(Reading time: 10 - 19 minutes)

ப்படிடீ..ஜோல்னாப்பை..”

“நாம ஊட்டிப் போனப்ப,எனக்கு இடம் இல்லன்னுதான்,உன் பக்கதுல உட்கார்ந்தேன்.அந்த தாபால நீ பஸ்ல ஏறாததும்..,சரி பாவம் பையனு நான் இறங்கி நின்னா..நீ வந்துப் பார்த்தியே ஒரு பார்வை .... எப்பா..அதுல எவ்வளவு கோபம் இருந்ததுத் தெரியுமா...அப்படியே...சிவன் நெற்றிக்கண் திறந்தமாதிரி..”

“அப்புறம்,கொஞ்சங்கூட..அறிவே இல்லாம தனியா வெயிட் பண்ணா..”

“நான்,ஒன்னும்..தனியா வெயிட் பண்ணல...”

“ம்ம்..”

“அப்பதான்..தெரிஞ்சது..நீ கோபத்த...யார்கிட்டையும்..காமிக்க கூடாதுனு தான்...யார்கிட்டையும்..பேசலனு..”

“ம்ம்ம்..”

“அப்புறம்..,உன்னோட சோடாப்புட்டி,அப்புறம்..உன்னோட ஸ்டைல்..எல்லாம் பொய்னு..தெரிஞ்சது.....”

“இப்ப..என்ன.. என் கண்ணுல தெரியுது..”

“இப்ப.உன்னோடக் கண்ணுல ஒரு லவ் ...தெரியுது”

“எல்லாம்..இந்த..சூனியக்காரிக்காகத்தான்...”

“அது என்னடா சூனியக்காரி...”

“பின்ன..சூனியக்காரி...மாதிரி..என்ன மயக்கி..என்னப்பத்தி..மைப்போட்டு தெரிஞ்சிவச்சிருக்க....”

“அப்படிலா..ஒன்னும்..இல்ல..,நீ சரியான tubelight,நானும் அஞ்சு வருஷமா ஒவ்வொரு முறையும்..ஒரே பாட்டு பாடி உனக்கு குளு தந்தா..., உனக்கு மூளையே இல்ல...”

“ம்...என்ன பண்றது....அதுக்கும் சேர்த்துதான்,நீ வச்சிருக்கியே...”

அதுவரை அமைதியாக இருந்த நண்பர்கள் ”என்னடா..நடக்குது..,நீ விழுந்த உடனே...இவ...யுவானு..ஓடி வரா..,நீ சூனியக்காரிங்குற....”என்று கேள்வி எழுப்பினான்

“பார்த்தா..,தெரில..,லவ் சீன் போகுதுல...”என்று கூறினாள் யாழினி.

“சும்மா இருடி.., எனக்கு சின்ன வயசுல பயங்கரக் கோபம் வரும்டா.அதனால ஸ்கூல் டேல நான் நிறைய இழந்திருக்கேன்.அதான் காலேஜ்ல ..அப்படி ஒரு அப்பாவியா வந்தேன். எங்க எனக்கு தெரியாம யார்கிட்டையாவது, கோபத்த காமிச்சிட்டா...,அதனாலதான், நான் யார்கிட்டையும் பேசாம இருந்தேன்.ஆனா இவ எனக்கு எழுதியிருந்த டைரியப் பார்த்து நான் அப்படியே, விழுந்துடேன்.

நான், இந்த காலேஜ்ல யார்கிட்டையும் க்ளோஸாப் பழகுல,அப்படி இருக்கும்பொழுது அப்படியே என்னோட வளந்தவ மாதிரியே எழுதியிருந்தா...

அப்ப...,அவ எவ்வளவு என்ன லவ் பண்ணியிருப்பா...அத யோசிச்சுதான்..., நான், எனக்கே தெரியாம அவளை லவ் பண்ணிடேன்...,இவ டைரிய படிச்ச பிறகு இந்த விஷயத்துக்கெல்லாம் கோபபட்டோமா, அப்படின்னு நினைச்சு இப்பக் கோபமே வரல... ”என்றான் யுகவனேஷ்.

“நானே..,உன்கிட்ட..எப்படி விழுந்தனு தெரியல..” என்றாள் யாழினி.

“எப்படியோ..எங்களுக்கு தெரியாம ஒரு லவ் ஸ்டோரி ஓட்டி இருக்கிங்க..”என்றாள் அபி.

“ம்ம்ம்.., போதும்..கொஞ்சம் கிளம்புரிங்களா...,லவர்ஸா, தனியா விடுங்கப்பா....”

என்று யாழினி கூறியதும் அனைவரும் சென்றனர்.

மீண்டும் அவளை அனைத்தான் யுகவனேஷ்.அவளது காதுகளின் ஓரம் கூறினான்.

“எப்படிடீ..உனக்கு என்னப்பத்தி....., அப்படி புரிஞ்சுவச்சி  இருக்க....,எனக்கு புடிச்ச கலர்ல இருந்து, என்னோட கோபம் வரைக்கும்.....”

“உன்ன எப்படிலாம் follow பண்ணணு, என்னகுதான் தெரியும்...”

“அது சரி, அதுல எதுக்குடி உன்னப் பத்தியும் எழுதியிருக்க..”

“ம்...,அதனால்தான்...,நீ எனக்கு புடிச்ச மாதிரி வந்திருக்க..”

“போடி...ஜோல்னாப்பை..,ஆமா இன்னமும் நீ  ஜோல்னாப் பை தான் use பண்றியா..,நான் பாவம்டி., உனக்கு ஜோல்னாப்பை வாங்கி தந்தே என்னோட பணம் கலியாகிடும்.”

“டேய்.., அது என்னடா  சந்தோஷ்சுப்ரமணியம் படத்துல ஜெனிலியா, கலர்கலரா use பண்ணா ரசிக்கிறிங்க. நாங்க அதே மாதிரி செஞ்சா கிண்டல் பண்றிங்க. இந்த பசங்க மூளையே இப்படிதான்டா.... ”

“அம்மா..,தாயே..,நான் ஒன்னும் சொல்லுல...,நீ கேட்டா வாங்கி தரேன்....என்ன விட்டுடு...”

“ம், சரி.என்னோட லவரா போனதாலா...,மனிச்சு விடுறேன்...”

“ நான், என்னோட  குணத்தை  மாற்ற முடியாம என்னோட உருவத்த மாற்றிக்கிடேன். ஆனால், நீ அந்தக் குணத்தை அப்படியே மாத்திட்ட..., இப்ப எனக்கு கோபமே வரமாட்டங்குது...தெரியுமா. எல்லாம் உன்னால...”

“அப்புறம் என்னப்பன்றது கல்யாணத்துக்கு அப்பறம் நீ சிடுமுஞ்சா இருந்தா அதான்..,ஆனா, நான் உங்களை மாற சொல்லலியே...”

“ஆனா..,உன்னாலதான் நான் நானா இருக்கேன்டீ...”

“ஏனா..நான் உன் சரிபாதிடா...” 

“ம், சரி வா போகலாம். எல்லோரும் வெயிட் பண்ணுவாங்க” என்று அவன் சொல்ல இருவரும், தங்கள் நண்பர்க் கூடத்தை நோக்கச்  சென்றனர்.

அப்பொழுது, அவன் செல் ஒலித்தது

அன்பே நான் இருந்தேன் வெள்ளைக் காகிதமாய்

என்னுள் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்...”

A WOMAN CAN`T CHANGE A MAN  BECAUSE SHE LOVES HIM;

A MAN CHANGES HIMSELF BECAUSE HE LOVES HER.”

Hi, frds…, எனக்கு இந்த concept தோணுச்சு, அதனால, எழுதுனேன்.எப்படி கதை வந்து இருக்குனு தெரியல.அதனால நீங்க உங்க கருத்த மறக்காம சொல்லுங்க

 

This is entry #14 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை -கதையை தொடக்கத்தில் இருந்து தொடர்க

எழுத்தாளர் - அனிதா சங்கர்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.