(Reading time: 19 - 38 minutes)

ப்போதாவது மனம் திருந்து ருத்ரா. உன் தவறுகளை உணர்வாயாக. இதுவரை நீ செய்ததனைத்தையும் நினைவு கூர்வாயாக”, என்று கூறியவாறு தனது வலகரத்தை ருத்ரனின் தலைக்கு மேல் உயர்த்தினான் நாராயணன். “வரம் வேண்டி தவத்தில் அமர்ந்த நாள் முதல், இன்று தேவலோகம் வந்து தான் மூக்கை இழந்ததுவரை அனைத்தையும் க்ஷண நேரத்தில் உணர்ந்தான் ருத்ரன். “அய்யா……… என்னை மன்னிப்பாயாக” என்று கதரியவனாக, தியான கோலத்தில் அமர்ந்திருந்த சதாசிவனின் தாழ் சரண்புகுந்தான். “மக்களின் வார்த்தையில் மதிமயங்கி, மதிசூடனின் மூக்கையே உடைக்க முயன்ரேனே…… எத்தனை பெரும் பாவத்தை செய்யத்துனிந்தேன் சுவாமி”…… என்று அழத்துவங்கினான்.

கண்களைத்திரந்த காசிநாதன், எழுவாயாக ருத்ரா என்று வாய்மொழிந்தார். “மனிதர்கள் தவறு செய்வது சகஜம்தான், ஆனால் அதை மாதவன் எடுத்துரைத மறுகணமே திருத்திக்கொண்டாயே அதுவே உனது சிறப்பாகும். நடந்தவைகளில் உன்னை முழுவதுமாக குறைக்கூற இயலாது என்பதை அறிவேன். மக்கள் உன்னை புகழ்ச்சி போதையில் தள்ளினர், அதன் விளைவாகவே, நீ தவறான பாதையில் நடந்தாய்” என்று கூறி தன்பக்தனின் தவறுகளிர்க்காக தண்டிக்காது, கருணையுடன் மன்னித்தான் கருணாகரன். “இனி எதை செய்து, என்பாவத்தை தொலைப்பேன் அய்யா”………… என்று வார்த்தைகளில் குமுறினான் ருத்ரன்.

“என் உண்மையான பக்தனாக இருந்த உன்னை, இன்று எனக்கு எதிராக செயல்பட செய்தனர் என்பதையே, நீ இக்கணம்வரை உணராதவனாக இருந்ததாய். இது உனது அறியாமையால் நிகழ்ந்தவை, எனவே உனக்கு வழங்கிய வரங்களை திரும்பபெருவதன் மூலம் உன்பிழைகளை மன்னிக்கின்றேன் எழு” என்றார். வணங்கும் பாவத்தோடு எழுந்து நின்ற ருத்ரன், “அய்யா, வரத்தை திரும்ப பெற்றதைப்போல் அதன் பலனையும் திரும்ப பெற வேண்டுகின்றேன் சுவாமி” என்றான். மௌனம் காத்தவாறு நின்றான் மதியழகன். “நீர் படைத்த மனித குலத்தில், எனது தவறான வரம் எந்தவிதமான மாற்றத்தையும் பிழையாக நிலைத்திருப்பதை நான் விரும்பவில்லை சுவாமி”……… என்று மனமுறுகி கேட்டான்.

அவனின் சுயநலமற்ற கோரிக்கையை கேட்ட நீழ்சடையன் மனம் மகிழ்ந்தார். “ஒரு நிபந்தனையோடு, உன் கோரிக்கையை ஏற்க்கின்றேன்” என்றார். “வரம், அதன் விளைவு, என அனைத்திர்க்கும் நீயே வித்தாக அனாய் ஆதலால் உன்னை தவிர்த்து மற்றவர் அனைவரும் அவ்வரத்தின் பலனை இழப்பர்” என்றார். “தமது சித்தம், எனது பாக்கியம்” என்று கூறிய ருத்ரன் அம்முடிவினை மனமார ஸ்வீகரித்தான். “அப்படியே ஆகட்டும்” என்று கூறி ஆசினல்கினான் ஞாணமூர்த்தி. “தவறான வரம் வேண்டுவது தவறு, என்னும் முடிவை எடுத்துரைக்கட்டும் உனது இன்னிலை” என்றார். “இனி எப்பிழையும் செய்யாது வாழ்வாயாக” என்று கூறினார்.

தன் ஈசனே, தாயுமானவர் என்பது இன்று அவரின் கண்டிப்பும், மண்ணிப்பும் நிறைந்த வார்த்தைகளிள் கண்ட ருத்ரன் உலம் குளிர்ந்தான். கைகளை கூப்பி வணங்கியவனாக நின்ற ருத்ரனை, பொன்னம்பலனும், மாதவனும் அருளி, மண்ணுலகம் அனுப்பினர். தம் முகங்களில் மூக்கை கண்ட மக்கள் அனைவரும் ஆனந்தம் கொண்டனர். இதர்க்கு ருத்ரனே காரணமாக இருக்க கூடும் என்பதை சரியாக கனித்த மக்களனைவரும் இவ்வாறாக பேசத்துவங்கினர். “நாம் பொய்பேசியதின் விளைவாக துலைத்த மூக்கை இன்று நாம் அடைந்தோம் நிச்சயம் இது ருத்ரனின் கோரிக்கைக்காக அந்த சாம்பசிவன் அருளியதாகத்தான் இருக்கவேண்டும்”.

“ஆனால் நாமோ, ருத்ரனிக்கு தவறான வழி காட்டிவிட்டோமே”, என்று தம் தவறினை நினைத்து வறுந்தத்துவங்கினர். “இனி என்றும் சூழ்ச்சிகள் ஏதும் செய்யாது, பொய் பேசாது, ஒற்றுமையோடு வாழும் முடிவிர்க்கு வந்தனர்”. ருத்ரனின் வருகைக்காக தமது ஊரிலிருக்கும் சுவாமி சுந்தரேஷ்வரரின் கோவிலின் அருகில் காத்திருந்தனர். வான்வழி வந்த ருத்ரனின் வருகையை கண்டு மகிழ்சியடைந்தனர். மண்ணில் இரங்கி தம்மை நெறுங்கியவனாக நடந்த ருத்ரனின் முகத்தை கண்டு அதிர்ச்சி கொண்டனர். “என்ன நேர்ந்தது ருத்ரா”? “உனக்கேன் இன்னிலை”? என்று வினவிய மக்களிர்க்கு “எல்லாமே முடிஞ்சு போச்சு”….. என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி….!

மனிதகுலம் கடந்த பல வருடங்களாக பொய் பேசுவதை தமது உரிமை என்பதைப்போல் கர்பனை செய்துக்கொண்டுள்ளது. அதை தவறான கருத்து என்று எடுத்துரைக்க நான் எடுத்த ஒருசிறு முயற்சியே இக்கதை. அரிட்சந்திரன், தர்மன், தசரதன், என சில மாமனிதர்கள் வாழ்ந்த நாடுதான் நம் பாரதம். காலத்தின் கட்டாயமே இன்றய நமது மாற்றம் என்பதை உணர முடிந்தாலும். மனிதன் காலத்தை வெல்லவேண்டும் என்பதே எனது ஆசை……. “முடியும் வரை முயன்று பார்க்களாம் வாருங்கள்”.

This is entry #45 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை...

எழுத்தாளர் - ஷிவானி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.