(Reading time: 11 - 21 minutes)

ம்ம் அப்போ நீ செஞ்சா அது தப்பில்ல, அவ செஞ்சா தப்பா?………….

அது அப்படித்தாண்டா…… உனக்குத் தெரியாதா……… அதைப் பற்றி எத்தனை பழமொழி எல்லாம் இருக்கு, சேலைல முள் விழுந்தாலும்…………..

சரி சரி பழமொழில்லாம் எனக்குத் தெரியும்………. இப்போ நான் கேட்கிறேன், நீயும் அக்ஷயும் பழகின பொண்ணுங்க எல்லாம் இருக்காங்களே…..

சும்மா சும்மா அதையே சொல்லாதடா…………..நாந்தான் சொன்னேனே நான் பேசுறதோட மட்டும் தான்……போயும் போயும் உன் கிட்ட அட்வைஸ் கேட்க வந்தேன் பாரு………. இப்ப அந்த பொண்ணுங்களைப் பத்தி உனக்கு என்ன கேள்வி? எரிச்சலில் இருந்தான் மகேந்திரன்.

“இல்லை அந்த பொண்ணுங்களை கல்யாணம் செஞ்சுகிட்டவனுங்களுக்கும் இந்த உண்மைத் தெரிஞ்சா இப்ப உனக்கு தோணுற மாதிரி தானே தோணும்னு கேட்டேன்.”

அதுக்கு நான் என்னடா செய்யிறது, அது அந்த பொண்ணுங்களுக்கு இல்ல தெரியணும்.

அப்ப ஆம்பளைங்களுக்கு இதில பொறுப்பே இல்லைனு சொல்ல வர்றியா?

……….பதில் சொல்லாமல் கடுப்பில் இருந்தான் மகேந்திரன்.

நாம இளமை வேகத்தில் இருக்கும் போது செய்வது எல்லாம் சரின்னு தான் தோணும், ஆனால் பிற்காலத்தில் நம்ம லைஃபை அது எப்படி பாதிக்கும்னு எல்லாம் நாம சொல்ல முடியாது. ஒழுக்கக் கேடு நடந்தா அதை பெண்கள் மேலயே சுமத்திட்டு எப்போதும் நம்ம தப்பிக்க முடியாதுடா……..

சரி நீ இப்ப எனச் சொல்ல வர்ற நீ………….ஆம்பளைங்க மாதிரி பொண்ணுங்களும் ஒழுக்கமில்லாம நடக்கலாம் அது தப்பில்லைன்னு சொல்றியா…………

நான் ஒண்ணும் பொண்ணுங்களுக்கு வக்காலத்து வாங்க வரலை. ஒரு பொண்ணைக் குறைச் சொல்லுறப்போ நாம ஒழுங்கான்னு முதல்ல பார்க்கணும்னு சொல்றேன். அது தான் தப்புன்னு தெரியுதில்ல அப்படின்னா அதில ஆணென்ன பெண்ணென்ன அதை யார் செய்தாலும் தப்புதானேடா……அதுமட்டுமில்லாம யாரோ எதுவோ சொன்னதுக்காக நீ டிவோர்ஸ்க்கு அப்ளை செய்யாதேன்னும் கூட சொல்ல வர்றேன்..என்ன புரியுதா?

அப்படின்னா.. அவளால நான் எல்லோர் முன்னாடியும் அவமானத்தையும் சந்திக்கணும்னு நினைக்கிறியா? நான் ஏன் டிவோர்ஸ் செய்யக் கூடாதுன்னு சொல்லுற நீ?

இப்ப நீ டிவோர்ஸ் பண்ணிட்டனு வச்சுப்போம், மறுபடியும் மேரேஜ் பண்ணிக்குவியா? மாட்டியா?

அதெப்படி பண்ணிக்காம, அதெல்லாம் பண்ணிக்குவேன்….

அப்போ நீ ரெண்டாவதா மேரேஜ் செய்துக்க போற பொண்ணைப் பத்தி யாராவது தப்பாச் சொன்னா………… மறுபடி டைவோர்ஸா?………….

அப்போ நான் மத்தவங்க சொல்றதைக் கேட்டு முடிவெடுக்கிறவன்னு சொல்லுற……….. அந்த காலேஜ், க்ளாஸ் விபரம் எல்லாம் எப்படி தெரியும்னு நினைக்கிறே? நான் நேத்து பேச்சு பேச்சா ப்ரியா கிட்ட விசாரிச்ச விபரம் தான் அது. அவதான் எனக்கு எல்லா டீடெய்லும் சொன்னா……….

உன்னை நம்பி அவளும் சொல்லியிருக்கா பாரு.

வேணும்னா நீயே வந்துக் கேளேன்……

சரி நான் வரேன்,…ஆனால் அவ பிரபுவோட முன்னால் காதலியாகவே இருந்தாலும் நீ அவளை டிவோர்ஸ் செய்யக் கூடாதுனு தான் நான் சொல்லுவேன். ஏன் நீ இப்போ ராமனா இருக்கிற மாதிரி அவ இப்ப அவ சீதையா மாறியிருக்க கூடாதா? கல்யாணம்னா உங்களுக்கெல்லாம் விளையாட்டாப் போயிடுச்சிடா………

…………” நீ சொல்றது சரி வருமான்னு தெரியல, ஆனால்,பார்க்கலாம்” சுரத்தேயில்லாமல் அவனிடமிருந்து வந்த பதில் அவன் வந்த போது இருந்திருந்த வேகத்தில் கொஞ்சம் மட்டுப் பட்டிருப்பதாகவே தோன்றியது.

இன்னிக்கு ப்ரியாவுக்கு லீவா?

இல்லை ஹாப் டே இப்போ வீட்டுக்கு வந்திருப்பா………….

சரி மதியம் இங்கே சாப்பிட்டுட்டு போகலாம்..

அவ தந்த டிபன் இருக்குடா………..சொன்னவனை பார்த்த வசீயின் பார்வையில் என்ன இருந்ததோ?………

இருவரும் சாப்பிட்டு புறப்படுகையில் மகேந்திரனுக்கு போன் கால் வந்தது. வெகு மகிழ்ச்சியாக பேசி முடித்தவனிடம் என்னவென்று கேட்டான் வசீகரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.