(Reading time: 73 - 145 minutes)

ப்படி இந்த கிராமத்து சைடுல முறை பொண்ணுங்க எல்லாரும் கட்டிக்க போறவங்கள கூப்டுவாங்களே அந்த மாதிரியா..?

இதற்கு என்ன பதில் சொல்வாள். உதடு கடித்து அமைதியாகி விட்டாள்.

அதன் மீது ரசனையோடு படிந்தது மஹேனின் பார்வை.

அவனறியாது முக சிவப்பை அந்த பக்கம் திரும்பி மறைத்து கொள்வாள்.

மஹிமாவிற்கும் மஹேனிடம் நல்ல எண்ணம் உண்டு. 

அது மஹேனின் பேச்சிக்கு தடையிடாமல் இருந்த மஹிமாவை வைத்தே கண்டு கொள்ளலாம்.

பேசி பேசியே அவளை தன் காதலை ஒப்பு கொள்ள வைத்தான்.

முடிவில் இரு வீட்டு பெற்றோரும் இவர்களின் திருமண நிச்சயத்தயும் உறுதி செய்தனர்.

ன்றைய நாளில் ரிஷிகாவிற்கு சாஹித்யனின் நினைவு அதிகமாகவே அலைகழித்தது.

காலையில் எழுந்ததில் இருந்தே வழக்கமான வேலைகளில் மனம் லயிக்கவில்லை.

உணவு மேஜையில் தட்டில் வெறும் இட்லியை மட்டும் வைத்து கொண்டு சாப்பிடும் மகளையே விசித்திரமாய் மீனாவும் ரகுராமனும் பார்க்க , இயல்பாய் இருப்பது போல் காட்டி கொள்ள படாத பாடு பட்டாள்.

உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து ஆபிசிற்குள் நுழைந்தவளுக்கு , போனும் கையுமாக வனிதாவும் மஹேனுடன் கை கோர்த்து பேசி சிரித்து கொண்டிருக்கும் மஹிமாவும் கண்ணில் பட கண்ணை கரித்தது. 

தன்னால் இப்படியெல்லாம் ஏன் சகியோடு இருக்க முடியவில்லை... என்ற தன்னிரக்கம் உண்டானது.

விடுவிடுவென்று தன் கேபினுக்குள் சென்று கணினியுள் தலையை புகுத்தி கொண்டாள்.

தத்தி தத்தி டைப் பண்ணி முடித்தவளுக்கு சிஸ்டம் எரர் காட்ட ,

ஸ்ஸ்ஸ், என்று தலையை பிடித்து கொண்டாள்.

என்னடா இது என்றாகி போனது.

ப்ரசாந்த் ....அந்த வழியாக சென்ற அவள் கலீகை அழைத்தாள்.

என்ன ரிஷிகா?

சிஸ்டம் எரர் காட்டுது.

அப்படியா... சட்டென்று குனிந்து அவளின் திரையில் பார்வையிட்டு நொடிக்கும் குறைவான வினாடியில் சரி செய்து விட்டு நிமிர்ந்தான்.

இத்தனைக்கும் அவனின் நகமும்,ஏன் மூச்சு காற்றும் கூட அவள் மீது பட வில்லை.

ஏனோ அவனின் அந்த செய்கை அவளுக்கு கடந்த காலத்தை நினைவு படுத்தியது. 

அன்றைய நாளில் போக்கு காட்டி கொண்டிருந்த சகியின் நினைவு முழு உருவம் பெற்று அவளின் மனத்திரையில் வந்து நின்று அவளை பார்த்து புருவம் உயர்த்தியது. 

தாங்க மாட்டாமல் அழுது விட்டாள் பேதை.

ஹேய், ரிஷிகா ஆர் யூ ஓகே... 

புரியாது ப்ரசாந்த் வினவ, 

இல்லை ப்ரசாந்த் ஐம் நாட் ஓகே...

என்னால இன்னைக்கி வர்க் பண்ண முடியும்னு தோணலை ... நான் சார்ட்ட சொல்லிட்டு கிளம்புறேன்.

ஸ்யூர் ... நீ உன் ஸ்கூட்டில போய்டுவியா இல்லை நான் என் கார்ல் ட்ராப் பண்ணவா.

நோ தேங்க்ஸ் , நான் போய்க்குவேன்.

சொன்னபடி தன் மேலதிகாரியிடம் கூறி கிளம்பி விட்டாள்.

வீட்டின் வாயில் வரை வந்து விட்டவள் ஒரு கணம் தயங்கி நின்றாள். 

அலுவலகத்தில் சொல்லி விட்டு வந்து விட்டோம், இனி அம்மாவை எப்படி சமாளிப்பது...

வந்தாயிற்று, சமாளிப்போம் என்று வீட்டிற்குள் சென்றவள், அதிசயத்திலும் அதிசயமாக அந்த நேரம் அங்கு அப்பா இருப்பதை பார்த்தாள்.

என்னமா இப்போதானே ஆபிஸ்கு போன அதுகுள்ள வந்துட்ட...

ஒன்னுமில்லைப்பா தலை வலி அதான் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்.

ரகுராமன் அவளை நெற்றி சுருங்க பார்த்தார்.

நீங்க என்னப்பா ஆபிஸ்கு போகலை

திலீபை பார்த்துக்க சொல்லிட்டேன்மா இன்னைக்கு லீவ்.

அவரின் பார்வை எடை போடுவதை நிறுத்த வில்லை.

அவரை பார்ப்பதை தவிர்த்து வேறு திக்கில் பார்த்தாள்.

என்னப்பா திடீர்னு ?.. எதோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டாள்.

ஒன்னுமில்லைமா... 

அப்புறம் நானே உன் கிட்ட கொஞ்சம் பேசனும்னு நினைச்சிட்டு இருந்தேன்மா..

தந்தையின் பீடிகையில் அவரை புரியாமல் பார்த்தாள்.

என் ஃப்ரண்ட் சங்கரன் தெரியும்லமா...

ம்ம்ம் ... தெரியும்பா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.