(Reading time: 17 - 33 minutes)

ஹ்ம்ம்”

“நீ இப்படி டல்லா ஆகிடுவன்னு அண்ணாவுக்கு தெரியும். அதான் உன்னை சந்திக்க சங்கோஜப்படுறான்..”

“அப்படின்னா, அவனுக்கு கல்யாணம் பண்ணிக்கிறதுல சங்கோஜம் இல்லை.. அதை என் கிட்ட சொல்லுறதுக்கு தான் சங்கோஜமா?” என்று குதர்க்கமாய் கேட்டாள் ஸ்ரீநிதி.

“அம்மா தாயே, இந்த மாதிரி டீப் டைலாக்ஸ் (DEEP DIALOGUES) எல்லாம் நீயும் நிஷானும் பேசிக்கோங்க.. எனக்கெல்லாம் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு..”

“..”

“சீக்கிரம் பேசி ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வாங்க!”என்றான் ஸ்ரீநிவாஸ்.

“ஸ்ரீ காரில் தானே இருக்கான்?”

“இது கூட தெரியுமா உனக்கு?”

“ என்னை வர சொல்லிட்டு, அவன் உன்னை தனியாக அனுப்பி வைப்பானா? நீ இங்கயே இரு.. சரியாக பத்து நிமிஷம் கழிச்சு வா.. உன் கேள்விக்கு பதில் கிடைக்கும்” என்றாள் ஸ்ரீநிதி

“நிஜமாவா?”

“என்ன நிஜமாவா?”

“பத்து நிமிஷம் போதுமா?”

“யெஸ்” என்றவள், ஓடியே விட்டிருந்தாள். அடுத்த பத்து நிமிஷம் கழித்து ஸ்ரீநிவாஸ் அங்கு வந்தபோது, நிஷானின் இறுகிய அணைப்பில் இருந்தாள் ஸ்ரீநிதி. இருவரின் விழிகளிலும் ஆனந்த கண்ணீர்..

“அஹெம் அஹெம்” என்று ஸ்ரீநிவாஸ் தொண்டையை செருமிக் கொண்டான்.

“என்னடா இம்சை?” போலியான எரிச்சலில் கேட்டாள் நிதி.

“என்ன மேடம், வீட்டுல நான் பேசி கல்யாண டேட்டை ஃபிக்ஸ் பண்ணிடவா?” என்று அவன் கேட்கவும், புன்னகையுடன் சம்மதித்தாள் ஸ்ரீநிதி. ஸ்ரீநிஷான்- ஸ்ரீநிதி இருவரின் விழிகளும் சங்கமித்துக் கொள்ள அந்த நாள் மூவருக்குமே மறக்க முடியாத நாளாக அமைந்து போனது.

ன்றரை மாதங்களுக்கு பிறகு!

“ஸ்ரீநிஷான் வெட்ஸ் நிவேதிதா”! அந்த திருமண மண்டபத்தில் அலங்காரத்தை ரசித்தபடி நின்றிருந்தாள் ஸ்ரீநிதி. அவள் தலையில் செல்லமாய் கொட்டினான் ஸ்ரீநிவாஸ்.

“பிசாசே, முகுர்த்த நேரம் வர போகுது..வாசலில் என்ன வேடிக்கை?”

“நிவேதிதாவுக்கும், ஸ்ரீக்கும் செம்ம பொருத்தம்ல நிவாஸ்?” என்று ஆவலாக கேட்டாள் நிதி.

“நிஜமா சொல்லு,. உனக்கு கஷ்டமா இல்லையா?” ஆராயும் தொனியில் கேட்டான் ஸ்ரீநிவாஸ். இதே ஸ்ரீநிதி தானே அன்று கடற்கரையில் திருமண பேச்சுக்கு சம்மதம் என்றாள்? அன்றைக்கு அவள் சொன்னது நிஜமென்றால் இன்று நடப்பது என்ன? பதில் புரியாதவனுக்கு தலை சுற்றியது.

“டேய் டைம் ஆகுது.. ஸ்ரீ என்னை தேடுவான்.. நான் போறேன்..”

“நிது..”

“என்னடா?”

“நீ எனக்கு ப்ராமிஸ் பண்ணிருக்க!”

“என்ன ப்ராமிஸ்?”

“ஹேய், நிவேதா அண்ணியை பொண்ணு பார்க்க போறோம்னு தெரிஞ்சப்போவே நான் ரொம்ப ஷாக் ஆனேன்..கல்யாண் பேச்சு உனக்கும் அண்ணாவுக்கும் இல்லை, அண்ணனுக்கு நிவேதிதா அண்ணிக்கும்னு தெரிஞ்சதும் ஒன்னுமே புரியல எனக்கு.. அப்போ பீச்ல என்ன நடந்துச்சுனு உன்கிட்ட கேட்டதுக்கு, நிஷானின் கல்யாணத்துக்கு அப்பறம் சொல்றதா நீதானே ப்ராமிஸ் பண்ணின?”என்று கேள்விகளை அடுக்கினான் நிவாஸ்.

“சரி சரி.. இதுக்கு ஏன் மூக்கு உறிஞ்சுற? கல்யாணத்துக்கு அப்பறம் சொல்லுறேன்.!” என்று சிட்டாய் பறந்தாள் ஸ்ரீநிதி. மணமேடையில் மகிழ்ச்சியின் மொத்த உருவாய் அமர்ந்திருந்தான் ஸ்ரீநிஷான். அவனது கண்களோ நிதியை தேடி அலைப்பாய்ந்தன. அவனை காக்க வைக்காமல் அங்கு வந்தவள், பெரு விரலை நீட்டி வாழ்த்து தெரிவிக்க, நிவேதிதாவின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தான் ஸ்ரீநிஷான்.

திருமண சடங்குகள் முடியும்வரை பொறுத்திருந்த ஸ்ரீநிவாஸ், அதன்பின் ஒரு கணமும் தாமதிக்காமல், நிதியை மொட்டை மாடிக்கு அழைத்து சென்றான்.. ம்ம்ஹ்ம்ம் கடத்தி சென்றான்னு சொல்லலாம்.

“ஹேய் கையை விடு நிவாஸ்.. உன் சொந்தக்காரவங்க யாராச்சும் பார்த்திட போறாங்க..”

“அதை அப்பறமா பார்த்துக்கலாம் .. சொல்லு சொல்லு சொல்லு”

“என்ன சொல்ல?”

“எனக்கு பைத்தியம் பிடிச்சிரும்டீ”

“புதுசாகவா?”

“நிதூ…!!”

“ சரி சரி சொல்லுறேன்.. அப்படியே மேல பாரு!”. நடந்ததை கூற ஆரம்பித்தாள் ஸ்ரீநிதி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.