(Reading time: 19 - 38 minutes)

காலமாற்றமல்ல நிதர்சனம், அவனின் தாய், மனைவியின் சண்டையே என்றுமே மாற்ற இயலாத நிதர்சனம் என உணர்த்தியது அவர்களின் பேச்சொலி”. வீட்டில் நுழைந்த ருத்ரனை வரவேற்க்க மறந்து இருவரும் வழக்கம் போல் புகார் சொல்லத்துவங்கினர். “இருவரில் ஒருவரின் உண்மையை அறிந்து மற்றொருவர் மூக்கை பொய்க்கொண்டு அருக்க வருடங்களை வரத்திர்க்காக தொலைத்த ருத்ரனுக்கு தரையில் விழுந்த இருமூக்குகளையும் கண்டு ஏற்பட்டது பெரும் ஏமாற்றம்”……….

மூக்கைத் தொலைத்ததும் அழத்துவங்கிய இருவருக்கும், இது தன் வரத்தின் பலன் எனகூறி அவர்களை சமாதானப் படுத்தினான் ருத்ரன். “தவறை உணர்ந்த இருவரும் இன்றுமுதல் என்றுமே பொய் பேசாது வாழும் முடிவிர்க்கு வந்தனர். இதுவரை பேசிய பொய்களின் பலனையும், அதனால் தம்வாழ்வில் தாம்சேர்த்த பாவங்களையும், இறைவனை தொழுது தொலைக்க முடிவுசெய்து, ருத்ரனை கடைக்குச் சென்று பூ, பழங்களை வாங்கிவரக் கூறினர்”.

பிச்சிபூ, சாமந்தி, மல்லிகை எனஅனைத்து மலர்களையும் கண்ட ருத்ரன் துளசியின் விலையை வினவினான். புரட்டாசி மாதத்தை காரணமாக்கிய பூக்காரி 1 மொழம் 20ரூபாய் என சொல்லக்கேட்ட ருத்ரன், “என்னமா, என்ன ஏமாத்த பாக்குரையா”? என்றான். “நா, என்ன செய்ய? விக்கர நாங்கதா ஏமாந்துபோறோ சாமி, எல்லா லாபமு தோட்டத்துகாரங்களுக்குதா” என்று சொல்லி முடிக்க, “அவளின் மூக்கு பூக்கூடையில் விழ, வரத்தின் வேகத்தை கண்டு ஆனந்தம் கொண்டான் ருத்ரன்”.

வரத்தின் உண்மை அறியாமல் பொய்பேசிய அனைவறின் மூக்கும் உடையத்து விழத்துவங்கியது. “ஆரம்பத்தில் இதை பொய் அறியும் வழி, இதன் மூலம் தன்தாய், மனைவியைபோல், அனைவரும் தம்தவரை உணர்ந்து திருந்திவிடுவர் என நினைத்து மகிழ்ந்தான் ருத்ரன்”……. உடைந்த மூக்குகளின் எண்ணிக்கையை விட வேகமாய் பரவத்துவங்கியது ருத்ரனின் வரமும் அதன் பலனும்.

“பொய் மனிதர்களை அடிமைப்படுத்தி உள்ளதா? இல்லை மனிதர்கள் பொய்யை அடிமையாக்கி தம்வசம் வைத்துள்ளனரா? என்னும் கேள்வி மனிதர்களின் மனதில் மெதுவாக எழத்துவங்கியது”. மூக்கைத் தொலைத்ததின் பலனாக சிலர் பொய்பேசும் பழக்கத்தை விடுத்தனர். மூக்கைக் காக்க சிலர் பொய்யைத் துரக்க முயன்றனர். “அவர்களின் மாற்றம், அவற்றால் ருத்ரன் மேல் அவர்களுக்கு எழுந்த மரியாதை ருத்ரனுள் கர்வத்தை விதைத்தது”.

நாட்கள் உருண்டோடிய வேகத்தில் முகத்தில் மூக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணும் நிலையை எட்டியது. முதலில் மூக்கையுடைய மனிதர்களை காணும் போதெல்லாம், ‘தாம் பொய் பேசியது தவறு’ என்று குற்ற உண்ர்ச்சியில் தவித்த மக்களனைவரும், நாளடைவில் அவர்களின் மேல் விரோதம் கொண்டனர். “மூக்கை இழந்தவர்களில் சிலர் சமத்துவம் பாராட்டும் எண்ணத்தோடு, எஞ்சிய சிலரையும் சூழ்ச்சியின் வாயிலாக தம்கூட்டத்தில் சேர்க்க முயன்றனர். அதில் வெற்றியும் கண்டனர், அதன் விளைவு முகத்தில் மூக்கை கொண்ட ஒரே மனிதன் ருத்ரனென ஆனது”.

சிலராக முயன்றவர்கள், பலராக மாறி ருத்ரனின் மூக்கை பொய்கொண்டு உடைக்க முயன்றனர். “பலமாதங்களாய் அவர்களின் சூழ்ச்சி வலையில் விழாது தப்பிவந்த ருத்ரன், அதை தன் திரமையென நினைத்து கர்வ வலையில் விழுந்தான்”. அவர்களின் முயர்சிகள் பலிக்காது போனதால், அவன் மூக்கை உடைக்க பலவழிகளை யோசித்து அதில் இதுவே தலைச்சிரந்தது என்னும் முடிவிர்க்கு வந்தனர். அதை ப்ரயோகிக்கும் எண்ணத்தோடு ருத்ரனை சந்திக்க அவனின் வீட்டிர்க்கு சென்றனர்.

“அய்யா, அய்யா”, என்று அழைத்தவாறு நின்ற மக்கள் கூட்டத்தைக்கண்ட ருத்ரனின் மனைவி, “யார் நீங்கள்”? “என்ன வேண்டும் தமக்கு”? என்று வினவினாள். அவளின் குரல்கேட்டு வீட்டிலிருந்து வெளிவந்தான் ருத்ரன். அவனைகண்டதும் “பாருங்கள், பாருங்கள், இவர்த்தான் அந்த அதிசய மனிதர்” என்று அனைவாரும் பேசத்துவங்கினர். “யார் நீங்கள்”? என்று ருத்ரன் கேட்க, “நாங்கள் அனைவரும் தம்மை தரிசிக்க வந்த பக்தர்கள்”, என்று கூரியவாறு தம்திட்டத்தின்படி பேசத்துவங்கினர். “என்ன, பக்தர்களா”?....... என்று திகைத்தான் ருத்ரன். “ஆம், அய்யா…… நாங்கள் அனைவரும் தம்மையே பூஉலகின் இறைவன் என்னும் முடிவிர்க்கு வந்தோம், ஆதலால் தம்மை தரிசிக்க வந்தோம்” என்றனர்.

அவர்களின் வார்த்தைகளை கேட்ட ருத்ரன், அதை மருத்துபேச முயலும்முன்னரே, மக்கள் அனைவரும் இவ்வாராக பேசத்துவங்கினர். “எத்தனை அழகான மூக்கு?....... ‘நிச்சயம் இவர் புன்னியராகத்தான் இருக்க இயலும்’!! என்று கூர, ‘இல்லை, இல்லை, இது அவரின் அபூர்வ வரத்தின் பலன்’ என்று சிலரும் பேசிக்கொண்டனர். “என்னதான் அது ஈசன் தந்த வரமாக இருந்தாலும், பொய்பேசாது மூக்கை இன்றுவரை முகத்தில் காத்துவருவது அவரின் திரமையே”……. “நிச்சயம் ருத்ரன் பாராட்டிர்க்கு உரியவரே, ‘உலகிலேயே மூக்கைக்கொண்ட ஒரே மனிதன்’ என்பது எத்தனை பெரிய சாதனை”!!!! என்றேல்லாம் பேசி ருத்ரனின் மனதில் ஆனவம் என்னும் விஷத்தை கலந்ததின் மூலம் தம்வருகையின் வெற்றியை ஈட்டினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.