This is entry #14 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - சூழ்நிலை கதை -கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க
எழுத்தாளர் - அனிதா சங்கர்
பழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி........
அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும்,கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது.........
மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது.....
“ இது,யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த..... அவனோட பெயர்... ம்ம்... யுகவனேஷ் “ என்று கூறினான் ஒருவன்.
“ ஆமாடா, அவனேதான். எப்படிடா....இவன்.. இப்படி...” என்று அனைவரும் அவனை பற்றிய பேசிக்கொண்டிருந்தனர்.
ஆனால் அவனது கண்கள் அவளை மட்டும்தான் தேடியது. ஆனால் அவள்....
எங்கு இருக்கிறாள்.
அவனும் இந்த ஐந்து வருடங்களாக அவளைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறான்.ஆனால் அவள் எங்குபோனாள்.....
இந்தக் கல்லூரி அவனுக்கு அனைத்தையும் தந்தது. அவமானம், வெற்றி, தோல்வி மற்றும் அவளது அன்பு.... அதையும் இந்த கல்லூரிதான் தந்துள்ளது.
இந்த கல்லூரியில் அவன் முதல் நாள் வந்தபொழுது அவனது தோற்றத்தை வைத்து அவனது வகுப்பு மாணவர்களே அவனை கிண்டல் செய்தனர்.
ஆனால் அதே வகுப்பு மாணவர்கள் இன்று அவனை ஒரு ஆச்சர்யம் போல பார்த்தனர்.
அவனது நடை, உடைபாவனை அனைத்தும் மாறிவிட்டது. மாற்றியவள் அவள். ஆனால் அதை கண்களால் பருகவேண்டியவளோ எங்கு இருக்கிறாள்.
“டேய், மூக்கையா யாரடா தேடுற..”என்று கேட்டது ஒரு பெண்ணின் குரல்.
“ஏய்..., ஜோல்னாப்பை...உங்களைத்தான் தேடுறேன்.எங்க வருண், திவாகர்,அபி, வான்மதி..நீ...”
“ஹலோ, ஒரே டைம்ல இவ்வளவு கேள்வியா..,நீயாடாஇப்படி....,நல்லா மாறிட்ட...”
“ஹாய் மாஸ்டர்...”என்று குரல் வரும் பக்கம் திரும்பினர் இருவரும்.அவன் கூறிய அனைவரும் வந்துக்கொண்டிருந்தனர்.
“என்னப்பா..,பண்றிங்க ரெண்டுபேரும்....” என்று கேட்டாள் வான்மதி.
“சும்மா..”என்று கூறினான் யுகவனேஷ்.
விழாவிற்கான அறிவிப்பு வரவே அனைவரும் விழா நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
கால்கள் மாடிப்படிகளில் முன்னோக்கி செல்ல,அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றன.
இவர்களது நட்பு மட்டும் தான் அவனையும் அறியாமல் அவனுக்கு கிடைத்தது. எல்லாம் இந்த ஜோல்னாப்பையாலதான்...
நினைவுகள் அவனுக்கு இவர்களது அறிமுகம் கிடைத்த நாளை நோக்கி சென்றன.
இவர்களது கல்லூரியில் ஒரு முறை அனைவரும் ஊட்டி சென்றனர்.ஊட்டியிலிருந்து கிளம்பி இவர்கள் வரும் வழியில் ஒரு தாபாவில் சாப்பிடுவதற்காக வண்டி நிற்க இவன் வருவதற்குள் வண்டிச்சென்று விட அந்த திசையை நோக்கி பார்த்தவன் அப்படியே உறைந்தான்.
ஏனெனில் அங்கே இவனிற்காக இந்த ஜோல்னாப்பை தனது நண்பர்கள் அபி,திவாகர்,வருணுடன் நின்றுக்கொண்டிருந்தாள்.
அன்று உருவானதுதான் இவர்களது நட்பு.அவர்களிடம் கூட இவன் அவ்வளவு பேசியதில்லை.இவர்களுக்கே அப்பொழுது இவனைப் பற்றியோ,இவனது குணம் பற்றியோ தெரியாது. ஆனால்,அவளுக்கு எப்படி தெரிந்தது....
ஒரு வழியாக விழா இனிதே துவங்கியது.அவனது அனைத்து professorகளும் அவர்களது batchயை பற்றி பேச ஆரம்பிக்க அனைவரும் அவர்களது மலரும் நினைவிற்கு சென்றனர்.
அவன் இந்த கல்லூரியில் முதல் நாள் வந்தபொழுது அனைவரும் அவனை ஒரு கேளிப்போருளாகவே பார்த்தனர்.அன்று மட்டும் அல்ல,இந்த கல்லூரியை விட்டு போகும் வரை கூடதான்.இந்த மாற்றங்கள் அனைத்தும் அவள் உணர்வில் இருந்தது.இன்று இவன் உருவில் இங்கே உயிர் பெற்றுள்ளது.
ஒருவழியாக அனைவரும் பேசி முடிக்க juniors அவர்களது seniorsக்கு சில entertainment programs arrange செய்து இருந்தார்கள். அது இனிதே துவங்கியது.
டான்ஸ், சாங்க்ஸ் , கேம்ஸ் என போய்க்கொண்டிருந்தது.
அனைவரும் ஜோல்னாப்பையை பாட அழைத்தனர்.அவளும் பாடச் சென்றாள்.
“ஏய்.. ஒழுங்கா வேறப் பாட்டு பாடிடு ...புரிதா...”என்று அபிக் கூறியதையெல்லாம் கேட்காமல்,அவள் எப்பொழுதும் பாடும் அதே பாடலைப் பாடினாள்.
“வான்மழை விழும்போது மலைகொண்டுகாத்தாய்
கண்மழை விழும்போது எதிலென்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா என் கண்ணா
அதை நீ காணக் கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே காப்பது உன் தீண்டலே
உயிர் தர வா
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான்
கண்ணாடி பொருள் போலடா..”
என்று அவள் பாடி முடிக்கும்பொழுது அனைவரும் மெய்மறந்திருந்தனர்.அவ்வளவு உயிரோட்டமாக பாடியிருந்தாள்.
vaazthukal...
Nalla flow
Conversations ellam romba nalla irundhadhu including the nick names...Andha diary scene was super...Nalavela Jolnapai nangala oru vidhama karpanai seivatharukk badhula ningale adhu eppadi irukkumn sollitinga
Hero konjam tubelight thanga mam
and nick name very comedy
keep it up
Semma jolly aa irunthuchu kathai..
Especially antha nicknames
Dialogues
And diary Idea super ... I used to do it also
Climax romba lively aa lovely aa irukku ma...
Kutty cute movie paartha maathiri thonichu...
Love, friendship , being supportive, singing song...
Entha vishayathula vizhunthen theriyala..but vizhunthuthen..super ..thanks you made my day...