(Reading time: 73 - 145 minutes)

பேசியபடியே உண்டு கொண்டிருந்தனர் தோழிகள்.

ரிஷிகா.. வீட்டுல சொல்லிட்டியா... நாளைக்கு க்ளாஸ் இருக்கு அதோட காலேஜ் முடிஞ்சி நாம நேரா அங்க தான் போறோம் மறந்துடாத.

மறக்கலை வனிதா.. இன்னக்கி நைட் வீட்டுல சொல்லணும்.

அப்புறம் , அட்மிஷன் போடுறதுக்கு அப்பா கூட வந்தே தீருவேன்னு சொன்னதால உன்னை மட்டும் தனியா விட்டோம்.. இல்லனா அன்னக்கே மூணு பேருமா போய் இருக்கலாம் . அந்த மாறி எதையும் சொல்லி நாளைக்கும் தனியா போய்டலாம்னு வச்ச கொண்றுவேன்... ஆமா

விரல் நீட்டி எச்சரித்த மஹிமாவை ஆசையாய் கன்னம் தடவியவள்....

மாட்டேன் செல்லம்மா... கண்டிப்பா இந்த கோர்ஸ் முடியும் முழுக்க உங்க கூட தான் வருவேன்... என்னை பத்தி தெரியும்ல.. அப்பாவ நான் சமாளிச்சுப்பேன்... என்றாள்.

சொல்லியபடியே... இரவு உணவின் போது தாய் மீனாவிடமும்... தந்தையிடமும் மறு நாளுக்கான தங்கள் திட்டமிடலையும் கூறினாள்.

ரகுராமன் எதோ கூற வாய் எடுக்க...

அம்மா... இன்னக்கி சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..

பிடிச்சிருக்கு என்ற வார்த்தையில் மகள் அழுத்தம் கொடுத்தாளோ என்று ரகுராமனுக்கு தோன்றியது.

அப்படியாமா.. இன்னும் கொஞ்சம் வச்சிக்கோ என்று அவளின் தட்டில் மேலும் உணவு வைக்க அதையும் திருப்தியாய் உண்டுவிட்டு எழுந்து சென்றாள்.

உங்க மக அப்படியே உங்கள மாதிரிங்க... எப்படி உங்கள பதில் பேச விடாம வாயடைக்க வச்சா பார்த்தீங்களா... என்று கூறினார் மீனா

நானும் கவனிச்சேன்.. ஒத்த மகனு அவளோடு விருப்பத்துக்கு மாறா எதயும் செய்ய மாட்டேனு... ரொம்ப வாலாட்டுறா... சிரிப்போடு ஒலித்தது அவர் குரல்.

திய உணவு இடை வேளையில் அமர்ந்து கதை பேசியபடியே உணவு உண்டனர்...

அப்பாவிடம் சம்மதம் வாங்கியதை ரிஷிகா கூறிய பின் மஹிமாவை கையில் பிடிக்க முடியவில்லை.

அய்யோ எப்போது இந்த காலேஜ் முடியும் நாம் எப்போது சென்டர் செல்வோம் என்று துள்ளி குதித்து கொண்டிருந்தவளை...

அச்சோ யார்டி.. இவ கால்ல வெந்நீரை கொட்டுனது... 

என்ன சொல்லுற வனிதா.. புரியாமல் மஹிம்மாவும் ரிஷிகாவும் பார்க்க

அவளோ வந்த சிரிப்பை அடக்கி கொண்டே... 

இவ இப்படி ஆஸ்பூஸ்னு குதிக்கிறாளே அதான் கேட்டேன் என்கவும் 

மஹிமா அவளை மொத்மொத்தென்று மொத்தி கொண்டிருந்தாள்.

அது சரி நீ இப்படி க்ளாஸ்க்கு பறக்குற அளவுக்கு நல்லவ கிடையாதே என்ன விஷயம்.. என ரிஷிகா வினவ,

அதுவா.. அங்க இருக்குற காபி மேக்கர்ல இருந்து அன்னக்கி ஒரு கப் காபி குடிச்சேன் பாரு.. அட அட என்ன ருசி என்ன மணம் தெரியுமா... கண்ணில் கனா மின்ன கூறிய தோழியை இப்போது மொத்துவது மற்றவர் முறையானது.

ன்று முதல் நாள் என்பதால் நேரத்தோடே செல்ல வேண்டும் என்று எண்ணி தோழிகள் மூவரும்... ஆட்டோவில் சென்று இறங்கினர்.

ரிஷப்சனில் தங்கள் பெயரை கூறி அறிமுக படுத்தவும் அங்கிருந்த பெண்ணோ அவர்கள் செல்ல வேண்டிய வழியை காட்டினாள்.

மூவருமே.. அவர்களுக்கு கூறப்பட்ட அறைக்குள் நுழைய.. அங்கு இருந்த மற்ற மூன்று பேர் இவர்களை பார்த்து இயல்பாய் சிரித்தனர்.

ஹாய் என் பேர் நீலா, இவ மித்ரா.. அப்புறம் இவ அபிதா என தங்களை அறிமுக படுத்தி கொண்டனர்.

பதிலுக்கு மூவரும் தங்களையும் அறிமுக படுத்தி கொண்டனர்.

ஒவ்வ்வொருவரும் மற்றவரின் விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

சரிடி, ரொம்ப பசிக்குது... ட்ரைனர் வர லேட் ஆகும் போல இருக்கு ...வாங்களேன்... அப்படியே போய் ஒரு கப் காபி குடிச்சிட்டு வருவோம் என மஹிமா கேட்க மற்றவர்களும்... அவளோடு எழுந்து கொண்டனர்.

ஏய், ரிஷிகா நீ வரல.. என வனிதா வினவ,

இல்ல வனிதா நீங்க போய்ட்டு வாங்க .. நான் அப்புறம் குடிச்சிக்கறேன்.

சரிடா.. ரெஸ்ட் ரூம் போகனும்னா வாயேன் போற வழில தானே இருக்கு ...

இல்ல மஹிமா நீங்க போங்க நான் இங்கயே இருக்கேன். போய்ட்டு சீக்கிரம் வாங்க என்றவளை

நீலா ஒரு மாதிரியாக பார்க்க 

அவ இப்படித்தான்.... புது இடம்ன்ற கூச்சம் கொஞ்சம் அவளுக்கு உண்டு என்று கூறி மற்றவர்களை இழுத்து சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.