(Reading time: 10 - 19 minutes)

டுத்து அனைவரும் யுகவனேஷை பாடக் கூப்பிட அவனும் பாடச்சென்றான்.

தன் இப்பொழுதைய நிலையை எடுத்து சொல்லும் வகையில் பாடலைப் பாடினான்.

“ அலைந்து உன்னை அடைவது வாழ்வில் சாத்தியமா

நான் நடந்து கொண்டே எரிவது உனக்கு சம்மதமா

அடி உனக்கு மனத்திலே என் நினைப்பு இருக்குமா

வாழுந்த வாழ்வினுக்கும் வாழும் நாட்களுக்கும்

பொருளே நீதான் உயிரே வாராய்....”

என்று அவன் பாடி முடிக்க அவனது நண்பர்க் கூட்டம் அவனையே .என்னென்றால் பயபுள்ள அவ்வளவு பீல் பண்ணி பாடிடுச்சு.

இறங்கி வந்த யுகவனேஷ் நினைவுகள் அவனிடம் இல்லை.அவளிடம் மட்டுமே இருந்தது.அதனால் அவன் தன் நண்பர்கள் அழைத்ததைக் கூடப் பார்க்காமல்,தன் கால்போனப் போக்கில் சென்றான்.

அவனக்கு அவள் முகம் எப்படி இருக்கும் என்று கூடத்தெரியாது.அவனுக்கு தெரிந்தது அவளது கையெழுத்து மட்டுமே.

அவனது கல்லூரியில் அனைவருக்கும் அவனை மூக்கைய்யாவாகத் தான் தெரியும்.ஆனால்,அவளுக்கு மட்டும் அவனது இன்னொரு முகம் தெரிந்திருக்கு..எப்படி...

அவனை பின்தொடர்ந்து அவனது ஜோல்னாப்பை நண்பர்க் கூட்டம் வந்துக்கொண்டிருந்தனர்.

கல்லூரியின் கடைசிநாள் அனைவரும் பிரியாவிடைப் பெற்று சென்றுக்கொண்டிருந்தனர். ஜோல்னாப்பை கூட்டத்தை அனுப்பிவிட்டு  வந்தவனது உடைமைகளுடன் ஒரு டைரி இருந்தது.

சுற்றுமுற்றும் பார்த்தவன் அதை திறந்துப்பார்க்க அதில் அவனது ஓவியமும் ஒரு கடிதமும் இருந்தது.

“யுவா,நான் இதில் எனக்கு பிடித்த உனது குணங்களையும்,நான் உணர்ந்த உன்னையும் பற்றி  எழுதியுள்ளேன்...எதாவது நான் தப்பாக எழுதி இருந்தாள்...அதை என்னை பார்க்கும்போது சொல்...”

அதன்,பிறகு அவன் படித்த ஒவ்வொன்றும் அவனைப் பற்றி யாரும் அறியாதது.அப்படி இருக்கும்பொழுது...அவள், அவனை அணுஅணுவாய் தெரிந்துவைத்திருக்கிறாள்.

அன்றிலிருந்து அவன் அவளைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான். ஆனால்,யார் அவள்...ஜூனியரா,இல்ல அவன் கூடப் படித்தவளா.... யார் அவள்...அவளைப் பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாது...

தனது நினைவுகளிலே அவன் சென்றுக்கொண்டிருக்க,கீழே இருந்த கல் தடுக்கி அவன் விழ,அவனது நெற்றியில் ரத்தம் எட்டிப்பார்த்தது.

அப்பொழுது..

“யுவா......”என்ற குரல் வந்த திசையைப் பார்த்தவன்.அவனது கண்மணியைக் கண்டுக்கொண்டான்.

அடுத்த நிமிடம்,அவள் அவனது அணைப்பில் இருந்தாள்.அவனது இருகிய அணைப்பே அவனது தேடலை உணர்த்தியது.

அவள், அவனது காயத்தையைப் பார்த்து “டேய், பார்த்து வர மாட்ட..., பாருடா ரத்தம் வருது...” ஆனால்,அவனோ அதைக் கவனிக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவர்களை அவனது நண்பரக்கூட்டம் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தது...

அவளின் எலும்புகள் உடையும் அளவு அனைத்தவன்,அவள் காதோரமாய்...”ஏய்...சூனியக்காரி,ஏண்டி இவ்வளவு நாள் என்ன அலைய வச்ச..”

“.....”

“இப்படியே, நீ இருந்த....”

“என்னடா, செய்வ...”

“இப்பவே.. தாலிக் கட்டிடுவேன்..”

“ம்....ஆசைதான்..”

“ஏய்...சூனியக்காரி...”

“டேய்...,ஒழுங்கா என் பெயர் சொல்லிக்கூப்பிடுடா....,இல்ல நான் உனக்கு எதைப்பற்றியும் சொல்லமாட்டேன்..”

“சரி,சொல்லுங்க Mrs.யுகவனேஷ்….”

“ம்...”

“சரி, சரி...Miss.யாழினி...”

“ம்...,அது...அந்தபயம்...”

“அது,எப்படி...என்னோட..உண்மையான  குணம்லா உனக்கு தெரிஞ்சது.எல்லோரும்,என்னோட status தெரிஞ்சு என்னோட பழகக்கூடாதுனு தான்...நான் அந்த கெட்டப்புள வந்தேன்.எனக்காக இருக்கும் பிரண்ட்ஸ்..வேணும்,என்னகாக இருக்கும் உறவுகளா இருக்கனும்னு நினைச்சேன்..அதான்..”

“ஆனா,யுவா..நீ என்கிட்ட மாட்டிக்கிட்ட...”

“எப்படி என்னப் பத்தி தெரிஞ்சிகிட்ட..”

“உன்னோட கண்ணை வச்சி தான்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.