(Reading time: 9 - 18 minutes)

தோ தெரியவில்லை கமாராவை மாத்திரம் விசாரணை  செய்ய  என்று  வேனில் அழைத்துச்  சென்றார்கள்.

எனக்கும் எனது மனைவிக்கும் மிகுந்த அதிர்ச்சி!

பல வதந்திகள் பரவத்தொடங்கின. கமாராவிடம் எரிச்சல் உள்ளவர்கள் எல்லாம் அவனை அவதூறாகப்  பேசத் தொடங்கி விட்டார்கள்.

அந்த வறிய நாட்டில் களவுக்குப் பஞ்சம் இல்லை. பொறுப்பில் உள்ளவர்கள் முதல்   வறியவன் வரை எல்லோருக்கும் அதில் பங்குண்டு!.

நான் வெளி நாட்டில் இருந்து இங்கே வந்தவன். எனக்கு நல்ல சம்பளம் எல்லா வசதிகளும்.?. ஆனால் இந்தநாட்டைச்  சேர்ந்தவர்களுக்கு கிடைக்கும் சிறிய ஊதியத்தை வைத்து எப்படி சமாளிக்க முடியும்?.

அரசியல் வாதிகள்  எல்லோரும்  எல்லாச் சுகபோகங்களும் அனுபவிக்கிறார்கள்!. மக்களைப் பற்றி கவலைகொள்வதில்லை!.

வெளிநாட்டவரும் மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி அங்கிருக்கும்  வளங்களைச் சூரையடுவதைப் பார்க்கும் பொது, நேர்மையாக உழைக்கும் எனக்கு அந்த ஊரில் இருப்பது அறவே பிடிப்பதில்லை.

அத்தியாவசிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு!  நாட்டின் பொருளாதாரமோ மோசமான நிலையில். வேலையில்லாத் திண்டாட்டம். தலைதூக்கி ஆடுகிறது. 

மருத்துவ மனைக்கும், மறியலுக்கும் சென்றால் உயிருடன் திரும்ப முடியாது என்று எல்லோரும் சொல்லுவார்கள்’ . 

எங்களுக்கு கனடா விசா வந்துவிட்டது. இன்னும் ஆறு அல்லது எழு  மாதங்களுக்குள் இந்த ஊரை விட்டுப் போய்விடுவோம்.

ரண்டு நாட்கள் கழிந்து விட்டன. கமாராவைப் பற்றி ஒரு சேதியும் இல்லை. மகளைப் பள்ளிக்கூடத்தில் இறக்கி விட்டு  போலீஸ் நிலையத்தை நோக்கி காரை செலுத்தினேன். இன்ஸ்பெக்டர் என்னை வரவேற்றார். களவு பற்றி விசாரித்தேன்.

களவுபோன தொகை 25,000 டாலர்கள் என்பதால், எனக்கு மேலிடத்தில் இருந்து நெருக்கடி என்று கூறினேன். 

 காஷியர் நாட்டை விட்டு போயிருப்பார். அவரைக்கண்டுபிடிக்க இயலாது. என்று கூறினார். கமாராவுக்கும் களவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். அவன்தான் கடைசியில் காஷிருடன் இருந்தவன். அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்று கூறினார். கமாராவுக்கும் களவுக்கும் எதோ சம்பந்தம் இருப்பதாக தாங்கள் சந்தேகிப்பதாக அவர் கூறினார்.

கமாராவை தனிமையில்  சந்திக்கலாமா? என்று கேட்டேன். ஆம் என்னோடு வாருங்கள் என்றார்.      

கமாரா வெறும் தரையில் படுத்திருந்தான். என்னைக் கண்டதும் எழும்ப முயற்சித்தான். முடியவில்லை! .கண்களெல்லாம் சிவந்து, தடித்து இருந்தன. உடம்பெல்லாம் அடிவேண்டிய தழும்புகள். அவனைப் பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. சிவந்த கண்களில் இருந்து கண்ணீர் சாரை சாரையாக வழிந்த வண்ணம் இருந்தது. அவன் கஷ்டத்தை என்னால் உணரமுடிந்தது.

“கமாரா! நீ உனக்குத் தெரிந்த  உண்மை  எல்லாம் கூறிவிட்டாயா?”என்று கேட்டேன். “ஆம்” என்றான்!.

அவனைப் பார்த்தால் களவுக்கு உதவி சைய்தவன் மாதிரித் தெரியவில்லை. !

இன்ஸ்பெக்டர் அவனை எனது பிணையில் விடச் சம்மதித்தார். அவனால் ஒரு பிரயோசனம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். ஆனால் களவு செய்தவனை பிடிக்க முடியவில்லையே என்ற கோபம் அவருக்கு.மந்திரியின் மருமகன் இந்தக் களவில் சம்பந்தப் பட்டிருப்பது மற்றொரு காரணம். 

மாரா தனது வீட்டுக்கு வழிகாட்டினான். மூலை முடுக்குகள் எல்லாம் கார் வளைந்து வளைந்து சென்றது. கடைசியில் ஒரு சிறு வீட்டின்  முன் வந்து நின்றது.

வீட்டின் முன் கார் நின்றதும், சிறுவர்களும், சிறுமியர்களும்  அங்கிள் கமாரா!, அங்கிள் கமாரா! என்று கத்துயபடியே அங்கே குவிந்தார்கள்!. அவர்களைத் தொடர்ந்து ஒரு பெண்ணும் ஒரு கிறித்துவ பாதிரியாரும் எங்களை அணுகினார்கள். அந்தப்பெண் கமாராவைக் கண்டதும் அழத் தொடக்கி விட்டாள். அவள் போட்டிருந்த கிழிந்த உடுப்பை கவனிக்கிறேன். பாதிரியார் அவளைச் சமாதானப்படுத்தி, கமாராவை உள்ளே அழைத்துச் செல்லுமாறு அவளிடம் கூறினார். 

நானும் பாதிரியாரும் சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்த மரத்தின் கீழிருந்த வாங்கில் அமர்ந்தோம். பாதிரியார் எனக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, கமாரா உங்களைப்பற்றியும் உங்களுடைய மனைவி பற்றியும் என்னிடம் நிறையச் சொல்லி இருக்கிறான். அவனுக்கு உங்களிடம் ஒரு தனி மரியாதையும் மதிப்பும்.

“கமாரா ஒரு ஆநாதை. அவனை பல வருடங்களுக்கு முன்னர் நான் தத்தெடுக்க இங்கிலாந்தில் இருந்து வந்தேன்.  அவன் இருந்த சூழ் நிலையிலிருந்து அவனை என்னால் பிரிக்க முடியவில்லை. அதனால் நானே இங்கு தங்கி விட்டேன்”.

“அவனுடைய மனைவிதான் அந்தப் பெண் அவர்களுக்கு  பிள்ளைகள் இல்லை”.

“யார் இந்த பிள்ளைகள்"?  நான் கேட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.