(Reading time: 73 - 145 minutes)

ண்பன் கண்டுகொண்டதை அறிந்தவன் புன்னகைத்த படியே.. 

இது ஒரு நாள்ல வந்த முன்னேற்றமில்லைடா.. என்றான்

அதான் தெரியுமே.... ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்டா சாயந்தரம் அஞ்சு மணிக்கு வருபவளை இப்படி காலை பத்து மணிக்கே தேடுறியே இது உனக்கே ஓவரா தெரியல..

தெரியவில்லை அவனுக்கு.. காதல் நோய் யோசிக்கும் சக்தியை இழக்க செய்திருந்தது.

சரி ... நீ வந்ததும் நல்லதா போச்சு. மதன் பாட்ச்க்கு கோர்ஸ் முடிய போகுது. எக்ஸாம் மட்டும் தான் பாக்கி. அவங்களோட ப்ராஜக்ட் அனலைஸ் பண்ணனும். அதோட சர்டிஃபிகேட்க்கான டீடைல்ஸ் ரெடி பண்ணனும் .. வந்து ஹெல்ப் பண்ணு டா... என்று இழுத்து சென்றான்.

என்னதான் கை வேலை செய்தாலும் மனம் அவள் வரவை எண்ணி காத்திருந்தது. மணி ஐந்தை தொட்டு விட வாசலிலேயே சென்று அவளை காண வேண்டுமென்ற ஆவலில் ஓடி சென்றான்.

அப்படியே ப்ரமை பிடித்தவன் போல் நின்று விட்டான் . அவன் மனம் கொதித்து கொண்டிருந்தது. இந்த ஆள் எதற்கு ரிஷிகாவை காரில் கொண்டு வந்து விடனும்...

சிலைபோல் நின்றவனின் அருகில் வந்த கவுதம்.. 

என்னடா..?

யார்டா அது...?

எது.. ? என்று திரும்பியவன்.. ஓஹ்.. அவர் ரிஷிகாவோட அப்பா... அட்மிஷன் போடும் போது வந்தாருன்னு சொன்னேனே...

இந்த ஆள் ரிஷிகாவின் அப்பாவா...? தாங்கி கொள்ள முடியவில்லை... திரும்பி வேகமாக நடந்தான்.அறையுனுள் சென்று அமர்ந்து கொண்டான்.

தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனை புரியாமல் பார்த்தவன்..

சகி... க்ளாஸ்க்கு போகலயா

ப்சு... ஷைலாவை போக சொல்லுடா..

நண்பனின் முறைப்பை பார்த்தவன்... ஒரு கணம் தயங்கி பின் போனை எடுத்து மதனை அழைத்தான்.

ஹலோ மதன் கொஞ்சம் எங்க கேபினுக்கு வாங்க..

அவன் செய்கையை பார்த்தவனுக்கோ ஒன்றும் விளங்கவில்லை.

கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த மதனிடம்...

என்னோட பாட்ச்க்கு போய் க்ளாஸ் எடுங்க...

சரி சார். 

ஆணை இடுபவன் இந்த நிறுவனத்தின் முதளாலியாயிற்றே...வேறென்ன செய்வான்.

டேய், அவன் பாட்ச்கு எக்ஸாம் இருக்கு மறந்துட்டியா...

படபடத்த கவுதமை பொறு... என்ற பார்வை பார்த்தவன்..

எக்ஸாம் தானே நான் போய் கவனிச்சிக்குறேன்.

ஆமா சார், நான் கூட சொல்லணும்னு நினைச்சேன் எக்ஸாம்னா நமக்கு அதிகமா வேலை இருக்காதே... நான் இந்த க்ளாஸ்க்கே போறேன் சார் கவுதமை பார்த்தவாறே...

இருந்தாலும் இவன் இவ்வளவு சின்சியர் சிகாமணியாய் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது அதே நிறுவனத்தின் மற்றொரு முதளாலியான கவுதமிற்கு.

இப்போ உனக்கு போதுமா என்ற ரீதியில் சகி பார்க்க மற்றவன் அறியாமல் பல்லை கடித்தான் கவுதம். 

நீங்களே இந்த பாட்ச்ச ஃபைனல் எக்ஸாம் வரைக்கும் ட்ரைன் பண்ணுங்க மதன்.. யூ மே கோ நவ்.. என்று கூறி மீண்டும் தலையில் கை வைத்து கொண்டான்.

டேய் என்னடா நினைச்சிட்டு இருக்க...உன் மனசுல...காலைல எவ்வளோ சந்தோஷமாய் வந்த.. இப்போ ஏன் இப்படி பிஹேவ் பண்ற? சொல்லு..

அந்த ஆளு தான்டா. 

எந்த ஆளுடா..

அதான் ரிஷிகாவோட அ..ப்..பா..

கடித்து துப்பினான் வார்த்தைகளை.

ஏன்டா. அவர் உன்னை என்ன செஞ்சார்... அவர் மேல் உனக்கு என்ன கோபம்...?

சிக்னலில் காத்து கொண்டிருந்தவன் கிளம்ப தயாரக வண்டியை கிளப்பினான். சரியாய் அதே சமயம் ஒரு மூன்று பேர் குடித்து விட்டு வண்டியில் தாறுமாறாய் அவனை கடந்து சென்றனர். சும்மா செல்லாமல் அப்போது தான் வண்டியை கிளப்பியவனை ஒரு தட்டு தட்டி செல்ல...

நிலை தடுமாறி அங்கும் இங்கும் வண்டியை ஒடித்து கடைசியில் கீழ் விழாமல் சரியாய் நின்றான்.

ஆனால் ஒரு காரின் மேல் மோதியதை அவன் கவனிக்கவில்லை.

அதற்குள் காரில் இருந்து வெளியே வந்த ரகுராமன்...

ஏன்டா.. வண்டிய ஒழுங்கா ஓட்ட தெரிஞ்சா ரோட்ல வந்து ஓட்டு... இல்லனா வீட்டுலயே இருக்க வேண்டியதானே... நல்ல வந்து சேர்ந்து இருக்கானுக பாரு குடிச்சிட்டு வண்டிய ஓட்டிட்டு ரோட்ல தேமேனு போய்ட்டு இருக்க வண்டியில மோத வேண்டியது. அப்புறம் எங்க தலை உருள வேண்டி வரும்...வாய்க்குள் இன்னும் எதேதோ முனக..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.