(Reading time: 11 - 21 minutes)

உயிரினும் ஓம்பப் படும் - ஜான்சி

ozhukkam

ன்றுச் சனிக்கிழமை, முந்தைய இரவு வேலையிலிருந்து திரும்பியிருந்தவனுக்கு தூக்கத்தின் பழுவில் இன்னும் கண்ணை திறக்க இயலவில்லை. கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. “யாரப்பா அது லீவு நாளும் அதுவுமா தூங்க விடாமல் தொல்லைப் படுத்துகிறது?", சாக்ஷி இருந்தாலாவது அவளை கதவைத் திறக்கச் சொல்லலாம். ஆனால், அவளுக்கு இன்று லீவு கிடையாது வேலைக்குச் சென்றிருக்கிறாள். சரி நாம்தான் எழுந்தாக வேண்டும் என்று எழுந்தான் வசீகரன்.

கதவைத் திறந்துக் கண்களைக் கசக்கியவனுக்கு எதிரில் முதலில் மங்கலாகவும் , பிறகு தெளிவாகவும் அவனுடைய கல்லூரி நண்பன் மகேந்திரன் தென்பட்டான். ஆனால் அவன் முகத்தில் காலை சூரியன் மறைந்து அமாவாசை இருள் பரவியிருந்ததோ? எனும்படி சோர்வு காணப் பட்டது.

“என்னடா என்ன திடீர்னு சரி வா வா” என அவனை உள்ளே வரவேற்றான்.

“ஏன் அப்ப நான் உன் வீட்டுக்கு வரக் கூடாதா? “ என்றுக் கேட்டவன் உண்மையிலேயே ஏதோ பிரச்சினையில் இருப்பது இவனுக்கு புரிந்தது. இல்லையென்றால் இவனுக்கு இவ்வளவு கோபம் வராதே.

“சும்மா வாடா உள்ளே, சீன் போடறான்” என்று அதட்டியவனாக அவனை உள்ளே இழுத்து வந்தான்.

“நீ இரு நான் இப்போ வரேன்” என்று உள்ளேச் சென்று முகத்தைக் கழுவி தூக்கத்தை விரட்டி விட்டு வந்தவன் இரண்டு கப்களில் இன்ஸ்டண்ட் காஃபி கொண்டு வந்திருந்தான்.

"எடுத்துக்கோடா"……… என்று அவன் கரங்களில் ஒன்றைத் திணித்துவிட்டு தான் பருக ஆரம்பித்தான்.

"என்னடா புது மாப்பிள்ளை இன்னிக்கு ரொம்ப டென்ஷனா இருக்க போல, ப்ரியா எப்படி இருக்கா"….

ம்ப்ச்ச்

என்னடா இது கல்யாணம் ஆகி மூணு மாசம் ஆகலை, அதுக்குள்ள இவ்வளவு சலிப்பா……“ம்ம் என்னப் பிரச்சினைடா…….. சொல்லு……..

என்னத்தைச் சொல்றது…

சரி அப்போ சொல்லாதே……

ச்சே போடா நீயே இப்படிச் சொன்னா நான் யாருகிட்ட போய் சொல்லுவேன்.

அடிங்க்……….நான் ஒன்னுச் சொன்ன நீ ஒன்னுச் சொல்லுற, சொல்லணும்னா சொல்லு இல்ல சும்மாயிரு……..எனச் சொன்னவன் "நல்லா தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி விட்டுட்டு" என முனகினான்.

என்னடா……

ம் ம் ஒன்னுமில்ல………சும்மா……

நான் இன்னிக்கு ஹாப் டே லீவ் போட்டுட்டு வந்தேண்டா……….உங்கிட்ட மனசு விட்டு பேசணும்…….

ம்ம்

முந்தா நாள் அன்னிக்கு நம்ம காலேஜ் பிரண்ட் பிரபுவைப் பார்த்தேண்டா…..

எந்த பிரபு அந்த சூசைட் அட்டெம்ட் செய்தவனா…….

ஆமாடா

அந்த பிரச்சினைக்கு பிறகு அவன் காலேஜ் வரவேயில்லையே……எக்ஸாம்கு மட்டும் வந்துட்டு போனான். யார்கிட்டயும் வெளிப்படையா பேசவும் இல்லை…….இல்லையாடா.

ம்ம்ம்ம்ம்………ஆனா அவனுக்கு இப்போ என்ன தோணிச்சோ என் கிட்ட மனசு விட்டு பேசினான்………..

குட், அப்போ அந்தப் பொண்ணு யாருன்னு அவன் சொன்னானா

ம்ம்..அவன் சொல்லாமலே இருந்திருக்கலாம் வெறுப்பில் வெளிவந்தன வார்த்தைகள்.

ஏண்டா……என்ன ஆச்சு……

அந்தப் பொண்ணு நம்ம காலேஜ் பக்கத்தில் இருந்த அந்த கர்ள்ஸ் காலேஜாம்………..

ம்ம்…….

அவ பேர் ப்ரியா T யாம்…

அதென்ன T

அவ இனிஷியலாம் , அவளை எல்லாரும் அப்படித்தான் அங்க கூப்பிடுவாங்களாம்…..

ம்ம்…….

பார்க்க ரொம்ப நல்லப் பொண்ணு மாதிரி இருப்பாளாம்……….

அதென்ன மாதிரின்னு சொல்லுற….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.