(Reading time: 73 - 145 minutes)

சில நிமிடங்கள் கழித்து வந்தவர்கள் மீண்டும் கதையளக்க தொடங்கினர். அது எப்படித்தான் பெண்களால் மட்டும் மணி கணக்கில் பேச முடிகிறதோ... தந்தை அடிக்கடி வாய்க்குள் புலம்பும் வசனம் இப்போது ரிஷிகாவின் காதினில் ஒலித்தது.

சிரித்து கொண்டாள். 

சதுர வடிவில் இருந்த அந்த அறையில் எதிரெதிர் மற்றும் பக்கவாட்டில் என அடுக்க பட்டிருந்த கம்ப்யூட்டர்கள். அவற்றின் கீழ் போட பட்டிருந்த இருக்கைகளை வெளிபக்கமாக திருப்பி சட்டமாய் அமர்ந்து கதை பேசி கொண்டிருந்தனர். 

தன் மேசையில் இருந்த புத்தகத்தை எடுக்க இருக்கையை விட்டு ரிஷிகா எழவும்.. அறையினுள் ஒருவன் நுழையவும் சரியாய் இருந்தது.

புக்கை எடுப்பதை மறந்து வந்தவனை பார்வையிட்ட்டாள்.. 

அப்போது அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

தோழிகள் உட்பட மற்ற பெண்களும் எழுந்து நிற்க ... 

மரியாதை மனசுல இருந்தா போதும் ஸ்கூல் ஸ்டூடண்ஸ் மாதிரி எழுந்து நிக்கனும்னு அவசியம் இல்லை.. உக்காருங்க என்றான் ரிஷிகாவை பார்த்தவாறே...

நான் புக்கை எடுக்க எழுந்திச்சத சார் தப்பாய் புரிஞ்சி வச்சி இப்படி எல்லார் முன்னாடியும் வேண்டாம் என மறுத்ததும் வெட்கம் பிடித்து கொண்டது அவளுக்கு..

சில நொடிகளில் அவளுக்கு விளங்கி விட்டது ...இவன் தான் தங்களின் ட்ரைனர் என்று. பதில் பேசாது

தலையை குனிந்து கொண்டாள்.

என் பேர் சாஹித்யன்... நான்தான் உங்களுக்கு இந்த கோர்ஸ்க்கு ட்ரைன் பண்றேன்.

தன்னை அறிமுகபடுத்தி கொண்டு... பின் மற்றவர்களின் அறிமுகங்களையும் கேட்டு கொண்டான்.

ரிஷிகா தன்னை அறிமுகம் செய்யும் போது அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.

அதன் பின் வந்த சில நிமிடங்கள் பாடத்தில் கழிய...

இறுதியாக

ஓகே இன்னக்கி இது போதும்... நீங்க எல்லாரும் உங்களோட சிஸ்டம்ல வொர்க் பண்ணி பாருங்க என்றவாறு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து புத்தகத்தில் தன்னை மூழ்கி கொண்டான்.

சிறிது நேரத்தில் அதுவும் சலிப்பு தட்டி விட இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான்...அந் நேரம் சரியாக ரிஷிகாவும் எழ அந்த நாளின் இரண்டாவது முறையாக அவன் அவளை கூர்ந்து பார்த்தான்.

என்ன ..? என்பது போல் புருவம் உயர்த்த.. எதுவும் சந்தேகமா? என்று அவளின் சிஸ்டத்தை பார்த்தான்.. அது இல்லை என்பது போல் ஆஃப் பண்ணி வைக்க பட்டிருந்தது.

வேறென்ன.... என்று மீண்டும் அவளை பார்க்க அவள் சுடிதார் துப்பட்டாவின் முனையை திருகி கொண்டிருந்தாள். ஒரு முறை மட்டும் அவள் கண்கள் வாயிலை அடைய.. என்ன தோன்றியதோ சட்டென்று வெளியேறினான்.

பத்தடி இடைவெளியில் இவளும் பின் தொடர...

ஒரு இடத்தில் அவன் தேங்கி நிற்க.. அவளும் பத்தடி இடைவெளியில் தேங்கினாள்.

அவன் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான்.. அவளின் கை விரல்கள் துப்பட்டாவை திருகுவதை நிறுத்தவில்லை.

தூரத்தில் இருந்து கவுதம் கையசைத்து இவனை அழைக்க... இவன் வேக நடையெடுத்து அவனிடம் சென்றான்.

அடைத்து கொண்டிருந்த மூச்சை அப்போது ஆசுவாசமாய் வெளியிட்டாள் ரிஷிகா

பின் அங்கிருந்து அவளும் வேகமாக ரெஸ்ட் ரூமிற்க்குள் நுழைந்தாள்.

அவனுக்குள் ஓர் எண்ணம் .. எதற்காக அவள் தயங்கினாள் என்றறிய? திரும்பி அவளை பார்க்க அவள் ரெஸ்ட் ரூமிற்குள் செல்வது தெரிய... 

மெல்லிய புன்னகை அவன் இதழில் , இதற்காகவா இவள் அப்படி தயக்கம் காட்டினாள்... அவளின் குழந்தை தனமான செய்கையில் அவன் ஈர்க்கப்பட்டான்.

என்னடா...? முதல் நாள் க்ளாஸ் எப்படி போச்சு..

ம்ம்ம்.. நல்ல போச்சுடா என்றவன் கையில் ஒரு கப் காபியோடு அங்கிருந்த சோபாவில் கவுதமின் அருகில் அமர்ந்தான்.

அவன் பார்வை வெளியேறி கொண்டிருந்த ரிஷிகாவின் மேல் விழ நண்பனின் பார்வையை தொடர்ந்தது கவுதமின் பார்வையும்.

இவளா ..? இவ பேசவே மாட்டாளே... உனக்கு எப்படு தெரியும்?

அடிமிஷன் அப்போ அவ அப்பாவோட வந்திருந்தாடா.. அவ அப்பா தான் ஆயிரம் கேள்வி கேட்டு மனுஷன படுத்திட்டாரு.. ஆனா மேடம் ஒரு வார்த்தை கூட பேசல..

ஓஹ்.. இவ எல்லார்கிட்டயும் இப்படிதான் இருப்பா போல என்று எண்ணி கொண்டவனுக்கு , ஆனால் இவள் கொஞ்சம் வித்யாசமோ என்றும் தோன்றி வைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.