(Reading time: 73 - 145 minutes)

ன்ன சார் ...? அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டீங்க...

ஹான் .. ஒன்னுமில்லை... என்று கூறிவிட்டு அவளின் பார்வையை மொத்தமாக தவிர்த்தான். 

சரி ... இது போதும் நீங்க வொர்க் பண்ணுங்க.. என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

என்னடா? . இங்க வந்து உக்காந்திருக்க.. தோளில் கவுதமின் கை விழ, 

த்சு.. ஒன்னும் இல்லை டா... என்றுவிட்டு தன் எண்ணவோட்டத்தை கூற..

நண்பனை விசித்திரமாய் நோக்கினான் கவுதம்.

இது போன்று பல சமயங்களில் நிகழ்ந்திருக்கின்றன.

அப்போதெல்லாம்... எனக்கென்னடா..? பாடத்த கவனிச்சா ஃப்யூச்சருக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.. அத விட்டுட்டு என்னை கவனிச்சா.. என்ன ப்ரயோஜனம் ?... என்று அசால்ட்டாய் தோளை குலுக்குவான்.. ஆனால் இன்றோ இவன் செய்கை ஆச்சர்ய படுத்துகிறது.

தொடங்கியது கண்ணாமூச்சி ஆட்டம்..

இப்போதெல்லாம்.. அவன் வகுப்பெடுக்க வருவதில்லை..மாறாக ஷைலாவே வகுப்பெடுத்தாள். முன்போ இவன் வெளியூர் சென்றதால் ஆன நிர்பந்தம்... ஆனால் இன்று...அங்குதான் வலம் வருகிறான்... வேண்டுமென்றே தன்னை எதாவது ஒரு வேலையில் தலையை விட்டு கொள்வான்.அடிக்கடி ரிஷிகாவின் பார்வை சாஹித்யனை தேடும்.. அவள் கண்களில் தோன்றும் ஏமற்றம்.. கவுதமிற்கு இது வெறும் ஈர்ப்பு அல்ல என்று தான் தோன்றியது. 

அது வெறும் ஈர்ப்பாய் இருக்கும் பட்சத்தில், அவனை பார்க்காமல் இருப்பதானால், அதை சட்டை பண்ணாமல் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தலாமே... ஆனால் இவளோ , அவனை தேடித்தேடி தோற்று போன பாவனையோடு அல்லவா திரும்புகிறாள். நிச்சயம் இது உண்மையான காதல் உணர்வு என்றே தோன்றியது. 

என்னடா க்ளாஸ்க்கு போறதா உத்தேசமே இல்லையா உனக்கு..? உனக்குன்னு எப்படி தினமும் எதாவது ஒரு வேலை இருக்கு.. என்னால ஷைலா பாட்ச் பசங்களுக்கு பதில் சொல்ல முடியல..

என்னவாம்..? 

பின்ன ... அவங்களோட ட்ரைனர் இப்படி வேற பாட்ச்சுக்கு போனா நாங்க எப்படி படிக்கறதுனு கேக்றாங்க.

ஏனோ, அவன் ஒருவனால் மற்றவர்கள் பாதிக்கப்படும் ரீதியில் கவுதம் பேச...

சிறுது நேரம் யோசித்து கொண்டிருந்தவன்... நீண்ட பெருமூச்சோடு...

சரிடா.. நாளைல இருந்து க்ளாஸ் அட்டெண்ட் பண்றேன் என்றான்.

இதற்கு தானே ஆசைபட்டோம்.. எதோ ரிஷிகாவிற்கு தன்னால் இயன்ற உதவி ... என்று தனக்குள் கூறி கொண்டான்.

ல்லூரியில் மதிய உணவு இடைவேளையில்...ஒரு வாரமாகவே சோர்ந்து தெரியும் ரிஷிகாவிடம்... காரணம் கேட்டு குடைந்து கொண்டிருந்தனர் தோழியர்.

ஒன்னுமில்லை ஒன்னுமில்லைனு.. எத்தனை தடவை தான் சொல்லுவ.. உன் முகமே சொல்லுது ...நீ எதோ கவலைல இருக்கனு.. எங்க கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன உனக்கு.. ஏன் முன்ன போல இல்லாம.. எதையோ பறி கொடுத்த மாறி இருக்க...உன்னை பார்க்கவே பயமா இருக்கு.. ரிஷிகா...

பைத்தியம் பிடிச்சுடும்னு பயப்படுறிய வனிதா...

ஏய்,

த்சு... தெரியலடி... நான் ஏன் இப்படி இருக்கேன்னு எனக்கே தெரியலை... என்றவள்,

தன் மனதில் இருப்பவற்றை தோழியர்களிடம் கொட்டினாள். 

கரையுடைத்து வெளிப்பட்டதன் முடிவில்... வனிதாவின் தோள் சாய்ந்து தேம்பியவளை என்னவென்று கூறி தேற்ற.. வழிதெரியாது... கையை பிசைந்தனர்.

அவர் என்னை தவிர்க்கனும்னே நமக்கு க்ளாஸ் எடுக்க வரலடி.. நான் என்ன செய்தேன். என் மனம் அவருக்கு புரிய மாட்டேங்குதே..

கேவி முடித்தாள். 

மனதின் பாரம் இறங்கியது போல் தோன்றியது... நீண்ட நாட்களுக்கு பின் தன் மனம் அமைதியாகி இருப்பதை உணர்ந்தாள்.

இதனைவிட மாலையில் அவனே வகுப்பெடுக்க வரவும் அவளின் மனம் இறகை விடவும் லேசானது போன்றே தோன்றியது.

கவலை மறந்து அவள் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்து இருந்தாள். 

மீண்டும் கண்ணில் படாமல் ஓடி விட்டால்.. 

அதற்கு தான் முன்பாகவே அவனை ஆசை தீர பார்த்து தன் மனதில் அவன் பிம்பத்தை படமெடுத்து கொண்டிருந்தாள். 

அவ்வப்போது அவன் அவளின் பார்வையை சந்திப்பதும் பட்டென்று விலக்குவதுமாய் இருந்த இந்த விளையாட்டை அவள் மிகவும் ரசிக்க தொடங்கி விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.