(Reading time: 20 - 40 minutes)

போக்கிரி படத்துல மண்டை மேல இருக்குற கொண்டையை மறைச்சியான்னு கேப்பாங்களே ..அந்த மாதிரி என்னை மிஸ் பண்ணாத மாதிரியே நடிச்சியே.. ஆனா, வீடியோ கால்ல நம்ம பெட் மேல ஷர்ட் வெச்சு இருந்தியே அதை மறைச்சியா?” என்று கேட்டான் அவன் புன்னகையுடன்.

“ஞெ”வென விழித்தாள் ஊர்மிளா.

“மக்கு, அதை பார்த்ததுமே எனக்கு புரிஞ்சிடுச்சே ! அதுமட்டுமில்ல..உனக்கொரு சர்ப்ரைஸ்”

“என்ன டா?”

“ நீ கன்சிவ்வா இருக்கன்னு தெரிஞ்சதுமே, என் மேலிடத்துல பெர்மிஷன் கேட்டு என்னுடைய ப்ராஜெக்டை சீக்கிரமா முடிக்க அனுமதி வாங்கி, வெற்றிகரமாய் முடிச்சிட்டேன். இந்த ஆராய்ச்சிக்காக நான் எழுதிய கட்டுரையை சீக்கிரமாகவே பப்ளிஷ்  பண்ணுவாங்க.. அனேகமாய் நம்ம பாப்பாவை நீ எனக்கு பரிசாய் கொடுக்கும்வேளை, அந்த ஆராய்ச்சிக்கான அங்கீகாரத்தை நான் உனக்கு பரிசாய் கொடுப்பேன்”என்றவன் அழுத்தமாய் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

“ நானும் பாப்பாவும் ரொம்ப லக்கி லக்ஸ்..ஐ லவ் யூ” என்று ஆத்மார்த்தமாய் கூறிவளை அலேக்காய் தூக்கிக் கொண்டான் இலக்ஷ்மனன். “ அப்போ இந்த நல்லவனுக்கு ஒரு வரம் கொடு தாயே..இனிமே என்னை எப்பவும் தூரமாக அனுப்பாதே! என் ஒரு உயிரை பிரிஞ்சதுக்கே நான் நொந்து போயிட்டேன். இப்போ எனக்கு ரெண்டு உயிர் இருக்கீங்க.. உங்களை பிரிஞ்சு இருக்குறது இனிமே இம்பாசிபல். கூழோ கஞ்சியோ அதை  குடிச்சிட்டு உங்களுக்கு சேவகனாய் இங்கேயே இருக்கேன் மஹாராணி” என்றவன் கூறிட, அவளுக்கு பிடித்தமான அவனது அடர்கேசத்தை பிடித்து இழுத்து ரசித்தவள்

“ அப்படியே நடக்கட்டும் சேவகனே” என்றாள். மனம் நிறைந்திருந்தான் அந்த சேவகன். இனி காலம் முழுதும் பிரியாது துணையிருப்பேன் என்று அந்த நிறைமாத நிலவுக்கு வாக்கு கொடுத்தான். அவனது உன்னத வாக்கு நிலைத்திருக்கும்படி வாழ்த்தி விடைப்பெருவோம்.!

ஹாய் ப்ரண்ட்ஸ்..! ரொம்ப நாட்களுக்கு அப்பறம் ஒரு சிறுகதையோடு உங்களை சந்திப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

“ அவளுக்கென்ன மஹாராணியைப் போல் வாழ்கிறாள் என்று பிறர் சொல்வதை கேட்டதும் தன் துயரங்களை புன்னகைக்கு பின்னால் மறைத்துக் கொள்கிறாள் திருமணமாகிய பெண்” என்ற வாசகத்தை பேஸ்புக்கில் படித்தேன். அந்த பதிவில் இருந்த வலி என் மனதினை பிசைந்தது. திருமணமாகிய பெண்ணின் துயரில் ஒன்றை எடுத்துக் கூற எண்ணியப்போதே இன்றைய வாழ்க்கை முறை பூதகரமாய் என் முன் நின்று மிரட்டி சென்றது.

அனேக குடும்பங்களில் ஆண்கள் அயல் நாட்டிற்கு சென்று வேலை செய்யும் வாழ்க்கைமுறை இன்றியமையாததாய் மாறிவிட்டது. தாயகத்தில் இருந்து வெளி நாட்டிற்கு வேலைக்காக செல்லும் ஆண்களின் உள்ளத்தின் கவலைகளை எத்தனை பேர் உணர்ந்திருக்கோம்? எத்தனை பேர் அவர்கள் தங்களது சராசரி வாழ்க்கையை அடமானம் வைத்துதான் இந்த வாழ்க்கைமுறையை தேர்ந்தெடுத்தார்கள் என்பதை உணர்ந்துள்ளோம்?

“ உனக்கென்னப்பா வெளிநாட்டு வேலை!

உங்களுக்கென்னம்மா உங்க பையன் வெளி நாட்டுல இருக்கான்!

உனக்கென்னம்மா உன் புருஷன் கை நிறைய சம்பாதிக்கிறான்” இப்படி நாம் அள்ளி வீசிடும் கருத்துகளில் பொறாமையைத் தவிர என்ன இருக்கிறது ? உண்மையில் இது வேதனையான வாழ்க்கைமுறை என்பது அனுபவிப்பவர்களுக்குத்தானே தெரியும்?

இவ்வேதனையை மறைத்து எப்போதும் புன்னகையுடன் வலம்வரும் அனைத்து அன்புள்ளங்களுக்காகவும் இந்த கதையை சமர்ப்பிக்கிறேன்.நன்றி!

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.