(Reading time: 19 - 38 minutes)

2017 போட்டி சிறுகதை 45 - அபூர்வ வரத்தின் ஆபத்து - ஷிவானி

This is entry #45 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - ஷிவானி

Nose

இந்த கதையிலோ, கருத்திலோ, வாக்கியத்திலோ, வார்த்தையிலோ, எழுத்துப்பிழையோ இருந்தால் என்னை மன்னியுங்கள். இக்கதை யாருடைய மனதையோ, மதத்தையோ, இறைவனையோ, தாழ்வாக கூரும் நோக்கத்தோடு எழுதப்படவில்லை. எங்கேயேனும் அவ்வாறு என்னெழுத்து பொருளுரைத்தால் என்னை மன்னிக்கவும்……

முக்கண்ணன்” நான், ஆனால் என் மூன்று கண்களையும் இருக்கமூடி அமர்ந்துள்ளேன். தியானதில் இருப்பதாகா எண்ணவேண்டாம், பயத்தால். “ஈசனிர்க்கே பயமா”? என்று ஆச்சர்யம் வேண்டாம், ‘எனக்கு எப்பொழுதுமே பயம்தான்’. அதை அறியாத மூடர்கள், நான் தியானத்தை விரும்புவதாகவும், அது எனக்கு மிகவும்பிடித்த ஒன்று என்றும் புரளியை கிளப்பி விட்டனர். அதை தவறான கருத்து என்று சொல்ல இயலாத நானும் கௌரவத்திர்க்காக அதை ஒப்புக்கொள்ளும் சூழல் வந்தது.

“அப்படி என்ன பயம் எனக்கு, என்று சிந்திக்கின்றீரா”? நானே சொல்கிறேன் கேளுங்கள், “என் பக்தர்களின்மேல் நான் கொண்ட பயம்”, “அவர்களின் பக்தியின்மேல் பயம்”, “என்மீது கொண்ட நம்பிக்கையினால் வரம்கேட்டு அவர்கள் செய்யும் தவத்தின்மேல் பெரும்பயம். “பித்தன்”, என பெயர்க்கொண்ட பாவமோ? என்னவோ? என்னை உண்மையிலேயே பித்தன் என நினைத்து எத்தகைய பெரும்வரத்தையும் என்னிடம் பெற தவத்தில் அமருகின்றனர். அதன்முடிவு அவர்களின் வெற்றி, அதன் ப்ரயோகம் என்மீது, இதன் உதாரணங்கள் பல அதை தாம்அனைவருமே அறிவீர்கள்.

“வெங்கடாசலபதி” என்பவன் மனிதர்களுக்கு மட்டும் ஆபத்பாண்டவன் இல்லை, எனக்கும்தான் என்பதை நான் வழங்கிய வரத்தின் முடிவில் (வரத்தை துஷ்ப்ரயோகம் செய்த) என்பக்தர்களை அழிக்க உதவும் காட்சிகளில் உணரலாம் / காணலாம். அதர்க்காகத்தான் அவனை “தயாநிதி” என்று அழைக்கின்றார்களோ என்று எண்ண வேண்டாம். நானும் அதைபோன்ற உதவிகளை பலகாலங்கலாக அவனிர்க்கு செய்துவருவதும் தாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

“எங்களின் இந்த புறிதல் ஒப்பந்தத்தை அவன் மறந்த காரணமே, இன்றைய என்பயத்தின் காரணம். ஒருவர் வரத்தை கொடுக்கும் முன்னறே அதை மற்றவர் எப்படி மாற்றிபேசி, வரம் பெற்றவரை அழிப்பது என்பது எங்களின் வழக்கமான மானாடாக இருக்கும்”. ஆனால் இம்முறை அதைமரந்து புரட்டாசிமாத கொண்டாட்டம் என்று சொல்லி “திருப்பதி” சென்றவனோ திரும்பியே வரவில்லை. “மாதம் முடியாமல் மாதவனை காணயியலாது” என்று அறிந்ததால் மாதத்தின் முடிவுநாளான இன்றுவரை, தியானத்தின் போர்வையில் ஒளிந்து இருக்கிறேன். இதை எதையுமே அறியாத அப்பாவி தேவர்கள் நான் கண்களைதிறக்க காத்திருக்கின்றனர்.

“ருத்ரன்” என என்பெயர் கொண்ட ஒருபக்தன் “25” வருடங்களாக என்னிடம் வரம்வேண்டி தவத்தில் உள்ளான். அவனின் வரமும், வரத்தின் விளைவுகளையும் அறியாத தேவர்கள் இன்றே அவனிர்க்கு நான் வரத்தை வழங்க இருதிநாள் என்னும் நியதியை எனக்கு அறிவுருத்த என்முன் நிற்க்கின்றனர். ‘அப்படி என்ன வரம் அது’? என்று குழப்பமாக உள்ளதா…… தேவர்களுக்கும், அவர்களின் நியதிகளுக்கும் கட்டுப்பட்டு இன்னும் சில வினாடிகளில் ருத்ரனின் முன் தோன்றவிருக்கிறேன் அப்பொழுது அவன் வாயிலாகவே அறிவீர்களாக.

‘ருத்ரா’ என அழைத்தான் ‘பிறைசூடன்’, கண்கள் கலங்கியவாறு “அய்யா”! எனதிகைத்து நின்றான் பக்தன். மனதில் ஆனந்த கூத்தாடிய ருத்ரன், “எனக்கு வரம்வேண்டும் சுவாமி” என்றான். எல்லாம் அறிந்த ‘கைலாய நாதன்’ என்னவரம்? கேள் மகனே, என சிரித்தவாறு பயத்தை மறைத்து நின்றான். “என்மனைவியும், என்தாயும் தொடர்ந்து ஒருவர்மீது ஒருவர் என்னிடம் புகார் அளித்து கொண்டே இருந்தனர். அவர்களிள் எவர் சொல்வது உண்மை என்பதை அறிய இயலாமல் இருவரிடமும், தம்மைப்போல் மௌனம் காத்து வந்தேன்.

அவர்களின் கோபத்தின் விளைவாக, ‘இருவரும் நான் பதில் பேசும்வரை வீட்டில் சமையல் செய்வதில்லை’ என்னும் முடிவிற்க்கு வந்தனர். தாமே நன்கு அறிவீர்கள் ‘நான் உணவை உயிரினும் மேலாக கருதுபவனென்று’, ஆதலால் வேருவழி அறியாத நான், உண்மையை அறிய தம்மிடம் வரம் வேண்டி இப்பொழுது நிற்க்கிறேன்”. பெரிதாக ஏதும் இல்லை அய்யா, “எவர் எங்கு பொய் பேசினாலும் அவர்களின் மூக்கு அக்கணமே உடைந்து விழவேண்டும்” என்றான் ருத்ரன். தங்கள் அனைவறிர்க்கும் இப்போது புரிந்ததா? ஈசனின் பயத்தின் காரணம். இப்பொழுது வரத்தை தந்துவிட்டால், பிறகு மாற்றிபேசினால் ஹரியும், ஹரனும் கூட மூக்கில்லாமல் நிற்க்க வேண்டி இருக்கும்.

“என்ன கொடும ஈஷ்வரன்”?..........

தியான போர்வையின் மேல்கொண்ட நம்பிக்கையால், தன்மூக்கை காக்க இயலும் எனநினைத்து பயத்தை தூரத்தள்ளி ‘அப்படியே ஆகட்டும்’…… என்று கூறினான். தன் தாய், மனைவி இருவரின் பொய் பேசும் பழக்கத்தை மட்டும் நிருத்த முயர்சிக்காது, சுயநல எண்ணம் விடுத்து “உலகெங்கும் பொய் பேசுபவர்களின் எண்ணிக்கையை குறைக்கும்” எண்ணத்தோடு வரம் வேண்டிய ருத்ர, உன் நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும் வண்ணம், யான் உனக்கு மற்றொரு வரத்தையும் தருகிறேன் என்றார்.

“நீ எப்போதெல்லாம் என்னை சந்திக்க எண்ணுகிறாயோ, அப்போதெல்லாம் நீ அக்கணமே வானுலகம் வந்தடைவாயாக” என்று சொல்லிக்கொண்டே மறைந்தார் “சொக்கநாதர்”. வரங்களை வெற்றியாக ஈட்டிய ருத்ரன் ஆனந்தத்தோடு வீடுனோக்கி சென்றான். 25 வருட, உலக மாற்றத்தை ஏர்க்கத்தயங்கிய மனதிர்க்கு, ‘இதுவே நிதர்சனம் இதை ஏற்றாக வேண்டியது கட்டாயம்’ என நினைத்தவாறு சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.