(Reading time: 20 - 40 minutes)

நிறைமாத நிலவே வா வா - புவனேஸ்வரி

Moon

லகமே பாராட்டுற பெரிய தன்முனைப்பு பேச்சாளர், இளம்வயசுலேயே மனசை பத்தி ஆராய்ச்சி பண்ணுற உளவியலாளி..ஆனால் ஒரு பொண்ணோட மனசை புரிஞ்சுக்க தெரியல உனக்கு!” குற்றம் சாட்டினாலும் அது அவனை பாதித்திடுமோ என்ற கவலையில் முடிந்த அளவு கேலியாக கேட்பது போலவே கேட்டு வைத்தாள் அவள். அவள், ஊர்மிளா! பிரபல பத்திரிக்கை நிறுவனத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருத்தி.

அவள் எதிரில் அமர்ந்திருப்பவன், அந்த நட்சத்திரத்தையே தன் வசம் ஈர்த்தவன், பெயர் இலக்ஷ்மனன் ! அப்படி என்னத்தான் தன் மீது இவளுக்கு காதல் ? புரிந்துகொள்ள முடியவில்லை அவனால். இன்றைய அதிவேக வாழ்க்கைமுறையில் இணையத்தள உறவுகளினால் பாதிக்கப்படும் இளைஞர்களைப் பற்றி அவள் ஒரு தொகுப்பு தயார் செய்ய வேண்டி இருந்தது.

அவனுடன் செலவழித்த மணி நேரங்கள் கொஞ்சம் தான். ஆனால்,ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தத்திற்கு அதுவே மிக அதிகமாய் இருந்தது.அவனிடம் நன்றி சொல்லும்போதே தன் காதலை கூறிவிட்டிருந்தாள் அவள். அதிர்ச்சித்தான் அவனுக்கு..! பார்த்ததும் மயங்கிடும் பேரழகன் இல்லை அவன், அவனைப் பொருத்தமட்டிலும். ஆனால் அவளுக்கோ அவனை விட அழகாய் யாரும் தெரியவில்லை.!

அவன் வேண்டாமென்று மறுத்தும்கூட துரத்தி துரத்தி காதல் சொல்லும் போராளி அவள்.ஆம்,அவன் வாயில் இருந்து “சரி” என்று சம்மதம் வாங்கிடத்தான் போராடுகிறாள் அவள்.

“ என்ன பதில் வேணும் உனக்கு?” கோபமாய் பேசுவது போல கேட்டான் இலக்ஷ்மனன். “ ஓஹோ உனக்கு ஒன்னுமே தெரியாதாக்கும்?” என்று கேட்பது போல முறைத்தாள் ஊர்மிளா.

“ இந்த கடை காஃபி உனக்கு ரொம்ப பிடிக்குமா லக்ஸ்?” கண்சிமிட்டி கேட்டாள் ஊர்மிளா.

“ப்ச்ச்..என்னை அப்படி கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லுறது?”

“ ஷ்ஷ்…கத்தாத லக்ஸ்..நீ மட்டும் என்ன? நான் ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் பதில் கேள்வி கேட்குறியே..நீ திருந்தவே மாட்டியா?”

“..”

“ எனக்கென்ன வேற வேலையே இல்லை நினைச்சியா? பகல் எல்லாம் உன் பின்னாடி சுத்துறதுனால, இப்போ நைட்லவேலை பார்க்குறேன் தெரியுமா?”. அவளை முறைக்க முயற்சித்தான் அவன். மனநல ஆராய்ச்சியாளன் என்பதனாலோ என்னவோ அவனுக்கு எளிதில் கோபம் வருவதில்லை. அதனால்தான் ஊர்மிளா இப்படி தன்னை பாடாய் படுத்தியும், அவள் மனதை புண்படுத்தாமல்  அவளிடமிருந்து விலக முயற்சித்தான்.

“ சரி சொல்லு ..எந்த கேள்விக்கு நான் பதில் சொல்லனும் ?”

“ அதான் கேட்டேன்ல இந்த கடை காஃபி உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கா?”

“ இல்லை ..ஏன்?”

“ பின்ன, டெய்லி எனக்கு நோ சொல்றதுக்காகவே இந்த கடையில் என்கூட காஃபி குடிக்கிறியே!  60  வருஷம் ஆகினாலும் இப்படியே காஃபியோடு என்னை கழட்டிவிட்டுறலாம்னு பார்க்குறியா? நீ மட்டும் யெஸ் சொன்னால் லைஃப் லாங் நானே காஃபி போட்டு கொடுப்பேன்.. அது இன்னும் டேஸ்ட்டா இருக்கும்..ஏன் தெரியுமா?”

“ ஏன்?”

“ ஏன்னா அதுல என் லவ் இருக்கும் லக்ஸ்..உனக்கே உனக்குன்னு நான் சேர்த்து வெச்ச லவ்”

“..”

“சொல்லு,நாம் எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்.. எப்போ என் கையால காஃபி குடிப்ப நீ?” என்று மீண்டும் முக்கியமான அந்த கேள்வியையே அவள் கேட்டு வைக்க, வழக்கம் போலவே அலட்சியமாய் தனது கடிகாரத்தை பார்த்தவன்,

“ எனக்கு டைம் ஆச்சு… கெளம்புறேன்..நாளைக்காச்சும் நான் வேணாம்ன்னு ஒரு நல்ல முடிவெடுத்துட்டு வா..”என்றவன் தன் கோப்பையில் இருந்த கடைசித்துளி காஃபியையும் குடித்துவிட்டு

“ எனக்கு இந்த கடைகாஃபியே போதும்”என்றான்.அவன் முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஊர்மிளா. அவள் முகத்தில் சோகம் பரவியது.ஆனால் அது ஒரே ஒரு நொடிதான். மறுநொடியே,

“ என்னை பிடிக்கலன்னா நீ இப்படி தினமும் என் கூட காஃபி குடிக்க வருவியா? உண்மை இதுதான் லக்ஸ் ..நீயும் என்னை லவ் பண்ணுற.. டெய்லி என்னை பார்க்கத்தான் நீ இங்க வந்துட்டு போற.. மத்தவங்க மனசை சரியாய் படிச்சிட்டு உன் மனசுக்கு மட்டும் துரோகம் பண்ணாத.. நாளைக்காச்சும் என்கிட்ட லவ் சொல்லிடு..இல்லன்னா என்னை பார்க்கவே வராதே” என்று மூச்சு வாங்க வசனம் பேசிவிட்டு தன் காஃபியை குடித்தாள் ஊர்மிளா. நினைத்ததை சொல்லிவிட்ட திருப்தியில் புன்னகைத்தாள் அவள். ஆனால் அவன்? அவனும் புன்னகைத்துக் கொண்டுதான் இருந்தான்.

“ உயிரைத் தொலைத்தேன் அது உன்னில் தானோ”அழகாய் அவளின் செல்ஃபோன் சிணுங்கிட கஷ்டப்பட்டு கண்விழித்தாள் ஊர்மிளா. அவளும் இலக்ஷ்மனனும் காஃபி குடித்த காட்சி கண்களில் இருந்து மறைந்திட அவள் அறையில் பரவிய வெளிச்சம் அவளின் கண்களையும் நிறைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.