(Reading time: 20 - 40 minutes)

ட..எல்லாமே கனவா?” என்று முணுமுணுத்தவள், கைகளால் செல்ஃபோனை தேடி எடுத்தாள்.

“ஹேய் மிளகாய் .. என்னடீ ஃபோனை எடுக்க இவ்வளவு நேரம்?” உற்சாகமாய் பேசினான் இலக்ஷ்மனன். ஊர் “மிளா” என்ற மனைவியின் பெயரை செல்லமாய் “மிளகாய்” என்று அழைத்தான் அவன்.

“ வா டா வா..என்னை நினைவில் இம்சை படுத்துனது போதாதுன்னு..கனவிலும் தொல்லை பண்ணிட்டு இப்போ கேள்வி கேட்குறியா நீ?” மூச்சு வாங்கிட பேசினாள் அவள்.

“ஹேய் என்னடீ படுத்துகிட்டே பேசுறியா? மூச்சு வாங்குது பார்..நான் லைன்ல வெயிட் பண்ணுறேன்..நீ முதலில் எழுந்துக்கோ” என்று அவன் கனிவாக கூறவும், ஃபோனை மெத்தையில் வைத்துவிட்டு மெல்ல எழுந்திட முயன்றாள் ஊர்மிளா. மேடிட்ட வயிற்றை தாங்கிக் கொண்டே நின்றவள்,நிலைக்கண்ணாடியில் தன் கோலத்தைக் கண்டாள்.

இலக்ஷ்மனனின் சட்டையை அணிந்திருந்தாள் அவள். அதை கண்டதுமே முன்னிரவில் அவள் மனதில் குடிகொண்டிருந்த சஞ்சலங்களும் நினைவிலாடின. இப்போதைக்கு அதைப் பற்றி நினைத்தால் தன் குரலில் இருக்கும் வாட்டத்தை அவன் கண்டுபிடித்துவிடுவான் என்று நினைத்தவள் அந்த எண்ணங்களை தூக்கி போட்டுவிட்டு ஃபோனில் பேசினாள்.

“ எப்படி இருக்க லக்ஸ்?”

“ எனக்கென்னடா ? உன்னை மிஸ் பண்ணுறதைத் தவிர வேறு எந்த கவலையும் இல்லை”

“ அய்யே .. வெனிஸ் (VENICE)ல வெள்ளைக்காரியை சைட் அடிச்சுக்கிட்டு என்கிட்ட பொய் சொல்லுறியா?”

“ அடிப்பாவி…நான் வேண்டாம்ன்னு உருண்டு பிரண்டு அழுதும் என் பேச்சை கேட்காமல் என்னை அனுப்பி வெச்சவளே நீதானே ! சரி என்ன கனவு கண்ட நீ? ஏதாச்சும் கிலுகிலுப்பா..” என்று இழுத்து வசீகரமாய் சிரித்து வைத்தான் இலக்ஷ்மனன்.

“அய்யே ஆசைய பாரேன்..! நீ ஒரு காலத்துல என் லவ்வே வேணாம்னு சீன் போட்டியே. அதைத்தான் கனவு கண்டேன்”

“ ஹும்கும் கனவுல கூட என்னை டேமேஜ் பண்ணாம இருக்க மாட்டியா செல்லம் நீ?” என்று கொஞ்சிவன், அதன் பின் அவளின் உடல்நிலையைப் பற்றி பேசிவிட்டு ஃபோனை வைத்தான்.

நேற்று மனதில் தேங்கியிருந்த பாரம் கொஞ்சமாய் நீங்கியதைப்போலவே உணர்ந்தாள் ஊர்மிளா. வெற்றிகரமாய் தனது மனவாட்டத்தின் சாயலை கணவனுக்கு தெரியாதப்படி பேசி ஃபோனை வைத்திருந்தாள் அவள். ஆனால் தனிமையில் இருப்பவளின் மனமோ, மீண்டும் நடந்ததைப் பற்றி நினைக்கத் தொடங்கியது.

எப்படி அடுத்தவரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமைகளை தெரிந்து கொள்ளாமலே வாய்க்கு வந்தபடி ஊர்வம்பு பேசிவிட முடிகிறது சிலரால்? புரியவில்லை அவளுக்கு. நேற்று மருத்துவமனையில் அவள் காத்திருந்த நேரம் அவளைப் பற்றி அரசல் புரசலாய் தெரிந்து வைத்திருந்த இருவர், அவளைப்பற்றி வம்பு பேசிக்கொண்டிருந்தனர்.

“ அவளுக்கு என்னடீ ? மாமியார் கொடுமையா? இல்ல நாத்தனார் கொடுமையா? குடும்பமே இல்லதாவனை கட்டிக்கிட்டாள். அவன் இப்போ வெளிநாட்டுல வேலை செய்யுறானாம். வசதியான வாழ்க்கைடீ.. பணத்துலேயே மெதக்குறா..காரு வீடுன்னு ஒரே வசதி தான் போ.. அவன் போயி மூனே மாசத்துல வயித்த தள்ளிட்டு நிற்கிறா.. இவளுக்கு அம்மா தங்கச்சி இருக்காங்க.. ஆனாலும் தனியாத்தான் இருக்காளாம்.. எல்லாம் பணம் பண்ணுற வேலை !” ஊர்மிளாவின் காதுபடவே பேசிவிட்டு போயினர் இருவரும். மற்ற நேரமாய் இருந்திருந்தால் தன் கணவனை யாரும் இல்லாதவன் என்று சொன்னதற்கே அவர்களை உண்டு இல்லை என்றாக்கி இருப்பாள் ஊர்மிளா.

அந்த ஒரு வார்த்தைக்காகத்தானே தன் குடும்பத்தையே உதறி தள்ளி விட்டு வந்திருந்தாள் அவள்! சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இலக்ஷ்மனன், ஒரு ஆஸ்ரமத்தில் தான் வளர்ந்தான். “அநாதை” என்ற பெயர் அவனைக் காலைச் சுற்றிய பாம்பாய் தொடர்ந்தது.  நன்றாக படித்தான், நிறைய உழைத்தான். பிறருக்கும் பயனாகும்படி வாழ்க்கை வாழ்கிறான் என்றாலும் கூட இந்த குறையை அவனால் நிவர்த்தி செய்யவே முடியவில்லை.

அதனால்தான் ஊர்மிளாவின் காதலைக் கூட நிராகரித்தான்.ஆனால், அவள் விடவில்லை ! அன்பின் மொத்த உருவமாய் நின்றாள் அவள். அவனுக்கு அன்பினைத் தந்து தாயாகினாள், கண்டிப்பாய் இருந்து தந்தையாகினாள் !

தன் குடும்பம் அவனை அநாதை என்று புறக்கணிக்கவும், ஒரே நொடியில் அவர்களை அநாதையாய் விட்டுவிட்டு அவனிடம் சேர்ந்தாள் அவள். அவனை அன்பெனும் சிறகுக்குள் அடைக்காத்து வாழ்கின்றாள் ஊர்மிளா.

அப்படியிருக்கையின் தன் முன்பாகவே இப்படி ஒரு பழிச்சொல். இருப்பினும் அவள் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. தனது மேடிட்ட வயிற்றை வருடினாள்.

கர்ப்பக்காலத்தில் கோபப்படக் கூடாது என்பதற்காக பொறுமையாய் போனாள் ஊர்மிளா. அந்த இடத்தைவிட்டு அவள் வந்துவிட்டாள். ஆனால் அவர்கள் சொன்ன வார்த்தையைத் தான் அவளால் உதறிட முடியவில்லை.

பணம் மட்டும் போதுமா வாழ்க்கையில் ? பணத்துக்காகவா, தன் கண்ணீரை மறைத்து கணவனை அயல்நாட்டுக்கு அனுப்பி வைத்தாள் ? இல்லை ! இல்லவே இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.