(Reading time: 73 - 145 minutes)

குடித்து கொண்டிருந்த தண்ணீர் புரைக்கேறியது.

அவசரமாய் எழுந்து அவளருகில் வந்தவன், அவள் தலயை தட்டி கொடுத்தான்.

அவன் கையை தட்டி விட்டவள், கடைசியில் இதுக்கு தான் தன்னை அழைத்தானோ என்று எண்ணமே அவளின் கோபத்தை கூட்டி முகத்தை ரத்தமென சிவக்க செய்திருந்தது.

கோபமாய் இருக்கையை விட்டு எழ போனவளின் கை பிடித்து நிறுத்தினான்.

சட்டென்று அதையும் தட்டி விட்டவள் யாரும் தங்களை பார்க்கிறார்களோ என்று சுற்றும் முற்றும் பார்வையிட்டாள்.

யாரும் பார்க்கல... நீ முதல்ல உக்கார்.... குரலில் கடுமை வந்திருந்தது. 

கோபமாகவே அமர்ந்தவள் அவனை பார்ப்பதை தவிர்த்து வேறு புறம் பார்த்தாள்.

முதல்ல நான் என்ன சொல்லவாறேன்னு கேட்டுட்டு அப்புறம எழுந்து போ.

அவளிடம் பதில் இல்லாது போகவே நீண்ட மூச்சோடு தொடர்ந்தான்.

என் வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்றாங்க.

யருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் அமர்ந்திருந்தாள்.

அதுக்காக அப்பா தெரிஞ்ச தரகர்ட்ட சொல்லி வச்சாங்க, அவரும் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பொண்ணோட போட்டோ கொண்டு வந்து கொடுத்துட்டு போயிருக்கார். அப்பா அம்மாக்கு பொண்ண ரொம்ப பிடிச்சு போச்சு என் கிட்ட போட்டோ காட்டி கேட்டாங்க, எனக்கும் பிடிச்சிருந்துச்சு. அப்புறம் பொண்ணோட அப்பாட்ட பேசுனேன். அவங்க சைட்லயும் என்னை ஏத்துகிட்டாங்க... பட் பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கானு கேக்க ஆசை பட்டு பொண்ண பார்க்கனும்னு அவர் கிட்ட சொன்னா.. அதுக்கென்ன பொண்ணு பார்க்க வரப்ப கேட்டுகோங்கனு சொல்லிட்டார். ஆனால் எனக்கு அதுல இஷ்டம் இல்ல... பொண்ணோட தனிப்பட்ட முறைல பேசி அவளுக்கு என்னை பிடிச்சிருக்கானு தெரிஞ்சிக்க ஆசை பட்டு அந்த பொண்ண தனியா வர சொல்லி கல்யாணம் பண்ண்க்குவியானு கேட்டா... அவளோ கோபமா போறா... இப்போ சொல்லு நான் என்னதான் செய்ய...?

பாவம் போல் முகம் வைத்து கேட்டவனை கண்டவளுக்குள் வெட்கம் குடி கொண்டது. நாணி தலையை குனிந்து கொண்டாள். 

அப்போ அப்பா சொன்ன... மா...ப்..பி..ள்..ளை.. நீங்களா..?

தந்தியடித்தன வார்த்தைகள்.

ம்ம்ம்ம்.. அவளை பார்த்து கொண்டே அவன் கூற,

முக சிவப்பு பெருகியது பெண்ணவளுக்கு.

அதை ஆசையாய் ரசித்தவன், 

பார்டா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோபத்துல சிவந்த முகமா இப்போ வெட்கத்துல சிவந்திருக்கு. 

அவளின் விரலை பற்றினான்.

வெட்கம் கூட...மனம் தடதடக்க... அமர்ந்திருந்தாள்.

வனிதா நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே ...

அத அப்பா கிட்டயே கேட்டுகோங்க... 

அடுத்த கணம் அவள் அங்கு இல்லை சிட்டாக பறந்திருந்தாள்.

இரு வீட்டு பெரியோர்களும் கூடி கவுதம்- வனிதா திருமண நிச்சயத்தை நடத்தி முடித்தனர்.

ணவு இடைவேளையின் போதெல்லாம், வனிதா கவுதமிடம் போனில் மணி கணக்கில் பேசுவாள். அவள் வாயில் உணவு செல்லுமோ இல்லையோ அவனுடன் பேசிய படி பாதி கீழே தான் கொட்டும்.

பாறேன்.. பார்க்க இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்தவ... இப்போ சாப்ட கூட நேரமில்லாம பேசிட்டு இருக்கா..

உனக்கு ஏன்டி பொறாமை...?

எனக்கு என்ன பொறாமை ரிஷிகா?...

என்றவள் வனிதாவை ஒரு முறை பார்த்தவள் ..லைட்டா 

அவளின் முகத்தை பார்த்த ரிஷிகா அழகாய் சிரித்தாள் அவளுடன் சேர்ந்து சிரித்தாள் மஹிமா.

நீ வேணும்னா பாரு நானும் இவள போல சீக்கிரம் ஒருத்தன காதலிச்சு இவள விட அதிகமாவே கதை பேசல என் பேரு மஹிமா இல்ல.

எஸ்க்யூஸ்மீ... கூப்ட்டீங்களா..

மஹிமாவின் அருகில் வந்தமர்ந்தான் மஹேன்.

பணியில் சேர்ந்த நாளன்றில் இருந்து மஹிமாவின் பேச்சால் கவரப்பட்டவன் அடிக்கடி அவன் மனதை அவளிடம் கோடிட்டு காட்ட நினைத்து பேசுவான்.ஆனால் அதெற்கெல்லாம் மசியாது பதில் கொடுப்பாள் மஹிமா.

இல்லையே அங்கிள்...

இப்போதும் அப்படியே பதில் கூற,

"களுக் "என்று சிரித்த ரிஷிகாவிடம் ஒரு மாதிரியான சிரிப்பை உதிர்த்து விட்டு, 

அங்கிள்.. யூ மீன் மாமா?

ஆ...மா...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.