(Reading time: 10 - 20 minutes)

திலே பேசவில்லை கெளதம்

இப்போ ஆண்டவன் தெளிவா சொல்லிட்டான். குறை அவ கிட்டே இல்லடா உன் புத்தியிலே, உன்னோட கேவலமான எண்ணங்களிலேன்னு...'

ஒரு தீர்கமான மூச்சு கௌதமிடம்.

'உங்ககிட்டே சொல்றதுக்கு என்ன??? அவ என்னை விட்டு போனதுக்கு அப்புறம் எங்க வீட்டிலே நிம்மதியே இல்லை. எல்லாத்திலேயும் தோல்விதான். முடிஞ்சா ஒரே ஒரு தடவை அவளை என்னை மன்னிக்க சொல்லுங்க. அதுக்கு அப்புறமாவது என் நிம்மதி கொஞ்சம் திரும்பி வருதான்னு பார்ப்போம். நீங்க ரெண்டு பேரும் குழந்தையோட எப்பவும் நல்லா இருக்கணும். நான் வரேன் கெளதம்..' கையெடுத்து வணங்கி விட்டு நடந்தான் ஆதி.

ரண்டு நாட்கள் கடந்திருக்க மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு வந்திருந்தாள் சௌம்யா. குழந்தை அருகில் உறங்கிக்கொண்டிருக்க கௌதமின் மார்பில் சாய்ந்திருந்தாள் அவள்.

இவளிடம் எப்படி சொல்வது??? சொல்வதா வேண்டாமா என்று பல முறை யோசனைகளில் விழுந்து எழுந்து பின் மெல்ல அவளை அழைத்தான் கெளதம்

'சௌம்யா...'

'ம்...'

'நம்ம பாப்பா பிறந்துசில்ல அப்போ... ஆதி வந்திருந்தார்..'

'ஆதியா??? எதுக்கு??? திடுக்கென நிமிர்ந்தாள் அவள்.

'குழந்தையை பார்க்க..' என்றான் கொஞ்சம் இறங்கிய குரலில். அவள் முகத்தில் அப்பட்டமான மாற்றம்.

'நீங்க என்ன சொன்னீங்க..'

'என்ன சொல்றது??? நான்தான் கூட்டிட்டு வந்து குழந்தையை காமிச்சேன்..'

'அய்யோ... ஏன்??? எழுந்து அமர்ந்தே விட்டாள் சௌம்யா ' அவர்கிட்டே எல்லாம் போய் நம்ம பாப்பாவை ஏன் காமிச்சீங்க??? குரலில் கோபம் ஒட்டிக்கொண்டது.

'இல்லடா ..'

'பேசாதீங்க... நீங்க என்கிட்டே பேசாதீங்க...' என்றபடி அவள் அங்கிருந்து விலகி செல்ல முயல அவள் கை பற்றிக்கொண்டான் கெளதம்.

'சௌம்யா,,, நான் சொல்றதை ஒரு தடவை கேளேன்...'

..............................

'சௌம்யா ப்ளீஸ்...' அவன் இதமாய் கெஞ்ச மறுபடி அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

'உங்களுக்கென்ன??? அந்த ஆதியாலே எவ்வளவு அழுது இருப்பேன் நான். குழந்தையை காரணம் காட்டிதானே என்னை விரட்டி விட்டாங்க. இப்போ என்னவாம்???'

'இப்போ எல்லாத்தையும் உணரந்திட்டார்ன்னு தோணுது....'

'மண்ணாங்கட்டி..'. என்றாள் அவள்

'இல்லமா அவருக்கு குழந்தை இன்னும் இல்லை. ஆண்டவன் எனக்கு எல்லாத்தையும் புரிய வெச்சிட்டான். இப்போ எனக்கு நிம்மதியே இல்லைன்னு...சொன்னார்.' 'உன்கிட்டே மன்னிப்பு கேட்டேன்ன்னு சொல்ல சொன்னார்..'

பதில் பேசவே இல்லை சௌம்யா. 'மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகி விடுமா என்ன???'

'மன்னிச்சிடலாம் சௌம்யா... ' என்றான் மெதுவாக.' அவங்களும் நல்லா இருக்கட்டுமே!!!'

'அவர் நிறைய தப்பு செஞ்சிருக்கார். இல்லைன்னு சொல்லலை. பட் வாழ்கையிலே முன்னாடி என்னைக்காவது ஒரு நாள் அவர் உன்னை ஒரு நிமிஷமாவது மனசார விரும்பி இருப்பார் இல்லையா. அதுக்காக ஒரே ஒரு தடவை அவர் நல்லா இருக்கட்டும்னு உன் வாயாலே சொல்லிடு..' என்றான் அவன். 

வியப்பு மேலோங்க நிமிர்ந்தாள் சௌம்யா. 'எப்படி கெளதம் உங்களாலே இப்படி யோசிக்க முடியுது..'

'நாம இப்போ சந்தோஷமா இருக்கோம் இல்லையா??? அதே மாதிரி அவங்களும் இருக்கட்டும். சொல்லிடு ப்ளீஸ்,, ப்ளீஸ்..' அழகான புன்னகையுடன் அவள் கன்னம் வருடியபடியே சொன்னான் கெளதம் .

....................................................

'சொல்ல மாட்டியா???

'உங்களுக்காக... உங்க நல்ல மனசுக்காக சொல்றேன்.. 'அவங்களும் நல்லா இருக்கட்டும்...' என்றபடி கண்களை மூடி மறுபடி அவன் மார்பில் சாய்ந்தாள் சௌம்யா!!!!

 

This is entry #81 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்

எழுத்தாளர் - வத்சலா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.