(Reading time: 8 - 16 minutes)

சின்னதாய் புன்னகைத்தவர் ஏங்க எனக்கு மட்டும் அது தெரியாதா என்ன இருந்தாலும் இது அவனோட நல்லதுக்குதான்ங்க இன்னும் சொல்லப் போனா அவனை சரியான பாதைல நடத்துறதுக்குதான்..

என்னம்மா சொல்ற நீ இப்படி திட்டினா அவன் எப்படி நல்ல பாதையில் இருப்பான்னு நம்புற..

என்னங்க பையனோ பொண்ணோ பெத்தவங்களுக்கு எப்பவுமே குழந்தையாதான் தெரியுவாங்கா ஆனா அதுக்காக அவங்களோட சிந்தனைகள் அப்படியே இருக்கப் போறது இல்லங்க அந்தந்த வயசுக்கேத்த விஷமங்கள் அவங்களுக்கு இருக்கும்..அதுவும் இந்த பருவ வயசு ரொம்பவே ஜாக்கிரதையா இருக்க வேண்டிய ஒண்ணு அவங்க நல்லவங்களா மாறுவதும் தவறான பாதைக்கு தூண்டுகோலா இருப்பதும் இந்த வயசுதான்..

நம்ம காலத்துல பொண்ணுங்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடு உண்டு..ஆனா இன்னைக்கு இருக்குற நிலைமைல பசங்களுக்குதான் கட்டுபாடுகள் நிறைய தேவைபடுது..பொண்ணுங்களுக்கு எப்படி இத பண்ணாத அப்படி இருக்காதநு சொல்லி குடுக்குறோமோ பசங்களுக்கும் சில விஷயத்தை இந்த வையசுல சொல்லி கொடுக்கனும்..ப்ரெண்டா இருந்தாலும் என் சகோதரியாவே இருந்தாலும் அவங்கள மதிச்சு நடக்க சொல்லித் தரணும்..அவன் பையன் எப்படி வேணா இருப்பான் நீ தான் பாத்து நடக்கனும்னு சொல்ற காலத்துல நாம இல்லங்க..பொண்ணுங்க எப்படி எல்லா துறையிலும் ஆண்களுக்கு நிகரா இருக்காங்களோ பசங்களும் அப்போ அந்த மரியாதையை கத்துகிறதுல தப்பு இல்லையே..

நம்ம ஊர்ல பொண்ணுங்களுக்கு என்னங்க பாதுகாப்பு இருக்கு செய்தியை பாத்தாலே நெஞ்சு பதறுது தைரியமா தனியா வயசான பாட்டியால கூட போக முடியாது போல வீட்டு சூழ்நிலைக்காக கஷ்டப்பட்டு படிச்சு வேலைக்கு போய் ஊர்விட்டு ஊர் வந்து தங்கி எவ்வளவோ கஷ்டத்துல பெத்தவங்களுக்காக உழைக்குற பொண்ணுங்க ஒவ்வொருத்தருமே தெய்வம்தான் அவங்களுக்கு பாதுகாப்பா இருக்க வேண்டியது ஆண்களோட கடமை..ஆனா பாதிக்கு மேல ஆண்கள் அதை தனக்கு சாதகமா பயன்படுத்திக்க தான் பாக்குறாங்களே தவர பாதுகாப்பா இருக்குறதில்ல..

அதனாலதான் விக்கிகிட்ட கொஞ்சம் கண்டிப்போடேயே நடந்துக்குறேன் ஏன்னா நாம ரெண்டு பேருமே அவனுக்கு செல்லம் குடுத்துதான் வளர்த்தோம் ஆனா இப்போ யாராவது ஒருத்தர் மேல பயம் இருக்கனும்ங்க தப்பு சரி சொல்லி குடுக்கனும் நாளைக்கே காலேஜ்க்கு போனப்பறம் அவனுக்கு நட்புவட்டம் எப்படி அமையுமோ தெரியாது அதுக்குளள்ள அவனை பக்குவபடுத்துறதுக்குதான் இப்படி பண்றேன்..

அதே நேரம் மீனுகுட்டி இப்போ பெரியவளாய்ட்டா அவளால எல்லாத்தையும் உங்ககிட்ட பகிர்ந்துக்க முடியாது அவளுக்கு ஆதரவா இருக்க வேண்டிய ஆள் நான்தான்..அப்போதான் வெளிலே நடக்குற எல்லாத்தையும் மறைக்காம என்கிட்ட சொல்லுவா அதுல அவளுக்கு ஆபத்து எதுவும் இல்லாம நம்மலாள தடுக்க முடியும் பத்துநாள் முன்னாடி கூட கடைக்கு போய்ருந்தப்பா யாரோ ஒரு ஆளு இவளபபத்தி விசாரிச்சாராம் கன்னத்த தட்டி பேசினாராம் வந்தவுடனே என்கிட்ட வந்து சொன்னா நானும் பக்குவமா இதபாருடா இனி யார் கேட்டாலும் உன்னபத்தி விவரமெல்லா சொல்ல கூடாது முதல்ல உன்ன யாரையும் தொட்டு பேச விடக்கூடாதுநு சொன்னேன் அவளும் புரிஞ்சுகிட்டா..இதையே நா கண்டிபோட சொல்லியிருந்தா இனி அவ இந்தமாறி விஷயங்கள என் பார்வைக்கு கொண்டு வரவே மாட்டா..அது அவளுக்கு நல்லதில்லைங்க..

ம்ம்ம் இந்த காலத்துல பையன் என்ன பொண்ணு என்ன இரண்டு பேரையும் பொத்தி பொத்திதான் வளர்க்க வேண்டியிருக்கு..நாடு போற போக்குக்கு வருங்காலத்தை நாம ஒழுங்கு படுத்தினாதான் உண்டு நீங்க வேற எதையும் போட்டு மனச குழப்பிக்காதீங்க..எனக்கு ரெண்டு பிள்ளைங்களும் ஒண்ணுதான்..நா போய் காபி எடுத்துட்டு வரேன் இருங்க என்று சென்றவளை பார்த்து பேச்சிழந்திருந்தார்..

படிப்பிலும் வேலையிலும் என்ன உயர்ந்து என்ன, மனைவி ஒரு மந்திரிநு சும்மாவா சொன்னாங்க மேலோட்டமா பாத்தா ஒண்ணுமேயில்லாத விஷயமா தெரிஞ்சதுக்குள்ள இவ்ளோ இருக்கே..படிப்புக்கும் அறிவுக்கும் சம்மந்திமில்லநு என்ன அழகா புரிய வைச்சுட்டா..இவள மாறி எல்லாரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டா வருங்கால ஆண் பெண் கண்ணோட்டம் என்ன ஒரு உயர்நிலையில் இருக்கும்..இந்தகால சமுதாய பிரச்சனையின் முடிவை ஒரு நொடியில் கூறிமுடித்துவிட்டாள்..மனைவி மந்திரியாய் செயல்படும் எந்த ஒரு குடும்பம் தவறான பாதையில் கால் வைக்கப் போவதில்லை..

ஆண்கள் அரணாய் இருந்து

பெண்மையை போற்றுவோம்..

பாரதி கண்ட புதுமை பெண்களாய்

அவர்கள் சுதந்திர வானில் சிறகடிக்க

தோள் கொடுப்போம்..”

 

This is entry #53 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - ஸ்ரீ

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.