(Reading time: 73 - 145 minutes)

2017 போட்டி சிறுகதை 46 - உனது விழியில் எனது காதல் - சஹானி

This is entry #46 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - காதல்

எழுத்தாளர் - சஹானி

Love

குளிர் காற்றை காரின் ஜன்னல் வழியே ரசித்தவாறே அந்த கம்ப்யூட்டர் சென்டரின் வளாகத்தின் வாயிலில் நின்ற காரில் இருந்து வெளிபட்டாள் ரிஷிகா.

இதுவாமா.. நீ சொன்ன சென்டர் என்றபடி அவள் தந்தை ரகுராமன் அருகில் வந்தார்.

ஆமாப்பா... என்று தயங்கியவள் கையை பிசைந்தாள் அவர் என்ன சொல்வாரோ என்ற எண்ணத்தில்...

பரவாயில்லை... நீ கூட கம்ப்யூட்டர் படிக்கனும்னு சொன்னதும்.. நான் எதோ சின்ன சென்டர் என்று தான் நினைச்சேன்... இது கொஞ்சம் வித்தியாசமா தான் இருக்கு... என்று கூறிய பின்னரே இவள் கை பிசைபடுவதை நிறுத்தியது.

இந்த சென்டர்ல கோச்சிங் நல்லா இருக்கும்.. உங்களோட ஃப்யூச்சருக்கு ஹெல்ப்பா இருக்கும் போய் ட்ரை பண்ணி பாருங்க , என்று அவள் ஹெச் ஓ டீ கூறும் போது அவளுக்கும் இதில் பிடித்தம் ஏற்பட்டுவிட்டது..

அன்றே அவள் தந்தையிடம் கூற அவரோ பலமாய் மறுத்து பின் சில உண்ணா விரதம் மௌன விரததிற்கு பின் அவர் நேரில் வந்து பார்த்த பின்னரே மற்றவற்றை கூற முடியும் என்று விட்டதால்... அவளுக்கோ திக்திக் என்று அடித்து கொண்டது.

இப்போதோ தந்தையிடம் இருந்து இப்படி ஓர் வார்த்தை வந்ததில் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.

அவளின் மகிழ்சிக்கு காரணமாய் இருந்த அந்த சென்டரை அப்போது தான் அவளும் பார்வையிட்டாள்.

அகன்ற பெரிய வழிப்பாதை. ஓரத்தில் அடுக்காக வைக்கபட்டிருந்த அழகு செடிகள். ரசித்து கொண்டே உள்ளே செல்ல ... டைல்ஸ் கற்கள் பத்திக்க பட்டு தரை தளம். வெளி அமைப்பே மனதை அள்ள ரிசப்ஷனை அடைந்தார்கள்.

கவுதம்.. சார பாக்கணும் என்று கூற , அவளோ தொலை பேசியில் யாருடனோ பேசி விட்டு ... சிறிது நேரம் விசிட்டர்ஸ் ஹாலில் காத்திருக்க சொல்லி விட்டு தன் வேளையில் ஆழ்ந்தாள்.

விசிட்டர்ஸ் ஹாலை அடையும் போது அங்கு ஏற்கனவே காத்திருந்த ரிஷிகாவின் தோழிகள்... மஹிமா- வனிதா அவளை நோக்கி கை ஆட்ட இவளும் பதிலுக்கு கை ஆட்டியவாறு அவர்கள் அருகில் சென்றாள்.

என்னம்மா ? எல்லாரும் ப்ளான் பண்ணி வந்து இருக்கீங்க போல ... என்ற ரகுராமனை பார்த்த வனிதாவோ,

ஸ்கூல்ல இருந்தே எங்க போனாலும் ஒன்னாவே போய் பழகிடுச்சு அங்கிள் இப்போ இத மட்டும் விட்டுவிடுவோமா? என்று கூறினாள்.

அதுசரி ... இன்னக்கி தான் லாஸ்ட் அங்கிள் , நீங்க இவள கூட்டி வாரது... க்ளாஸ் டைம்ல இவ எங்க கூட தான் வருவா சொல்லிட்டேன்... என்ற மஹிமாவை கண்டவரின் முகத்தில் நிம்மதி கலந்த புன்னகை பரவியது.

அதற்குள் உள்ளிருந்து அழைப்பு வரவே.

வனிதாவும் மஹிமாவும் உள்ளே சென்று பின் சில கலந்துரையாடலுக்கு பின் வெளி வர... உள் நுழையும் முன்

ரிஷிகாவின் காதினில் எதோ கிசுகிசுத்த மஹிமாவை புரியாமல் பார்த்தார் ரகுராமன்,

அறை கதவு தட்டப்பட்டு கிடைத்த அனுமதியோடு உள் சென்றவர்களை,

மரியாதை நிமித்தம் எதிரில் இருந்த இருக்கையை சுட்டி காட்டினான் கவுதம்.

ஆறடி உயரத்தில்...அடர்த்தியான கேசம்..அடர்ந்த புருவங்கள்.. நேர்த்தியான முகம்.. பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் வசிகரிப்போடு இருந்தான்..

தலை முதல் கால் வரை அவனை அளந்தார் ரகுராமன் .

அவரின் அளவிடும் பார்வையை கண்டவனுக்கு ஏனோ கூச்சமாய் தோன்ற பார்வையை அவரை விட்டு விலக்கி ரிஷிகாவை கண்டான்.

அவள் அவனை பார்த்து சினேகமாய் சிரித்தாள்.

சொல்லுங்க.. என்றான் பொதுப்படையாக இப்போது அவன் பார்வை ரகுராமனை அடைந்திருந்தது.

பரவாயில்லையே சார், கம்ப்யூட்டர் சென்டர எதோ ஐ.டி,ஆபிஸ் அளவுக்கு நல்ல கலை ரசனையோடு அமைச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்... உண்மையாய் வெளிவந்தன ரகுராமனின் வார்த்தைகள்.

வில் போல் வளைந்த மீசை அவனின் புன்னகையை வெளிபடுத்த,

தேங்ஸ்... என்றான்

உண்மையிலேயே எங்க சென்டருக்குன்னு ஒரு நல்ல பேர் சொசைடியில உண்டுபண்றதுக்காக , மத்த சென்டர விட நாங்க தனித்து தெரியனும்ங்றதுக்காக புதுசா நிறைய விஷயங்கள இதுல இன்ட்ரோ பண்ணிட்டு இருக்கோம் சார். அதுல இதுவும் ஒன்னு.

அப்படியா..?

ஆமாம் சார், கலைவாணி மேம் தானே உங்கள்ட்ட இந்த சென்டர சஜஸ்ட் பண்ணியது...என்று ரிஷிகாவிடம் கேட்க...

அவள், ஆம் என்று தலையசத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.