(Reading time: 17 - 33 minutes)

நிவாஸ், மனுஷங்களை ரெண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்னு அன்பை அதிகமாய் கொடுக்க தெரிஞ்சவங்க, இன்னொன்னு அன்பினை வாங்க தெரிஞ்சவங்க.. நீயும் நானும் இதில் முதல் ரகம்.. எப்பவுமே எக்ஸ்ப்ரசிவ் (EXPRESSIVE)! ஆனா ஸ்ரீ அதுக்கு அப்படியே எதிர்!”

“..”

“அதுக்காக அவன் அன்பில்லாதவன்னு சொல்லமாட்டேன்.. அன்பினை காட்ட தெரியாதவன் அவன்..”

“..”

“ நான் ஸ்ரீகிட்ட காட்டுற அன்பை உன்கிட்ட காட்டினா, உன் கண்ணுக்கு நான் நொய்நொய்ன்னு நச்சரிக்கிற கேரக்டராக தெரிஞ்சிருப்பேன்.. நீயும் பேசுவ.. நானும் பேசுவேன்.. ஆனால் ஒருத்தருடைய பேச்சை இன்னொருத்தர் புரிஞ்சுப்போமா தெரியல! ஆனால் ஸ்ரீ அப்படி இல்லை.. அவனுக்கு என்னுடைய நச்சரிப்பின் மறுபக்கம் புரியும்..”

ஸ்ரீநிதியின் பேச்சைக் கேட்டு பெரிதாய் புன்னகைத்தான் ஸ்ரீநிவாஸ்.

“ நீ என்னை பாராட்டுறியா? இல்ல இன்சல்ட் பண்ணுறியான்னு தெரியல.. ஆனால் நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்..”

“ஹாஹா .. சொல்லு என்ன?”

“ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்..”

“ஹான் என்ன?” என்று அதிர்ச்சியாய் பார்த்தாள் ஸ்ரீநிதி.

“ நீ சொன்ன அதே தியரி தான்! அன்பு கொடுத்துகிட்டே இருக்குறவங்களுக்கு என்னைக்காவது சோர்வு வரும்.. அப்போது நம்ம கிட்ட எதுவும் எதிர்ப்பார்க்காமல் அன்பு கொடுக்க யாராச்சும் வேண்டும்னு மனசு ஏங்கும்… உனக்கு நானும் எனக்கு நீயும் பக்கம் இருந்து அன்பை கொடுக்கலாமே..?”

“என்ன பேசுற நீ?”

“நான் ஒன்னும் விளையாட்டுக்கு சொல்லல.. அன்னைக்கு பீச்ல உன்னையும் அண்ணாவையும் பார்த்தப்போ ஏதோ ஒன்னு கைவிட்டு போன மாதிரி கஷ்டமா இருந்துச்சு.. நிவேதா அண்ணியை பொண்ணு பார்க்க போனப்போ அப்பாடானு நிம்மதியா இருந்துச்சு.. அதுக்கு அப்பறம்தான்  என் மனசுல என்ன இருக்குனு எனக்கே புரிஞ்சது”

“என்ன புரிஞ்சது? இது ரொம்ப சில்லியா இருக்கு இது!”

“இப்படி யோசிச்சு பாரேன்.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா, நீயும் நிஷானும் உன்னுடைய பெஸ்ட் ப்ரண்டா ஒரே வீட்டுல இருக்கலாம்ல?”

“அப்படியே அறைஞ்சேன்னா தெரியும்! உன்னை நான் ஏத்துக்குறதா இருந்தால், அது உனக்காகத்தான் நடக்கனும்.. உன்னை பயன்படுத்தி எனக்கு எதுவும் வேணாம்” என்று சொல்லும்போதே அவளது குரல் உடைந்தது.

“ ஹேய் போதும் போதும்.. உன் கண்ணீருக்கு நான் வொர்த்து இல்லம்மா.. டைம் எடுத்துக்கோ யோசி.. என்னைக்காச்சும் லவ் வந்தா கல்யாணம் பண்ணிக்கலாம்.. எனக்கு ஆயுசு கெட்டி, 60தாம் கல்யாணம் கூட பேஷ் பேஷ்னு பண்ணிடலாம்” என்று சிரித்தான் நிவாஸ். கையை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்து முறைத்தாள் ஸ்ரீநிதி.

“ எல்லாம் காதல் என்கிற மூன்றெழுத்து கெட்ட வார்த்தை பண்ணுற மாயம்!”        என்றாள் அவள்ள் சலிப்பாக.ச

“கெட்ட வார்த்தையா? ஹலோ மேடம், நட்புக்கும் மூணு எழுத்து தான்!”

“இருக்கட்டுமே.. அதென்ன கெட்ட வார்த்தையா?”

“ரெண்டுமே கெட்ட வார்த்தை இல்லை தான்.. இப்போ நீ நட்பின் விளிம்பில் நிற்கிற, நான் காதலின் விளிம்பில் நிற்கிறேன்.. ஒரு நாள் ரெண்டு புள்ளியும் இணையும்..!”

“அன்னைக்கு ரெண்டு கெட்ட வார்த்தையும் நல்ல வார்த்தையாகிடும்! அப்படித்தானே நிவாஸ்?” என்று சிரிப்புடன் அவள் கேட்க,

“ஆமா நிதூ…”என்றான் ஸ்ரீநிவாஸ். சோ அவங்க சேர்ந்தாங்களா இல்லையா? அதை அவங்க கையிலேயே விட்டுட்டு டாட்டா சொல்லிக்கலாமா?

ஹாய் ப்ரண்ட்ஸ்! “காதல்” மற்றும் “ நட்பு”  இரண்டு கருவையும் பயன்படுத்தி கதை ஒன்று படைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.

BEST FRIENDS NEVER PROPOSE TO EACH OTHER..

BUT ONE GET HURT WHEN ANOTHER COMMITTED ..

இந்த வார்த்தைக்கு பின்னாடி மறைக்கபட்ட காதல் தான் இருக்கனும்னு அவசியமில்லை.. மாசற்ற நட்பும் இருக்கலாம்னு நான் என் வாழ்வில்  உணர்ந்ததை இந்த கதை மூலம் சொல்லிட்டேன்..இந்த கதையை எனக்குள் தூண்டிவிட்ட என் நட்புக்கு இக்கதை சமர்ப்பணம். “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்?”..

 அடுத்த கதையில் சந்திப்போம். பாய் பாய்

 

This is entry #69 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்புக்கேற்ற கதை - காதல் & நட்பு

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.