(Reading time: 8 - 16 minutes)

2017 போட்டி சிறுகதை 68 - மனைவி ஒரு மந்திரி - VJG

This is entry #68 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - மனைவி ஒரு மந்திரி

எழுத்தாளர் - VJG

Marriage

நினைக்கும் போதே சுளீரென வலித்தது........ ரங்கநாதனுக்கு, என் மனைவி இந்த ஆத்தின் தூண் இதை ஏன் நான் கவனிக்க தவறினேன், ஒவ்வொருவரின் மனைவியும் அவர்கள் வீட்டின் தூண்கள், இது நிறைய புருஷர்கள் அறியாமையே இருக்கிறார்கள், நான் வேலைக்கு போய் சம்பாரிச்சு வருவதே பெரிய வேலைன்னு நினைச்சிண்டிருக்கேன்,

என்னங்காணும் என்ன பண்றீங்க?" பக்கத்து வீட்டு ராஜகோபால் வந்து கேட்டுக் கொண்டிருந்தான்

"அது ஒண்ணுமில்லங்காணும், நான் என் பொண்டாட்டிய பத்தி நினைச்சிண்டிருக்கேன்"

"என்ன ஆச்சு உங்காத்து மாமிக்கு?"

"அது ஒண்ணுமில்ல, ஆனா ஒன்னு சொல்லுங்கோ உங்காத்து மாமிய பத்தி நீங்க என்ன நினைக்கறேள்?"

"ஏன்னோ.... இப்போ அவள பத்தி ஞாபகப் படுத்தறேள், சொல்லுங்கோ உங்க மனசுல என்ன இருக்கு, ஏன் இப்படி சுத்தி வளைக்கறேள்?"

"ப்ச்..... அது ஒண்ணுமில்ல ராஜகோபால், அது வந்து...... சரி அத உடுங்கோ, உங்களுக்கு சில்சீ.இன்... னு கேள்வி பட்டிருக்கீங்களா?"

"இல்லேன்கானும், அது என்னது?"

'அது ஒரு வெப் சைட், அவா சைட்ல நிறைய புதிய எழுத்தாளர்கள அறிமுகப் படுத்தறா, அதுல வர கதைகளை படிச்சா, புதிசா  முதல் தடவையா எழுதற மாதிரியாவே இருக்காது, எல்லா கதையும் ரொம்ப நல்லா இருக்கும்"

'அப்படியா?"

'ஆமாம்! ஆனா, அவா இப்ப புதுசா ஒரு சிறுகதை போட்டி (short  story ) 2017  அறிவிச்சிருக்கா, அதான் இப்ப நான் யோசிட்டிருக்கேன்"

"ஓ ! அப்படியா?

“"நீர் என்ன பண்ண போறேள் ரங்கநாதன்?"

"அது சரி, உம்ம ஆத்துக்காரிய பத்தி நீர் என்ன நினைக்கறேள்?"

"ஏன் ஓய், இந்த நேரத்துல அவளை ஞாபகப் படுத்திண்டு?"

"ஏன், அவாளுக்கு என்ன, நீர் உம்ம பொண்டாட்டிய பத்தி என்ன நினைக்கறேள்?"

என் பொண்டாட்டிய பத்தி நினைக்க என்ன இருக்கு ஓய்?, என்னமோ சமையல் பண்றேன் பேர்வழின்னு சும்மா ஏதோ ஏத்தி இறங்க்கிண்டு இருக்கா"

"ஏன் ஓய் அவாளை இப்படி பேசறேள், நம்மாத்துகாராள அதுவும் நமக்காகவே வாழறவாள இப்படிலாம் சொல்லலாமா?"

"நீர் என்ன ஓய், பொம்மனாட்டிகளுக்கு சப்போர்ட் பண்றேள்"

சுகுணா மாமி, வீட்டிலிருந்து இறங்கும் போதே இவர்களுடைய சம்பாஷனையை கேட்டுக் கொண்டே வந்தாள்

“"என்னண்ணா என்ன பத்தி மாமாகிட்ட சொல்லிண்டிருக்கேள்?"

"ஐயோ, அதெல்லாம் ஒண்ணுமில்லடி சும்மா பேசிண்டிருக்கோம்"

"அப்படியா, என்னது அது என்ன பத்தி ஏதோ பேச்சு வந்ததே

"அதெல்லாம் ஒண்ணுமில்லடி , சும்மாத்தான் பேசிட்டிருந்தோம்"

'அதான் கேட்டுண்டே வந்தேனே?"

'ஓ, கேட்டுட்டியா?? ஹி ஹி.....ஹீ"

"ம்... கேட்டுட்டேன், மாமா அவருக்கென்ன தெரியும், நான் என்னெல்லாம் ஆத்துல செய்யறேன்னு சொல்லுங்க பார்க்கலாம், அவரை கேட்கிறீரே?"

"இல்லம்மா, நான் எதுவும் தப்பா கேக்கல"

"தெரியும் மாமா, நீங்க பேசறதை கேட்டுண்டுதான் வந்தேன்"

"அப்படியா, ஒன்னும் தப்பா பேசலாமா"

"தெரியும் மாமா, ஆனா இவர் என்ன பேசினார்னும் எனக்கு தெரியும் மாமா"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல மாமி, நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்கோ"

"அது சரி இப்போ என்ன உங்களோட விவாதம்'

'அது ஒண்ணுமில்ல மாமி, நீங்க போயிட்டுவாங்கோ, அப்புறம் அவரே ஆத்துக்கு வந்து எல்லாம் விரிவா சொல்லுவார்"

"சரின்னா, நான் கொஞ்சம் கடைக்கு போயிட்டு வரேன் அப்படியே குழந்தைகள் உள்ள இருக்க கொஞ்சம் பார்த்துக்கோங்கோ, நான் இதோ வந்துடறேன், நான் வரேன் மாமா"

'சரி மாமி போயிட்டு வாங்கோ "

"அப்பாடா போயிட்டா, இல்லேன்னா என்ன நொக்கி எடுத்திருப்பா"

"அப்படி சொல்லாதையும், நீங்க உங்க குடும்பத்துக்காக என்ன செயதிருக்கேள் இது வரை?"

"என்ன செய்யணும் ஓய்? அதான் சம்பாதிச்சு போடறோம் அப்பறம் என்ன?"

"அதோட முடிஞ்சுடுத்தா?"

"இன்னும் என்ன செய்யனும்கானும் சொல்லுங்க ?"

"இல்லங்காணும், உங்களுக்கு, உங்காத்துக்காரி, ஒரு நாள் பூரா என்ன செய்யறா, எப்படி எல்லாத்தையும் சமாளிக்கறான்னு தெரியுமா?"

"அத பத்தி நமக்கென்ன சொல்லுங்கோ பார்க்கலாம், கார்த்தாலே போனா நாம சாயங்காலம் ஆத்துக்கு வரோம், அதெல்லாம் அவ பார்த்துப்பா"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.