(Reading time: 14 - 27 minutes)

"ரி தூக்குங்க, தூக்குங்க. ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போலாம். கால புடி, பாத்து பாத்து, நீ அப்டியே உள்ள போ. அவர தூக்கிட்டே போ, இடிச்சுக்காத, மெதுவா, மெதுவா வை" என்று இன்ஸ்பெக்டரை காரில் படுக்க வைத்து, "டிரைவர், நீங்களும் தம்பியும் ஆஸ்பிட்டல் போங்க. நான் ஸ்பாட்ல இருக்கனும். ஏ.சி.பி. ட ஸ்டேடஸ் சொல்லிட்டு, நான் காலைல வர்றேன். எதுனாலும் எனக்கு போன் பண்ணுங்க" னு எங்கள அனுப்பி வச்சாரு.

ஆஸ்பிட்டல் ல அட்மிட் பண்ணி அர மணி நேரம் கழிச்சு, "அடி பலமா படல. இரத்த காயம் மட்டும் தான். ஷ்ட்ரிச்சஸ் போட்ருக்கோம். இன்னைக்கு நைட் ரெஸ்ட் எடுக்கட்டும்"னு டியூடி டாக்டர் சொன்னாரு.

மொபைல ஆன் பண்ணி, நரேஷ்க்கு கால் பண்ணேன். " டேய் நரேஷ். மேட்டர் முடிஞ்சுருச்சு. நீ வீட்டுக்கு போ. நான் வந்து உன்ன பாக்குறேன்"

"சரிண்ணே"

போன கட் பண்ணிட்டு, நானும் படுத்து தூங்கி, காலைல எந்திருச்சேன். "என்னோட உயிர காப்பாத்துனதுக்கு தாங்கஸ்." னு இன்ஸ்பெக்டர் சொன்னாரு.

"ப்ரெண்ட்ஸ்க்குள்ள எதுக்கு தாங்க்ஸ்லாம். நான் வீட்டுக்கு போய், ட்ரெஸ்ஸ மாத்திட்டு, நம்ம ரெண்டு பேத்துக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர்றேன்."

"உங்களுக்கு எப்போ, எந்த உதவி வேணும்னாலும் என்கிட்ட கேக்கலாம்."

"நீங்க ஏன், நைட் டார்ச்ச எடுத்துட்டு போனீங்க. அப்டி என்ன சொன்னாங்க போன்ல"

அவர் ஏன் போனாருனு சொன்னதும், என் மனசுக்குள்ள சின்ன சந்தோஷம். இவர வச்சு ஒரு ப்ளான் போடலாம்னு நெனச்சேன். "சரி நான் அப்போ கெளம்புறேன்"னு சொல்லிட்டு, போலீஸ் கார்ல போய்  எங்க ஏரியால எறங்குனேன். சட்டைல ரெத்த கற, போலீஸ் கார், பெரிய தாதா மாதிரி கெத்தா நடந்து போனேன். வீட்டு வாசல்ல, சதீஷும், சேகரும் நின்னுட்டு இருந்தாங்க.

"என்னடா, சட்டைல ரத்த காயம், போலீஸ் கார்ல வேற வர்ற. என்னமா மேட்டரு" என்றான் ரவி.

“அது ஒன்னும் இல்ல, ஃப்ரெண்டு ஒருத்தருக்கு ஆக்சிடென்ட் ஆய்ருச்சு. அதான் ஆஸ்பிட்டல் ல போய் சேத்துட்டு வர்றேன், நீங்க ஏன் வந்தீங்க, சொன்னா நானே வந்துருப்பேன்ல, சரி, வாங்க உள்ள போய் பேசலாம்”னு கதவ தொறந்தேன்.

“நேத்து சொன்னேன்ல ரவி. ஒரு வீட்ட வெள்ளை அடிக்கணும்(கொள்ளை அடிப்பதின் வட்டார வார்த்தை). வீட்ல எல்லாரும் 3 நாள் திருப்பதிக்கு போறாங்க. அந்த டைம்ல நாம போறோம்.  

“யார் வீடு?”

“பி. டி. ஆர். வீடு.”

“பெரிய தலக்கட்டாசே. கஷ்டமே.”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. பக்கவா ஸ்கெட்ச் போட்ருக்கோம்.”

நம்மகிட்ட இருக்குற பணமே போதும். இந்த மேட்டரப்ப இவங்கள நம்ம இன்ஸ்பெக்டர் கிட்ட மாட்டி விட்டுட்டு, நாம இந்த பணத்தோட எங்கயாவது செட்டில் ஆகலானும்னு மனசுக்குள்ள யோசிச்சு, “சரி ரவி, பண்ணலாம். வியாழக்கெழம நைட்டே இங்க வந்துருங்க” னு சொல்லி அவங்கள அனுப்பிட்டு, பணத்த போய் பாக்கலாம்னு போனேன். பணத்த காணோம். “எங்க வச்சேன், எங்க வச்சேன். இங்க தான இருந்தது, யார் எடுத்துருப்பா? நரேஷ். நரேஷ்க்கு கால் பண்ணேன். சுவிச்சுடு ஆஃப். கண்டிப்பா நரேஷ் தான், அவன...” என்று பல்ல கடிச்சுக்கிட்டு கோவத்தோட உச்சத்துல இருந்தேன். “அவன்லா ஒரு ஆளு, என்கிட்டயே வேலைய காமிச்சுட்டான். அவனுக்கு நான் யாருன்னு காட்டுறேன்.”னு யோசிச்சேன்.

“முட்டா பயன். நம்ம போட்ட கணக்கு கரெக்ட்டு தான். கண்டிப்பா. நரேஷ் மேல தான் சந்தேகப்படுவான், நம்ம ரெண்டு பேத்துமேலயும் இல்ல. பாவம் நரேஷ். அவனுக்கு தான் எதுவுமே தெரியாது. நல்ல வேல, விடியக்காலைலயே நரேஷ வெளியூர்க்கு பஸ் எத்தி, அங்க ஹால்ட்டாக சொல்லிட்டோம். நீ அடிச்சுக்கோ சதீஷ்.”

This is entry #90 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest 

{kunena_discuss:926}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.