவிற்க்கு கொண்டுவந்தேன். முகத்துல நல்ல அடி, இரத்தம் கொட்டியது. வலியால துடிச்சுட்டு இருந்தாரு.

"என்ன ஆச்சு இன்ஸ்பெக்டருக்கு?" என்றார் ஏட்டய்யா.

"கீழ விழுந்து, மயங்கிடாரு, சத்தம் கேட்டு போய் பாத்து, தூக்கிட்டு வந்தோம். தம்பி தான் மூச்சுக்குடுத்து காப்பாத்துனாரு"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.