(Reading time: 73 - 145 minutes)

முதலில் மன்னிப்பு கேட்க வாயெடுத்தவன்.. அவர் பேசிய வார்த்தைகளின் ரீதியில் கோபம் தலைக்கேற... யாரை பார்த்து குடிகாரன்னு நினைச்சான் இந்த ஆள் என்ற கோபத்தில்,

ஆமாய்யா ... நான் குடிச்சிருக்கேன்.. நீ தான் வந்து எனக்கு க்ளாஸ்ல ஊத்தி கொடுத்த.. வந்துட்டான் பேச.. யார் வீட்டுலயே இருக்கனும்... வயசான காலத்துல நீ வீட்டுல இருக்குறத விட்டுட்டு என்னை சொல்றியாக்கும்.

அவரின் முகமே அவரின் கோபத்தை வெளிப்படுத்த...திருப்தியாய் உணர்ந்தான்.

யாரை பார்த்து என்ன சொன்னார்.. பதிலுக்கு பதில் .. என்று மனதில் கூறி கொள்ள வைத்தது.

பதிலுக்கு அவர் பேச இவன் பேச என வார்த்தைகள் தடிக்க ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் வந்து கூட்டத்தை விலக்கி அவரவரை அனுப்பி வைத்தார்.

ரகுராமனின் மேல் இருந்த கோபத்தை பைக்கில் காட்ட அது ஒரே உதையில் கிளம்பியது. வேகம் கூட்டி சிட்டென பறந்தான். ஆயினும் அவன் கோபம் அடங்கிய பாடில்லை. அவர் கூறிய வார்த்தைகளை அவன் காலப்போக்கில் மறந்தாலும் ..

இன்று அவரை பார்த்த நொடியில் மீண்டும் கோபம் திரும்பியது.எவ்வளோ சந்தோஷமாய் ரிஷிகாவை தேடி சென்றான். அந்த சந்தோஷத்தை நொடியில் காவு வாங்கியது. அதையே தூக்கி தின்னும் அளவு அவளே அந்த ஆளின் மகள் என்ற செய்தியில் அவன் மனம் சுக்கலாகியது.

மனதின் காயம் காதலை தின்றது.

நண்பனின் கோபம் புரிந்தாலும்... அதனால் பாதிக்கப்படுவது ரிஷிகா தான் என்பதை யார் அவனிடம் சொல்வது.. தெரியாமல் கூறி விட்டால், என்னை பற்றி தெரிந்து எப்படி இப்படி பேசலாம் என்று அவன் மேலேயே கோபம் கொண்டாலும் ஆச்சர்ய பட ஒன்ற்மில்லை.

அவனோடே பேசாமல் போனாலும் போய்விடுவான். அதனால் ஏதும் கூறமல் அமைதியாகி விட்டான்.

மூன்று நாட்கள் கடந்திருந்தது. மீண்டும் தொடங்கிய கண்ணா மூச்சி ஆட்டத்தில் தவித்து போன ரிஷிகாவால் தாங்க இயலவில்லை. 

அவனை தேடி தேடி ஓய்ந்து திரும்பும் அவள் கண்களை பார்க்கும் கவுதமிற்குமே பாவமாய் இருக்கும். என்ன தவறு செய்தாள் இந்த பெண் ...சாஹித்யனை காதலித்தள்... அதுவும் தவறா என்ன?

என்று தோன்றும்.

இருக்கையில் எழுந்தவளை என்னவென்று மதன் பார்க்க..

டூ மினிட்ஸ் சார் என்றாள.

அவன் சரியென்று தலை அசைக்க 

வெளியே வந்து மீண்டும் அவனை தேடினாள்.. அவன் இல்லாது போகவே சோர்வாய் ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள். 

கவுதமிற்கு என்ன தோன்றியதோ... விரைந்து இருக்கைக்கு சென்றான்.. அங்கு கணினியை ஓட விட்டு சிந்தனையை வேறெங்கோ வைத்திருப்பவனை பார்த்தான்..

அவனை நெருங்கி... டேய் சகி, காபி சாப்பிடவா என்றழைக்க..

ப்ச்.. வேண்டாம்டா நீ போய் சாப்பிடு...

இப்போ வர போறியா இல்லயா... வானு சொல்றேன்ல 

அவன் கையை பிடித்து இழுத்து சென்று அங்கிருந்த சேரில் அமரவைத்தான்.

பின் இரு கப் காபியோடு அவனருகில் அமர்ந்தான். 

அவன் மனம் எப்படியாவது... ரிஷிகா இவனை பார்த்து விடட்டுமே என்று மன்றாடியது. 

அவளும் பார்த்தாள்.. பார்த்தவளின் கண்களில் உயிர் திரும்பியது. 

ஆவலோடு அவனருகே வந்தாள். அவனோ நண்பனை முறைத்தான்.இதுக்கு தான் கூப்ட்டியா? என்று விழி கேட்க.. அவன் ஆம் என்ற ரீதியில் புன்னகைத்தான்.

அருகே வந்தவளை ஒரு கணம் பார்த்தவன் பின் தன் பார்வையை திருப்பி விட்டான் அவளை பார்ப்பதை தவிர்த்தான்.

சாரி.. என்றவளின் குரலில் அவள் புறம் திரும்பினான்.

அவள் அழுது சென்ற நாளிற்குபின் இன்று தான் அவனை பார்க்கிறாள்.

அன்று நடந்ததற்கு தான் மன்னிப்பு கேட்கிறாள்.

ஆம், அதன் பின் தானே அவன் அவளை பார்ப்பதை தவிர்க்கிறான். ஆனால் காரணம் தான் வேறாய் இருந்தது .

அவனும் அதை அறிந்தான். பதில் பேசாது மவுனமாய் இருந்தான். சில நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தவள்...

நீண்ட பெருமூச்சோடு அங்கிருந்து நகர்ந்தாள்.

வகுப்பிற்குள் சென்றவளுக்கு அங்கு இருக்க மனம் வரவில்லை. மதனிடம் கூறிகொண்டு கிளம்பினாள்.

அவள் முகத்தில் என்ன கண்டானோ... ?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.