(Reading time: 73 - 145 minutes)

மேம், என்ன சொன்னாங்கனு தெரிஞ்சிக்கலாமா?

இங்க கோச்சிங்க் நல்ல இருக்கும். ஜாப் க்யாரண்டி கூட உண்டுனு .. சொன்னாங்க.

அவன் மெல்ல சிரித்தான். 

இன்ஃபாக்ட் நாங்க கூட அவங்களோட ஸ்டூடண்ட்ஸ் தான்... அதனால அவங்க கொஞ்சம் ஓவரா புகழ்ந்து தள்ளுவாங்க, அதான் கேட்டேன்.

ஜாப் க்யாரண்டினு சொல்றதுலாம் கொஞ்சம் ஓவர் சார் .. பிகாஸ் , நாங்க இதுல பெருசா எதும் பண்ணலை..

பொதுவா எங்க சென்டர்ல எவ்ரி 2 ஹார்ஸ்க்கு ஒரு பாட்ச் சார்

எல்லா சென்டர்லயும் அப்படிதானே...

இருக்கலாம் சார், சில பேர் அட்மிஷன் போட்டு ஒரு பெரிய ஹால்ல கும்பலா உள்ளே தள்ளி போய் படிங்கனு அனுப்புவாங்க. ஒரு சிலது விதி விலக்கு எங்களதை போல... அவன் குரலில் பெருமிதம் இருந்தது.

அதோட , ஒரு பாட்ச்க்கு ஆறு பேர் தான் எங்களோட ரூல்.

தனிபட்ட முறைல கவனம்... ஒவ்வொருத்தரோட மென்டாலிடிக்கு ஏற்ப லேர்ன் பண்ணுவோம். 

பட் ஜாப்கெல்லாம் நாங்க க்யரண்டி கொடுக்கல சார்...

அய்யோ, உலரிட்டானே என்பது போல் ரிஷிகா அவனை பார்த்துவிட்டு , இந்த காரணத்தை சொல்லி தானே அப்பாவை கூட்டி வந்தோம் ... இப்போ அப்பா என்ன சொல்ல போறாங்களோ? என்று அவரை பயத்தோடு நோக்க, 

அவரும் என்னமா இது? என்பது போல் ஒரு பார்வை பார்த்தார்.

ஈசி சார்...

எங்க ஸ்டூடண்ட்ஸ்க்கு ஃபைனலா ஒரு ப்ரோஜக்ட் கொடுப்போம் சார். அதுல இருந்து சிலதை சூஸ் பண்ணி அந்த ப்ராஜக்ட் சம்பந்த பட்ட கம்பனீஸ்க்கு அனுப்புவோம். அவங்களுக்கு பிடிச்ச ப்ராஜக்ட்ஸ மட்டும் எங்கள்ட்ட இருந்து வாங்கிக்குவாங்க. இன்னும் சில கம்பனீஸ் அந்த ப்ராஜக்ட் கிரியேட்டர அவங்க கம்பனிலயே வொர்க் பண்றதுக்கு அப்பாய்ண்மென்ட் ஆடரயும் தந்துருவாங்க.

ஸோ இதுல எங்களோட பங்கு கொஞ்சம் தானாலும்...

உங்க மகளோடு திறமைக்கு தான் அதிக வேலை இருக்கு ... 

பலவாறு எடுத்து கூறி தன்னிலை விளக்கமளித்தான் கவுதம்.

தந்தையின் முகம் சரியனதை கண்டு நிம்மதி அடைந்தாள் ரிஷிகா.

என்ன கோர்ஸ் படிக்க விரும்புறீங்க...?

அவள் பதில் கூறவே ...

குட்.. இந்த ஃபார்ம ஃபில் பண்ணி கொடுத்துட்டு போங்க... அதுலயே எல்லா டீடைல்சயும் எழுதிடுங்க.. என்று ஒரு பேப்பரை அவள் முன் நீட்டினான்.

அதில் கேட்கபட்ட விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு ... அவனிடம் திரும்பி தர... அவன் வாங்கி சரி பார்த்து விட்டு ....

சரி... இன்னும் டூ டேஸ்ல நியூ க்ளாஸ் ஆரம்பிச்சிடும் ... ஆல் தி பெஸ்ட் என்றான்.

தேங்ஸ்...என்றவளை தொடர்ந்து ரகுராமனும் மரியாதை நிமித்தம் அவனிடம் கூறி கொண்டு விடை பெற்றனர்.

வெளிய வந்த போது , இந்த ஜாப் பத்தி தான் மஹிமா உன் காதில் மந்திரம் ஓதினாளாக்கும் என கேட்க அவள் சிரித்து கொண்டே ஆம் என்று தலையசைத்தாள்.

பேராசிரியர் நடத்தும் பாடம் கண்ணில் பதிந்தாலும் கருத்தில் பதிய விடாமல் பக்கத்தில் புழு போல் நெளிந்து கொண்டிருக்கும் மஹிமாவை அனல் பார்வை பார்த்தாள் வனிதா.

ஏன்டி.. இந்த புழி புழியர... கொஞ்சம் அடக்கி வாசியேன்

என் கவலை எனக்கு தான் தெரியும்... பசி உயிர் போகுதுடீ.. இப்போ இந்த ஆளு பாடம் நடத்தலனு யார் அழுதா... என்றவளின் குரல் தான் அழுவது போல் தோன்றியது.

மணிக்கு ஒரு தரம் எதாச்சும் கொறிக்கலைனா உன்னால இருக்க முடியாதே...

ஏன் சொல்லமாட்ட ரிஷிகா, உன்னை அப்போவே கூப்டேனே நீயும் பேசாம என் கூட வந்திருந்தா இந்த அறுவைல இருந்து தப்பிச்சிருக்கலாமே ஏன் வர மாட்டேன்னு சொன்ன ...? இப்போ பாரு இவர் பாடம் நடத்தி முடிக்கிறதுக்குள்ள என் வாழ்க்கை படம் முடிஞ்சிடும் போல இருக்கே... 

சத்தமில்லாமல் சிரிக்கும் தோழிகளை கோபமாக பார்த்தாள் மஹிமா

சிரிக்காதிங்கடீ... கடவுளே உனக்கு கண்ணே இல்லயா... எப்படியச்சும் மணி அடிக்க வச்சு என் வாய்க்கு போஜனம் இட்டு காப்பாத்தேன்...

உன் வாய்க்கு போஜனம் இடணும்னா கடவுள் கூட ஜர்க் ஆவார்

ஆசிரியரை முறைக்க முடியாத கடுப்பில் தன்னை கேலி செய்த ரிஷிகாவை முறைத்தாள் மஹிமா.

கடவுளுக்கு இரக்கம் வந்தது கோவில் மணி போல் கல்லூரி மணி ஒலிக்க விடை பெற்ற ஆசிரியரை விட வேகமாய் கேன்டீன் நோக்கி ஓடினாள் மஹிமா.

பின்னோடே சிரித்து கொண்டே வனிதாவும் ரிஷிகாவும்.

இருவரும் வந்து சேர்வதற்குள் தேவயானவற்றை கடை பரப்பி இருந்தாள் மஹிமா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.