(Reading time: 17 - 33 minutes)

2017 போட்டி சிறுகதை 69 - மூன்றெழுத்து கெட்ட வார்த்தை - புவனேஸ்வரி கலைசெல்வி

This is entry #69 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்புக்கேற்ற கதை - காதல் & நட்பு

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

 Love

ஸ்ரீநிஷான்”.. அவன் பெயரை செல்ஃபோனில் பார்த்ததுமே ஸ்ரீநிதியின் முகமும் அகமும் மலர்ந்து போனது. அப்படி என்ன தான் இருக்கிறதோ அவனிடம்! அது அவளே அறிந்திடாத மாயம் தான்! கள்ளன் அவனை மனதினுள் கொண்டாடியபடி அவனது அழைப்பினை ஏற்று விட்டிருந்தாள் ஸ்ரீநிதி. இதுவரை நிதியின் வாழ்க்கை வரலாற்றினில், நிஷானின் அழைப்பினை அவள் எடுக்காமலிருந்ததாய் சம்பவமொன்று நிகழ்ந்ததே இல்லை.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், அவன் ஃபோன் செய்யும்போது மட்டும், அவளது உள்ளுணர்வுகள் விழித்துக் கொள்ளும். உடனே ஃபோன் எடுத்து விடுவாள். “போனை கையில வெச்சுக்கிட்டே நான் எப்போ கூப்பிடுவேன்னு வெயிட் பண்ணுவியா அம்மு?” என்று ஸ்ரீநிஷான் நக்கலாய் கேட்டால், அசடு வழிந்து சிரித்து வைப்பாள் அவள். இதோ இப்போதும் அப்படித்தான்!

“ஸ்ரீ.. குட் மார்னிங்”

“குட் மார்னிங் அம்மு பிசியா?”. அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தாள் ஸ்ரீநிதி. என்னாச்சு இவளுக்கு என்ற கேள்வியுடன்,

“அம்மு?” என்றான் அவன். தவிப்புடன் வெளிப்பட்ட அவனதுகுரல் அவளின் உயிரை ஊடுருவியது.

“ ஸ்ரீ என்னாச்சுமா? ஏன் உன் குரல் இவ்வளவு டல்லா இருக்கு?” உயிரைத் தேக்கி வைத்து கனிவான குரலில் வினவினாள் ஸ்ரீநிதி. அவனிடம் பேசும்போது மட்டும் “மா” போட்டு பேசியே பழகிவிட்டிருந்தாள் அவள். நிஷானுக்குமே இந்த அழைப்பு மிகவும் பிடித்தம் தான். தன்னை சுற்றி உள்ளவர்கள் அண்ணார்ந்து பார்க்கும் அளவு கீர்த்தி உள்ளவன்தான் ஸ்ரீநிஷான். பணம், புகழ் என்ற இரண்டையும் கடந்து அவனிடம் காந்தப்பூர்வமான ஆளுமை ஒன்று இருந்தது. அது அனைவரையும் இயக்கி வைத்தது. அப்படிப்பட்டவனை “மா” போட்டு பேசி ஐந்து வயது சிறுவனாக்கிடும் கலை ஸ்ரீநிதியிடம் மட்டுமே உள்ளது.

காலையிலிருந்து மனதில் தேங்கியிருந்த குழப்பங்களின் பாரம், குறைந்தது போல ஒரு ப்ரம்மை உருவானது அவனுக்குள்.

“அம்மு.. உன்கிட்ட பேசுணும்டா”

“பேசுமா.. என்ன பிரச்சனை?”

“இல்ல அம்மு நேரில் தான் பேசணும்..”

“சரி வீட்டுக்கு வரட்டுமா?”

“வீட்டுக்கா?”. நிஷானின் ஒற்றைக் கேள்வியிலேயே அவனது மனதினைப் படித்தவள்,

“பீச்கு வரேன்.. குளிச்சிட்டேன்.. இன்னும் பத்து நிமிஷத்துல வருவேன்மா” என்றாள் ஸ்ரீநிதி.

“ஹேய் அம்மு, அவ்வளவு அவசரம் இல்லைடா.. நீ பொறுமையா ட்ரைவ் பண்ணிட்டு வா..”

“ஹும்கும்… என் ஸ்ரீக்கு மனசு சரியில்லாதபோது நான் லேட்டா வருவேனா? நோ சான்ஸ்.. நான் சீக்கிரம் வந்துடுவேன்..பட் நீ மனசு சரியில்லாமல் இருக்க.. சோ மெதுவா ஜாக்கிரதையா வா.. இல்லைன்னா உன் சாரதியை கூட்டிட்டு வா!” என்றவள் இன்னும் சில வார்த்தைகள் பேசி அவனை சிரிக்கவைத்துவிட்டு ஃபோனை வைத்தாள் ஸ்ரீநிதி.

என்னத்தான் இயல்பாய் பேசினாலும் மனம் வலித்தது அவளுக்கு. ஸ்ரீநிஷான் அவளுக்கு மட்டும் மிகவும் கலகலப்பானவன். ஆனால் அவன் மனமோ பல ராஜாக்கள் கூட கட்டிடாத சுரங்கபாதைகளைக் கொண்டது. அவன் மனமெனும் ஆழ்கடலில் மீன்களும் உண்டு திமிங்கிலமும் உண்டு. அதை கண்டறிந்து வலை வீசும் கலையைத்தான் யாருமே கற்க அதிகம் முயற்சிக்கவில்லை, ஸ்ரீநிதியைத் தவிர!

ஸ்ரீநிதிக்கும்- ஸ்ரீநிஷானுக்குமான உறவு மூன்றெழுத்து வார்த்தைகளால் பிணைக்கப்பட்டது. சில பேருக்கு அது “காதல்”. சில பேருக்கு அது “நட்பு”. சரி அவர்களிடமே இந்த உறவின் பெயரென்ன என்று கேட்டால், நிஷான் ஒரு புன்னகையுடன் தப்பித்துவிடுவான். நிதியோ, காதலையும் நட்பையும் தாண்டிய உறவு, உலகம் இதுவரை கண்டிடாத காவியமென பேசிப் பேசியே நம்மை குழம்பிட வைப்பாள்.

ஆனால், இன்று அப்படியில்லை! அவர்களின் கண்ணாமூச்சியின் முடிவே இன்றுதான்! நட்பினுள்  ஒளிந்திருந்த காதலொன்று வெளிவர வேண்டிய நாள் இது.

ஸ்ரீநிஷான் பெரியதொரு மனச்சுமையில் இருந்தான். எப்போதும் ஸ்ரீநிதிக்கு பிடித்தவாறு பேசியே பழக்கப்பட்டவன் அவன். ஆனால், இன்று அவளுக்கு பிடிக்காத ஒன்றைப் பற்றி பேச போகிறான்!

கல்யாணம்! ஸ்ரீநிஷானின் ஜாதகம் போடுகின்ற தாளத்தில் அவன் தள்ளாடிக் கொண்டிருந்தான். உடனே அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டுமாம்! அதுவும் உறவுக்கார பெண்ணை. ஓரளவு முடிவு செய்த பிறகுதான் அவனுக்கே பெரியவர்கள் சொன்னார்கள். வீட்டில் இப்படி திடீர் முடிவு எடுக்கப்படவும், கண்களில் நீர் கோர்க்க ஸ்ரீநிதி தன் எதிரில் நிற்பது போல தோன்றியது அவனுக்கு.

ஸ்ரீநிதி, எல்லா விஷயத்திலும் நிஷானுக்கு சாதகமாகத்தான் இருப்பாள். இந்த ஒரு விஷயத்தை தவிர! விளையாட்டிற்குகூட அவன் யாராவது ஒரு பெண்ணை பற்றி பேசினாலும் அவளது முகம் வாடிவிடும், அல்லது கோபத்தில் கொப்பளிக்கும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.