(Reading time: 10 - 20 minutes)

இருவர் வாழும் உலகமிது  - அன்னா ஸ்வீட்டி

Iruvar

வீட்டின் காலிங் பெல்லை அழுத்தும் முன் ஏதோ தோன்ற கதவருகில் இருந்த ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தான் சமர்ஜெயன்.

அவன் மனைவி சமர்பணா அந்த வரவேற்பறையின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நின்றிருந்தாள். அந்த ஜன்னலில் இருந்து மூன்று அடி தூரத்தில் இருக்கும் காம்பவ்ண்ட் சுவரை தவிர அங்கு பார்ப்பதுக்கு எதுவும் இருக்காது…..அப்படி எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அவள்….

சில நொடிகள் அவளை கவனித்தான்….அவள் ஏதோ உலகத்தில் மூழ்கிப் போயிருப்பது அவனுக்குப் புரிகிறது…. இப்பொழுதெல்லாம் இப்படித்தான்…. அவன் பார்வையில் அவள் இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும்…. அவள் உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கிறாள்….

மெல்ல காலிங் பெல்லை அழுத்தினான்….சட்டென சுய உலகிற்கு வந்தவள் வேகமாக வந்து கதவைத் திறந்தாள்.

அவன் கையிலிருந்த லன்ச் பேக்கை இவள் கை நீட்டி வாங்கியபடி “மதியம் சாப்பாடு எப்டி இருந்துச்சு….?” என ஆரம்பிக்க

உள்ளே நுழைந்த அவனோ அவளை இடையோடு பற்றி தூக்கியபடி அருகிலிருந்த அந்த மொகல் ஜூல்காவில் சென்று அமர்ந்து அவளை தன் மடியில் அமர்த்திக் கொண்டான். காலால் தரை மிதித்து ஊஞ்சலை சின்னதாய் ஒரு அசை…

அவன் அவ்வப்போது இப்படி செய்வதுதான்…..வழக்கமாக “ ஐயோ விடுங்க….என்னதிது…யாராவது பார்த்திரப் போறாங்க…” என திறந்திருக்கும் கதவை நினைத்து சிணுங்குவாள் அவள்…. அந்நேரம் அவள் முகத்தில் பரவும் அந்த வெட்கமும்….அதன் அடியில் மறைந்திருக்கும் அவள் ஆசையும் சின்னதே சின்னதாய் ஒரு கர்வமும் இவனை அள்ளும்…..

ஆனால் இப்போதோ அவன் புறமாய் திரும்பி அவன்தான் அவள் முழு உலகமே என்பது போல் அரை நொடி இவன் தோளில் முகம் புதைத்தவள் சட்டென  எழுந்து போய்விட்டாள்… “டைம் ஆகிட்டு சாப்ட வாங்க…” என அதற்கு ஒரு சமாளிப்பு வேறு.

இவனுக்கு பலத்த சிந்தனை….. இதெல்லாம் அந்த நாளைக்குப் பிறகுதான்….

இரவு தூக்கத்தின் இடையில் இவன் ஏதோ உணர்ந்து விழிக்க….இவன் கைகளுக்குள் அவள் இல்லை…. திருமணமான புதிதில் இவனுக்குமே இது கொஞ்சம் கஷ்டமான பழக்கமாய் தோன்றும். அவளை கைகளுக்குள் வளைத்துக் கொள்ள பிடிக்கும் எனினும்…..அடுத்தவரோடு அருகில் படுத்து தூங்கி கூட அதுவரை பழக்கமில்லாத காரணத்தினால் அப்படியே அணைத்தபடி அவனால் தூங்கிவிட முடியாது….

ஆனால் அன்னையின் அணைப்பையோ அல்லது தந்தை குடும்பம் என எந்த அரவணைப்பையோ உணர்வில் கூட உணர்ந்து வளர்ந்திராத அவள் இவன் அணைப்பை எப்போதுமே எதிர் பார்ப்பது போல் தோன்ற இவன் முயன்று இப்படி தூங்க பழகிக் கொண்டான்….

இப்போது அவள் இவனைவிட்டு விலகிப் போகிறாள் …… சுற்றிலும் பார்வையை ஓட்டினான்…அந்த இருட்டு அறையின் சுவரில் சாய்ந்து அவள்……அழுகிறாளா என்ன???

இங்கு வந்தால் இந்த இடமாற்றம்….அதோடு இவன் பகலிலும் அடிக்கடி வீடு வந்து அவளைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற நிலை.. அது அவளுக்கு மனமாற்றம் தரும் என்றுதான் இவன் அவளை இரண்டு மாதம் லீவு எடுத்து வரச் சொன்னதே…. ஆனால் இங்கு முன்னிலும் அதிகமாக நோகிறாளோ???

என்ன செய்தால் சரியாகும்…? என்ன செய்ய வேண்டும் இவன்?

அன்றும் வேலை விஷயமாக இவன் டவ்னுக்குப் போக வேண்டி இருந்தது…….இவன் வேலை செய்யும் இந்த அணைக்கட்டுப் பகுதியிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவு அது.  குறுக்கு வழி சற்று ரிஸ்க்…. பட் 34 கிலோமீட்டர்….சீக்கிரம் வந்துவிடலாம்….

அந்த மலைக் காட்டுப் பகுதியில் கவனம் அவசியம்…..விலங்குகளும் இருக்கலாம்….அதனால் யாரும் பொதுவாக அதன் வழியாக செல்வதில்லை…. இவனுக்கு அந்த வழியில் போய் வந்துவிடலாம் என தோன்றிவிட்டது...

அந்த ஆள் அரவமற்ற காட்டுப் பாதையில் பாதி வழி போயிருப்பான்….. இவனுக்கு முன்னால் இடப்புறம் தெரிந்த பெரிய பாறையின் பக்கவாட்டில்….. இவன் மனைவியேதான்??? தலையை முக்காடிட்டு மறைத்திருந்தாலும் பார்த்தவுடன் இவனுக்கு தெரியாமலா?

இவன் வாங்கிக் கொடுத்த அந்த பர்பிள் நிற சல்வார்…. முக்காடை தாண்டி வெளியே தொங்கும் அவளது நீள சடை… எங்கயும் வெளிய போறதா அவ சொல்லவே இல்லையே??

இன்னும் செல்ல செல்ல தெளிவாகவே தெரிந்தது…..யாரோ ஒரு நெட்டையனிடம் பேசிக் கொண்டிருந்தாள்…. இது யார் இவளை இப்படி ஒழிஞ்சு மறஞ்சு மீட் பண்றது? ஏன்???? சற்று அருகில் செல்லவும் அந்த அவன் யாரென்று முகம் தெரிந்தது இவனுக்கு…

இவனா???அப்படின்னா?????

அன்று இரவு தூக்கம் தொலைத்தது இவனும்தான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.