(Reading time: 10 - 20 minutes)

றுநாள் காலையிலிருந்தே இவனுக்குள் ஏதோ உள்ளுணர்வு…..ஏதோ சரி இல்லை….இன்றைய நாள் ஒன்றும் இலகுவாய் கழியப் போவதும் இல்லை……

டேம் சைட்டுக்கு கிளம்பியவனுக்கு ஏனோ இனம் புரியா கலக்கம்.  எதற்கும் எளிதில் உணர்ச்சி வசப்படுவது அவன் சுபாவம் அல்ல…..ஆனால் இன்றைய அலைக்கழிப்பு அவன் வகையில் அதிகம்….

அவளைப் பார்ப்பது அதுதான் கடைசி முறையோ…..? விடைதரும் முகமாக வீட்டு வாசலில் நின்றவளை அவன் நினைவையும் மீறி இழுத்து அணைத்தான்….

தயக்கமும் தவிப்பும் தடை போடலுமாய் வந்து விழுந்தாள் இவன் பிடிக்குள் அவள்…. படபடவென உதறும் அவள் தேகத்தை அசையக் கூடவிடாமல் அரக்கத்தனமாய் இறுக்கிப் பிடித்திருக்கிறான் இவன் என்பதையே சற்று நேரம் கழித்துதான் உணர்ந்தான்.

மிரண்டு போய் நின்றவளை மெல்ல விலக்கி நிறுத்துவிட்டு….. “சாரி…..ஹர்ட் செய்திருந்தா வெரி சாரி…டேக் கேர்….பை” என இவன் விடைபெற

வாய் திறந்து எதுவும் சொல்லாமல் அப்படியே விரைத்துப் போய் அவள்.

அன்று மதியம் ஒரு மூன்று மணி இருக்கும்…. டேமில் வேலை நடக்கும் ஒவ்வொரு பகுதியாய் பார்வையிட்டுக் கொண்டு வந்தவன்…..ஆள் நடமாட்ட மற்ற அந்த பகுதிக்கு வந்தான். காடும் புதறுமாய் இருக்கும் அந்த இடம் தான் இவன் மறைந்திருந்து தகவல் அனுப்ப சரியான இடம்….

அதற்காக சுற்றுமுற்றும் பார்த்து தன்னை யாரும் கவனிக்கவில்லை என நிதானித்து இவன் அந்த மறைவிற்குள் நுழைய……

அங்கு அந்த மூன்று தடி மாடுகள்……

பார்க்கவும் புரிந்துவிட்டது டேம்க்கு பாம் செட் செய்துட்டு இருக்காங்க…… கடவுளே!!!! டேம் இப்ப வெடிச்சா குறஞ்சது 32 கிராமம்….2 டவ்ண்... கண்டிப்பா காலி….அடுத்தும் என்னவெல்லாமோ….?

நின்று யோசித்துக் கொண்டிருக்கவெல்லாம் நேரமில்லை….. அதற்கு வாய்ப்பு அந்த தடியன்ங்கள் கொடுப்பதாயும் இல்லை….. இவன் நடப்பதை நிதானிக்கும் முன் ஒருவன் இவனை நோக்கி ஷூட்……

இவன் இடத் தோளில் இறங்கியது அது…… ஆனால் அடுத்த இரண்டாம் வினாடி வருவதற்குள்  இருவர்  சுருண்டு விழுந்திருந்தனர் உபயம்…… இவனது பிஸ்டல்…..

இப்போது அடுத்தவன் எதிரும் புதிருமாய் ஓட…

 இவன் அவனை துரத்திக் கொண்டு…… ஆன் த வே அப்படியே ஹயர் அஃபீஷியலுக்கு விஷயத்தை ஃபோனில் ப்ளூடூத்தில் விளக்கியபடி….

“ ஷூட் அட் சைட் ஆர்டர் கொடுத்திறுந்தேனே….ஷூட் தெம்…… ரிமோட்  ஐ’ல் சென்ட் பேக் அப் ஃபார் யூ….”

இப்போது எப்படி வந்தாள் என தெரியவில்லை அந்த தடியன் கையில் எதிரில் அங்கு வந்திருந்த இவன் மனைவி…. அவளுக்கு பின்னாக ஒழியாத குறையாக அவன்.

ஸ்தம்பித்துப் போய் இவன்.

“உன் வைஃப் தான…..எனக்கு தெரியும்…..இவ தலை சிதறாம இருக்கனும்னா…..இப்பவே போய் அங்க விழுந்து கிடக்றவன்ல சிவப்பு டீ ஷர்ட் போட்டவன் பாக்கெட்ல இருக்ற மொபைல எடுத்துட்டு வா “ என்றான் அவன்…..அவன் பிஃஸ்டல் இவனவள் பக்கவாட்டு நெற்றியில்….

இவன் உள்ளுணர்வு சொன்னது இதைத்தானோ…? அந்த மொபைல் நிச்சயம் பாம்கான ரிமோட்……அதை இவன் எடுத்துக் கொடுத்தால் காலியாகப் போறது எத்தனை உயிர்களோ…. இல்லை என்றால் இவன் மனைவியின் இறப்பில் மட்டுமாய் அது முடியும்…..

தன்னவள் கண்களை நேருக்கு நேராய்ப் பார்த்தான்…. அவளும் இமை கொட்டாது  இவனைத்தான் பார்த்திருந்தாள்…..அந்த தடியன் பிடியில் அவள் பயப்படவில்லை பதறவில்லை….விழியில் விடையோடு இவனோடு கலந்திருந்தாள் உணர்வில்…..

“என்னப் பத்தி யோசிக்காத….” இதுதான் அவளது ஒரே செய்தி….

“வேகமா போடா..” அவன் கத்த….

மனைவியின் கண்களைப் பார்த்தவன் சின்னதே சின்னதாய் பார்வையை ஒரு சிறு நொடி தாழ்த்தி நிமிர்த்தியவன்…ஷூட்….. அந்த தடியனின் நடு நெற்றியில் சரணடைந்தது அது…. இவன் பார்வை உணர்ந்து அதே நேரம் குனிந்திருந்தாள் அவள்….

 மூச்சற்ற முழு நொடி தேவைப்பட்டது ஆபத்தை தாண்டி விட்டோம் என இவர்கள் இருவரும் உணர….

அடுத்த நொடி தலை காட்டும் முன் தன்னவளை தன்னோடு சேர்த்து அணைத்திருந்தான் கணவன்.

பேச்சற்று அழுதாள் அவள் அவன் மார்பில் குழந்தையாய்….

அன்றைய அத்தனை வேலையும் முடியும் வரையுமே அவளை கையோடு கை பற்றிதான் நிறுத்தி இருந்தான்…..

வீட்டுக்குள் வரவும் வெளிக்காற்று உட்புகமுடியாத வேக அணைப்பில் அவள் இதய வெற்றிடத்தில் உயிர் காற்றாய் உறைந்தான்….

“நான் ரா ஏஜென்ட்னு நீ தெரிஞ்சுகிட்ட அன்னையில இருந்து நீ நிம்மதியா இல்ல….. அது என் வேலை பிடிக்காமலா….இல்ல உன் அப்பா அண்ணா விஷயத்தை நான் கண்டு பிடிச்சிறுப்பேன்னு உனக்கு புரிஞ்சிட்டதாலயான்னு என்னால தெரிஞ்சுக்க முடியலை…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.