(Reading time: 8 - 16 minutes)

2017 போட்டி சிறுகதை 53 - மனைவி ஒரு மந்திரி - ஸ்ரீ

This is entry #53 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - ஸ்ரீ

Family

ழகான அந்த குடும்பத்தின் ஆணிவேர் அதன் குடும்ப தலைவர் குமார் காலையிலேயே வாக்கிங் முடித்து வந்து பேப்பரை ஆராய்ந்து கொண்டிருந்தார்..அவரின் சரிபாதி சந்திரா கையில் காபியோடு அவர் அருகில் அமர்ந்தார்..என்னம்மா பசங்க எழுந்திரிக்கலயா??

இல்லங்க ஞாயிற்றுகிழமைல எட்டு மணிக்கு குறைஞ்சு எழுந்துப்பாங்களா என்ன??

சரி அப்படி அந்த பேப்பர்ல என்னதான் இருக்குநு இப்படி படிக்குறீங்க??எங்க பாத்தாலும் கொலை கொள்ளைநு போடுறத தவிர என்ன இருக்க போகுது இத காலைலேயே வேற படிக்கனுமா??

பாருடா என்வீட்டு பெண்சிங்கம் பொது விஷயங்களையும் விட்டுவைக்குறதில்ல போல நீ பேப்பர் பக்கமே வரமாட்ட அப்பறம் எப்படி??

எனக்கென்னங்க தெரியும் நா என்ன உங்களமாறி  வேலைவெட்டிக்கா போய்ட்டு இருக்கேன் வீட்ல இருக்குற எனக்கு ஒரே பொழுதுபோக்கு டீவிதான்..அதையும் இப்போலா என்னத்த உருப்படியா பாக்க முடியுது ஒரு சீரியலாவது ரெண்டு பொண்டாட்டி கதையில்லாம இருக்காநு பாருங்க..மாமியார் மருமக சண்டைதான் சீரியல்நு இருந்தது போய் இப்போ பொம்பளைகளே பழிவாங்குறது தப்பான ழக்கம் கத்துக்கிறதுநு பாக்க சகிக்கல சரி எதாவது நியூஸ் பாக்கலாம்நு பாத்தா அது அதவிட கொடுமை இப்போலா டீவி பாக்குறதையே விட்டாச்சுங்க ஹம்ம்ம் என புலம்பியயபடி உள்ளே சென்றவளை கண்டு ஆச்சரியபடாமல் இருக்கமுடியவில்லை அவரால்..

குமாரின் பூர்வீகம் திருச்சி பக்கத்தில் சிறிய கிராமம்..இவர் படித்துமுடித்து ஆசிரியர் வேலை கிடைத்து சென்னைக்கு வந்தார் இருப்பினும் பெற்றோர் பார்க்கும் பெண்ணையே மணமுடிக்க எண்ணி அவர்களின் ஆசைப்படி சந்திராவை மணந்தவர்..சந்திரா குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்போடு கல்வியை நிறுத்திவிட்டார்..சென்னை வந்த ஆரம்பகாலத்தில் மிகவும் கூச்சமாக உணர்ந்தாலும் நாளடைவில் சென்னை வாழ்க்கை முறைக்கேற்ப தன்னை படிப்படியாய் மாற்றிக் கொண்டார்..மனைவி அவர் அளவுக்கு படிப்பில்லை எனினும் அவரின் சாமர்த்தியமான குணத்தால் குடும்பத்தை நல்ல முறையில் வழி நடத்துவதை நினைத்து நினைத்து பெருமை படுவார்..அவர்களுக்கு இரண்டு குழந்தைகள்..மூத்தவன் விக்னேஷ் இந்த வருடம் 12ம் வகுப்பிலும் கடைக்குட்டி மீனு 9ம் வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தனர்..இரு குழந்தைகளையுமே பெற்றவர்கள் தங்கள் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டனர்..ஆனால் விக்னேஷ் பதினோராம் வகுப்பு வந்ததிலிருந்தே சந்திராவிடம் கண்டிப்பு கொஞ்சம் அதிகரித்திருந்தது அதே நேரத்தில் மீனுவிடம் முன்பை விட நெருக்கமாய் இருப்பதாய் தோன்றியது இருப்பினும்  அவர் எதையும் நேரடியாய் கேட்டுக் கொள்ளவில்லை..

ஏதோ நினைவிலிருந்தவரை மகளின் குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது..குட்மார்னிங்ப்பா..

குட்மார்னிங் மீனுகுட்டி..அண்ணண எங்கடா காணும்..இப்போதான்ப்பா எழுந்துக்குறான் பாவம் நைட்லா ரொம்ப நேரம் படிக்குறான்ல..

ம்ம் அதுசரி உங்க அண்ணண நீ விட்டுகுடுக்க மாட்டியே சரி சரி போய் குளிச்சுட்டு டிபன் சாப்டு அப்பாவும் வரேன் என்றவாறு உள்ளே சென்றனர்.

அடுத்த அரைமணி நேரத்தில் அனைவரும் உணவு மேஜையில் அமர்ந்திருக்க சந்திரா அனைவருக்கும் பரிமாறினார்..

என்ன விக்கி நாளைக்கு எக்ஸாம்க்கு ப்ரிபேர் பண்ணிட்டியா??

யெஸ்ப்பா பண்ணிட்டேயிருக்கேன் கண்டிப்பா நல்ல மார்க் வாங்கிடுவேன்ப்பா..

உன்னப்பத்தி எனக்கு தெரியாதா இருந்தாலும் பயிற்சி இருந்துட்டேயிருக்கனும் அப்போதான் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..

அந்தநேரம் பக்கத்துவீட்டு அனிஷ்கா கையீல் சாக்லேட் பாக்ஸோடு வந்தாள்..விக்னேஷைவிட ஒரு வயது சிறியவள் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்கள்..சற்று வசதியானவளும்கூட..இருப்பினும் இரு குடும்பங்களும் நண்பர்களாகவே பழகினர்..அன்று அவளின் பிறந்தநாள் என அங்கு வந்திருந்தாள்..

ஹாய் அங்கிள் ஹாய் ஆன்ட்டி இன்னைக்கு என் பர்த்டே சாக்லேட் எடுத்துக்கோங்க..

பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா அனி..காட் பெலஸ் யூ என பெரியவர்கள் வாழ்த்த அடுத்து விக்னேஷ்ற்கும் மீனுவிற்கும் கொடுத்தாள்..

விக்னேஷ் சட்டென சிரித்து,என்னடீ டிரெஸ் இது சின்னபசங்க போடுறமாறி என்று கேட்க போடா லூசு உனக்கு சாக்லேட் கிடையாது போ என்றவாறு முறைத்துச் சென்றாள்..

அவள் தலை மறைந்தவுடன் சந்திரா மகனிடம்,விக்கி அது என்ன டிரெஸ் பத்தி எல்லாம் கிண்டல் பண்றது நீ இன்னும் சின்ன பையன் இல்ல வயசுக்கேத்தமாறி நடந்துக்கோ அதுவும் போக இனி அனிஷ்காவ டீ போட்டுலா குப்டாத ஒழுங்கா பேர் சொல்லி கூப்பிடு புரியுதா..

சாரிம்மா இனி இப்படி பேசமாட்டேன் என தலை குனிந்து கொண்டான்..குமாருக்கே அவனை பார்க்க பாவமாய் இருந்தது..சரி அப்போதைக்கு அதை பெரிதாக்க வேண்டாம் என விட்டுவிட்டார்..

அன்றைய பொழுது அப்படி இப்படியாய் கரைய குழந்தைகள் இருவரும் வெளியே விளையாட சென்றுவிட மனம் பொறுக்காமல் மனைவியிடம் கேட்டார்..ஏன் சந்திரா பாவம் விக்கி காலைலே நீ அப்படி பேசிருக்க கூடாது ஏதோ சின்ன பசங்க விளையாட்டுத்தனமா பேசினா இப்படியா பண்றது அனியும் நம்ம வீட்டு பொண்ணு மாறிதான..ஆனா இப்போநு இல்ல கொஞ்ச நாளாவே நீ விக்கிகிட்ட ஒருமாறியும் மீனுகிட்ட ஒருமாறியும் நடந்துக்குறியே ஏன்..விக்கி மனசளவுல வருத்தப்பட போறான்ம்மா..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.