(Reading time: 6 - 11 minutes)

2017 போட்டி சிறுகதை 80 - கணவனின் மறுபக்கம் - மலர்

This is entry #80 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - மலர்

Heart

பூவிழி மூலம் என்னை அறிமுகப்படுத்திய சில்சி  குழு மற்றும் கருத்துக்கள் மூலம் என்னை ஊக்குவித்த தோழமைகள்  அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் ....

ணவன் ...

திருமண பந்தத்திற்கு பிறகு , கணவன் என்பவன் மங்கையின் வாழ்வில் இன்றியமையாதவனாகிப் போகிறான்.. அவனது நல்ல அல்லது தீய குணங்கள் அவள் வாழ்வை புரட்டிப் போடும் ஷக்தியைப் பெற்று விடுவது என்னவோ வியப்பிற்குரியது...!!!

அவ்வாறு , பல மாற்றங்களைக்  கண்ட ஒரு பெண்ணின் வாழ்வையே இங்கு பதிவிடுகிறேன்.....

செப்டம்பர் 18, 2015...!!!

அன்று காலைப்  பொழுது பலவித எதிர்பார்ப்புகளுடன் புலர்ந்தது மலருக்கு... !!! ஆம் .... அன்று திருமணத்திற்குப்  பின் அவளது முதல் பிறந்த  நாள்...  அவளுக்கும் அத்தை  மகனான துரை  மச்சானுக்கும் மணமாகி மூன்று மாதங்கள் முடிவடைந்திருந்தது... 

மலர் 21 வயது நிறைந்த பெண் ... பல கஷ்டங்களை சந்தித்ததால் வயதுக்கு மீறிய பக்குவமம் அமைதியும்  இருந்தது அவளிடம்.. வாழ்வில் வெற்றி தோல்விகளை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளப்  பழகி இருந்தாள் ... ஆனால் , கணவனிடம் மட்டும் ஏனோ  குழந்தையாய் மாறிப் போய்  விடும் அவள் மனம்..

அதனால் தானோ என்னவோ, கணவன் தனக்குப் பிறந்த நாள் பரிசளிக்க வேண்டும் என்று எல்லை மீறிய ஆவல் அவளிடம்...

துரை  ...!!! அவன் அமைதியில் மலருக்கு ஒரு படி மேலே என்று கூட சொல்லலாம்... ஆனால்  மற்ற விஷயங்களில் அவளுக்கு நேரெதிர்..  எவ்வளவு பெரிய விஷயத்தையும் அவள் எளிதாய் ஏற்றுக் கொள்ள, அவனோ சின்னச் சின்னக் காரியத்தையும் ஆராய்ந்து செயல் படுத்துபவன் ...

எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றை ஒன்று ஈர்க்கும் என்பதுதான் எவ்வளவு உண்மை!!!

என்ன காரணமோ , அவள் அறியாள் !!! ஆனால்  , சிறு வயதிலிருந்தே அவனது ஒவ்வொரு செயளையும் அவள் மனம் ரசிப்பதை என்றும் தடுக்க முடிந்ததில்லை அவளால் ...  என்னவென்றே தெரியாத ஈர்ப்பு அவனிடம் உண்டு... அத்தனைக்கும் அவர்கள் பேசிக்கொள்வது சில மாதங்களுக்கு ஒரு முறை...  அதிலும் கூட அவனது பதில்கள் எப்போதும் விட்டேற்றியாகத்தான் இருக்கும்...

இதைக் காதல் என்று அவளால் அர்த்தப்படுத்த இயலவில்லை... வருடங்கள் உருண்டோட...  நாளுக்கு நாள் அதிகமாகி வரும் விவாகரத்துக்களையும் , குடும்பப்  பிரச்சனைகளையும் பார்த்து மிரண்டு போன மலர் "தான் திருமணம் செய்து கொள்ளப்  போவதில்லை " என்றுதான் நினைத்திருந்தாள் ..ஆனால்  , அடுத்த வருடமே பெற்றோர் துரை  மச்சானுடன் தான் திருமணம் என்றதும் உடனே "சரி" என்றது எப்படி சாத்தியம்???  அப்பொழுதுதான் தன மனதையே முழுமையாய் உணர்ந்தாள் மலர்...

இதோ இப்பொழுது திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஒரு வித அவசரத்திலும் புது அனுபவங்களிலும் மின்னலாய் மறைந்து  விட்டது... இன்று அவளது 22 வயதில் அடியெடுத்து வைக்கும் நாள்... என்னவோ எதிர்பார்த்த அவள் மனம் அவனது ஒற்றை வரி வாழ்த்தில் நத்தையாய்  சுருண்டு போனது... மனதில் ஒரு இனம்புரியா வலி... மனதில் சிறு சுணக்கம்... என்னதான் கட்டுப்படுத்தினாலும் அழுகை முட்டிக்கொண்டு நின்றது...  சுரத்தே  இல்லாமல் அலுவலகம் சென்ற அவளை , உடன் பனி புரிபவர்களின் கேள்விகளோ மேலும் மேலும் வதைத்தது...

"முதல் பர்த்டே இல்ல... என்ன கிப்ட் கொடுத்தார் " ???  கணவனை வீட்டுக் கொடுக்க மனமின்றி எதோ சொல்லி நகர்ந்து விட்டாள் ..

ந்த சிறு துவக்கம் , அவனது ஒவ்வொரு சிறு குறைகளையும் ஆராய வைத்தது.. அவள் மனதளவில் அவன் மீது கொண்டிருந்த காதல் சோதிக்கப்படும் தருணமோ???  ஆம் .. கொஞ்சம் கொஞ்சமாய் அவள் மனதளவில் வெற்றிடம் உருவாகிறதோ ??? இந்த சிறு விஷயத்தை நாம்தான் பெரிது படுத்துகிறோமோ என்று அவ்வப்போது தோன்றினாலும் முழுமையாய் அவள் மனம் சமாதானப்படவில்லை..

நாம் மட்டும் தான் அவனை விரும்பினோமோ?? அவன் பெற்றோருக்காக மட்டும்தான் நம்மைத் திருமணம் செய்து கொண்டானோ என்ற எண்ணம் அவள் மனதை அரிக்கத் தொடங்கியது... திருமண முடிவு எடுத்த போது  அவன் குறிப்ப்பிட்ட அவனது முதல் காதல் ஏனோ  இப்போது சமயம் பார்த்து மனத்தைத் தட்டியது....

ஒரு வேளை  அதுதான் அவன் என்னைத் தவிர்க்கக்  காரணமோ?? சிறிது சிறிதாய் அந்த விஷயம் பூதாகரமானது... சநதேகம் மனதில் இருந்தாலும் இப்போது அதை அவனிடம் கேட்டு அவனைக் காயப்படுத்தவும் அனுமதிக்கவில்லை அவளின் பெரிய மனது..!! ஒரு நாளாவது கொஞ்சம் பூ வாங்கி வந்துவிட மாட்டானா என்று ஏங்கிப்  போகும் மனதை அடக்கும் வழி அறியாமல்  தவித்துப் போனாள் ...

அப்போதுதான் அவர்களுக்கு இனிக்கும் நாளாய் அவள் கருவுற்றிருந்தாள் ...

சந்தோஷத்தில் திளைக்க வேண்டிய அந்த நேரத்தில் அவளுக்கு பயம் தொற்றிக்கொண்டது... தான் தாயாகும் பக்குவத்தை அடைய வில்லையோ என்று மனம் உழன்றது...

ஆனால் !!! என்ன ஆச்சரியம்...! அவள் எல்லாக் கவலைகளையும் துடைத்தெறிந்தான் அவளது கணவன்... ஆம் ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.