(Reading time: 8 - 16 minutes)

ம்ம ஆத்துல எவ்வ்ளோ வேல இருக்கு தெரியுமா? நாம வெறும ஆபிஸ்ல செய்யற வேலைக்கு பெரிசா எதையோ சாதிச்சுட்ட மாதிரி பேசறோமே, நம்மாத்துகாரில்லாம் எவ்வ்ளோ வேல ஆத்துல பண்ரான்னு தெரியுமா உமக்கு?"

"நமக்கு அத பத்தி என்னங்காணும் ஆத்துல தான இருக்கா அதைக்கூட பார்க்கலேன்னா எப்படிங்காணும் சொல்லுங்கோ பார்க்கலாம்?"

"ஆனா நாம எல்லாம் நாட்டு நடப்பு தெரிஞ்சுக்க ஆச படற அளவு, நம்ம ஆத்து நடப்ப தெரிஞ்சுக்க ஆச படறதில்லன்னு நான் நினைக்கறேன்"

"ஏன் அப்படி சொல்றீங்கோ?"

“ஆமாம் ஓய், நாம எல்லாம் நம்ம ஆத்தையும், நம்ம மனைவிகளுக்கு நம்மால முடிஞ்ச உதவியும் செய்ஞ்சா நல்லது, ஏன்னா அவா செய்யற ஆத்து வேலைகள் என்னென்னன்னு உமக்கு தெரியுமா? சும்மா சம்பாரிச்சு போடறேன், நான் சம்பாரிச்சு போடறேன்னு சொல்றீங்களே"

"என்ன சொல்ல வறீங்கோண்ணா?"

"இல்ல ராஜகோபால், அவாவா ஆத்துல, பொம்மனாட்டிகள் எவ்வளவு வேலை பண்ரா தெரியுமா, சும்மா விளையாட்டுக்கு சொல்லல அவா ஹோம் மினிஸ்டர்னு, அவா காலங்கார்த்தால எழுந்தா, ராத்திரி பதினோரு மணி வரைல அவா எவ்வளவு வேலை பண்ரா தெரியுமா?

"சரி ஓய் அதுக்கு நாம என்ன பண்ணனும் சொல்லுங்கோ?"

“நாம நம்ம பொண்டாட்டிகளை புரிஞ்சுண்டு, அவாளுக்கு நம்மாலான உதவிய செய்யனும், அவாளை முதல்ல மதிக்க கத்துக்கணும்"

"என்னண்ணா சொல்றேள்?"

"ஆமா ராஜகோபால், உம்ம பொண்டாட்டி என்ன படிச்சிருக்கா சொல்லுங்கோ பார்க்கலாம், என் பொண்டாட்டி பன்னெண்டாவதுதான் படிச்சிருக்கா"

"என் பொண்டாட்டி பத்தாவதுதான் படிச்சிருக்கா "

"ஆனா கொஞ்சம் யோசியுங்கோ என்னல்லாம் ஆத்துல பண்ரான்னு"

"அவா நாம செய்ய வேண்டிய அத்தன வேலையையும் அவாளே இழுத்து போட்டுண்டு செய்யறா, வீட்டு கம்ப்ளீட் மேனேஜ்மென்ட் அவா பண்றா. அது மட்டுமில்ல ஒரு நாள் கூட அவாளுக்கு சமையல் கட்டுலேர்ந்து லீவ் கிடையாது, நாம வேலை செய்யற இடத்ததுல எத்தன நாள் நமக்கு லீவ் கடைக்கறதுன்னு பாக்கறோம், பாவம் அவாளை எப்பவாது நினைச்சு பார்த்திருக்கோமா சொல்லுங்கோ? நான் நம்ம பொண்டாட்டிமார்கள மட்டும் சொல்லல, நம்ம அம்மாக்களையும் சேர்த்துதான் சொல்றேன் , என்னிக்காது அவாளுக்காவது நாம ஹெல்ப் பண்ணிருக்கோமா? அதுவும் கிடையாது"

"என் பொண்டாட்டி கார்த்தாலே எழுந்தா கோலம் போடறதுல ஆரம்பிச்சு   ராத்திரி படுக்க போறவற எவ்வளவு வேல செய்யறா தெரியுமா, அதே மாதிரித்தான் எல்லார் வீட்டு பொம்மனாட்டிகளும்,  நாம ஒண்ணுமே நம்ம குடும்பத்துக்காக  பண்றதுல்ல தெரியுமா?"

"ம்ம்...என்ன சொல்லவறேள் ஓய்?" யோசிக்க ஆரம்பித்திருந்தான் ராஜகோபால்

"நான் சொல்ல வந்தது என்னண்ணா, நம்மாத்து வேலைகள் எவ்வளவுன்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ ராஜகோபால்,  ஒவ்வொரு ஆத்துலயும் எத்தனை எத்தனை வேலையிருக்கு, அவாளுக்கு எவ்வளவு பொறுப்பு பாருங்கோ, நான் என்னோட பொண்டாட்டி எங்காத்து மந்திரி ஓய்"

"அட என்ன சொல்றீங்கண்ணா?"

"என்னண்ணா சொல்றேள்? உம்ம ஆத்து மாமி மந்திரியா?"

அவாதான ஓய், ஆத்துல பசங்கள ஸ்கூலுக்கு கூட்டிண்டு போறா,  அவாள படிக்க வக்கறா, அவாள நல்லபடி வளக்கறா, நாம செக் எழுதி கொடுத்தா பாங்குக்கு போய் கியூல நின்னு வாங்கிண்டு வருவா, தினம் மளிக சாமானும், பால் காய்ன்னு, வாங்கிண்டு வரனும், குழந்தை கள குளிக்க வக்கனும், அவாளுக்கு டிரஸ் பண்ணணும்…..”

“அண்ணா நிறுத்துங்கோண்ணா, அது மாட்டும் ரயில் வண்டி மாதிரி போயிண்டே இருக்கு…..”

உமக்கு கேக்கவே கஷ்டமாயிருக்கே அதுவும் நான் இன்னும் பாதிகூட சொல்லல, அதுக்குள்ளவே உமக்கு கேக்க சஷ்டமாயிருக்கு, நினைச்சு பாருங்கோ அவாளுக்கு எப்படியிருக்கும்னு?"

"அது கரெக்ட்டுதான் ஓய், ஆனா என்ன பண்றது சொல்லுங்கோ?"

"அவளை அப்படித்தான் நான் பார்க்கறேன் ஓய், என்னோட கருத்து படி மனைவி ஒரு மந்திரி ஓய்' நம்மள விட அவாளுக்கு வில் பவர் அதிகம், எடுத்துக் கொண்ட வேலையை ஒழுங்காக முடிக்கிறதில் ஆர்வம், பிடிவாதம் எல்லாம் அவாகிட்ட உண்டு, அவா எதை நினைச்சாலும், முனைஞ்சாலும் அவளால அத செய்யமுடியும், அவாளுக்கு திறமையும், மனோதிடமும் உண்டு,"

"அது..... சரிதான் ஓய், அண்ணா, நீங்க லேடீஸ் சப்போர்ட்டாங்காணும் "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.