(Reading time: 73 - 145 minutes)

வனோட பையனுக்கு ரொம்ப நாளாவே உன்னனை கல்யாணம் பண்ண கேட்டான்மா... நான் தான் பிடி கொடுக்காம இருந்தேன். நீ என்னமா சொல்லுற...?

அப்பா இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்...

அவசரமில்லைமா ... அவசியம், நான் நல்லா இருக்கும் போதே உனக்கு கல்யாணத்த பண்ணி பார்த்துடணும்னு ஆசை அவ்வளோ தான்..

அப்பா என்னப்பா இப்படியெல்லாம் பேசுறீங்க... 

தெரியலமா எதோ கெட்டது நடக்க போற மாதிரி உள்ளுக்குள்ள பயமா இருக்குமா.

அப்பா என்னதிது சின்ன பிள்ளையாட்டம்.

அதவிடுமா இப்போ நீ என்னதான் சொல்ல வர்ற?..

எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணலைப்பா...

சரி, இந்த இடம் பிடிக்கலைனா உனக்கு பிடிச்ச வேற இடம் பாக்குவோமா...

இதற்கு மேல் ஒரு தந்தையால் வேறு எப்படி கோடிட்டு கேட்க முடியும்... உனக்கு யாரையும் பிடித்திருக்கா என்று...

அவளுக்கும் புரிந்தது.

எப்படி சொல்வாள் எனக்கு ஒருவனை பிடிக்கும் அவனுக்கு???

வர நினைத்த கண்ணீரை உதடு கடித்து அமர்த்தினாள்.

ப்சு.. அப்பா எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிகணும்னு தோணலை...

கிளிபிள்ளை போல் கூறி கொண்டிருந்தாள்.

கோபம் வந்தது ரகுராமனுக்கு வாழ்வின் முதல் முறையாக தன் மகளை கடிந்து கொண்டார்.

என்ன நீ ? நீ என்ன சொன்னாலும் நான் கேட்கனும்னு நினைச்சிட்டு இருக்கியா என்ன..?

வனிதாவுக்கும் மஹிமாவுக்கும் உன் வயசு தானே ஆகுது அவங்களுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க தெரியும்ல... நீ மட்டும் ஏன் இப்படி பிடி கொடுக்காம பேசுற..உனக்கு இரண்டு நாள் டைம் தரேன் அதுக்குள்ள யோசிச்சு நல்ல முடிவா சொல்லு இல்லனா அப்பா கிட்ட விடு நானே பாத்துக்கறேன்.

கோபமாய் பேசிவிட்டு வெளியேறிவிட்டார்.

நிஜமாகவே தலைவலி வரவா என்று பயமுறுத்தியது.

கைப்பையை சோபாவில் விட்டெறிந்தவாறே தொப்பென்று அமர்ந்தாள் . இருகைகளாலும் தலையை பிடித்து கொண்டாள்.

சூடான டீயின் மணம் நாசியை தொட நிம்ர்ந்தாள்.

அருகில் இருந்த மீனா இவள் கையில் டீயை கொடுத்தார்.

அதை வாங்கி மடக்மடக்கென்று உள் தள்ளினாள். தன் உள்ள கொதிப்பை இது ஆற்றுமா என்ற வேதனையோடு.

இருக்கையை விட்டு... கைப்பையோடு எழுந்தவள்

அம்மா, மனசுக்கு கஷ்டமாய் இருக்கு கொஞ்சம் வெளிய போய்ட்டு வறேன்.. என்று நடந்தாள்.

ரிஷிகா ...என்றவரின் அழைப்பு காற்றில் கலந்தது.

டற்கரையில் நிழலுக்காக போடப்பட்டிருந்த குடையின் கீழ் அமர்ந்தவாறு கடலை வெறித்து கொண்டிருந்தாள்.

மிதமான வெயிலிலும் அலைகடல் எழுப்பிய குளிர் காற்று அவளின் மனதை சமன் படுத்தவில்லை.

கடந்து சென்றவர்கள் அவளை ஒரு தினுசாய் பார்ப்பதையும் உணரவில்லை.

ஏன், மறைவாக இருந்த சாஹித்யனும் அவளையே பார்த்து கொண்டிருப்பதை உணரவில்லை.

இன்று மட்டும் அல்ல என்று அவர்களிடையே பனித்திரை உண்டானதோ அன்றில் இருந்தே அவன் பார்வை வட்டம் அவளை சுற்றி சுழலும்.

ஆனால் அவனை தேடாத அவளின் விழிகளை காண்பவனுக்குள் உள் மனம் வலிக்கும்.

அவள் வேலையில் சேர்ந்த பின் தினமும் அவள் வீட்டு தெரு முனையில் அவளுக்காக காத்திருந்து அவளின் ஸ்கூட்டியின் பின் அவன் காரை செலுத்துவான்.

அவளை ஆபிசில் விட்டுவிட்டு பின் தன் சென்டருக்கு விரைவான். தினசரி வாடிக்கையாகி போனது இது.

இன்றும் அவ்வாறே தன் கடமையை செய்து முடித்து திரும்பியவனை அவனின் பள்ளி கால நண்பன் அவனை பார்த்து விட்டு அவனிடம் பேசியபடியே அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு சகியை இழுத்து சென்றான்.

அவனிடம் பேசி கொண்டிருந்தவன் கண்களில் ரிஷிகா ஆபிசில் இருந்து வெளியேறுவது தெரிய அவசரமாக அவனுடனான பேச்சை பாதியில் விட்டுவிட்டு ரிஷிகாவை பின் தொடர்ந்தான்.

என்ன இந்த நேரத்துல வீட்டுக்கு வந்துட்டா ,

வீட்டில் யாருக்கும் உடம்பு சரியில்லையோ?

இவன் எண்ணம் இப்படி ஓடி கொண்டிருக்கும் போதே ரகுராமன் வெளியேறுவதை கண்டவனுக்குள் கோபம் கனன்றது.

இந்த ஆளுக்கு சிரிக்கவே தெரியாதா?

பாவம் அவன் மனம் அவரை அந்த நிலையில் பார்த்து குறை கூறியது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.