(Reading time: 6 - 11 minutes)

ன்ன ஒரு விவரிக்க முடியாத மாற்றம் அது.. அவளால் நம்பவே முடியவில்லை...

இதுவரை , அவனது அலட்சியத்தையும் மேம்போக்கான தன்மையையும் மட்டுமே உணர்ந்திருந்தவள்.... இப்போது அவனிடம் மறைந்திருந்த தாய்மையை அவனது மறுபக்கத்தைக் கண்டாள்.... அவள் உணவு உண்ண  முடியாமல் திணறிய போதும் சரி... வாந்தியில் அவதிப்பட்ட போதும் சரி... சட்டென்று மாறும் மனநிலையினால் சிரிக்கும் போதும் சரி... அவன் அவளுக்காகவே வாழ்ந்தான்...

அவளது உணர்வுகளைத் துல்லியமாய்ப் புரிந்து கொண்டான்.... அவள் அம்மாவின் அருகாமைக்கு ஏங்கிய போது  ஒரு தாயாய்  அவன் நடந்து கொண்ட விதம் , அவளை எங்கோ கொண்டு சென்றது... சிறு குழந்தையாய் அவளை அவன் கவனித்துக்கொண்ட விதமாகட்டும் , உடல்நிலையில் அவன் எடுத்துக்கொண்ட அக்கறையாகட்டும்... அவள் மேல் காட்டிய உரிமையாகட்டும்....

எல்லாம் பெண்ணவளுக்கு புதியதொரு அத்தியாயத்தைக் காட்டியது... அவன் மீது வளர்த்து வைத்த கோபமெல்லாம் போன இடமே தெரியவில்லை... பத்து மாதங்கள் பத்து நாட்களாய்க் கரைந்து போனதென்னவோ அவனது அன்பினால் மட்டுமே சாத்தியம்...!!!

மகப்பேறுக்காக அவள் தாய்வீடு செல்லும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியைத் தாண்டி அவள் மனதை எதோ ஒன்று அழுத்தியது... முதன் முதலாய் அவனைப் பிரிந்து செல்வது இவ்வளவு வலிக்கும் என்று முன்பே தெரிய வில்லையே... அவனும் என்னுடன் வந்து விட்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும் ???? பிரிவு கொண்ட மனம் மௌனமாய் அழுதது...

அவர்கள் பயத்துடனும் ஆவலுடனும் எதிர்பார்த்த நாளும் வந்து விட்டது .. ஆம் ...

ன்று மார்ச் 30 , 2015 ...

இரவெல்லாம் கண்விழித்து அனைவரும் காத்திருக்க,

அவர்கள் திருமணம் நடந்ததைப் போலவே ... அதிகாலை 4.20 க்கு திங்கள் கிழமையில் வந்து இவ்வுலகைத் தரிசித்தான்  அவர்களிருவர் வாழ்விற்கு ஆனந்த அர்த்தம் சொன்ன "ஆனந்தன் "...

அடுத்த மூன்றாவது மாதத்தில்... பொக்கை  வாய் சிரிப்புடன்  "ஆனந்தக்குமரன் " என்று பெயர் சூட்டிக்கொண்டான் அந்தக் குட்டி இளவரசன் ...!!!

எல்லா சூழ்நிலைகளும் ஒன்று போல் அமைவதில்லை.. ஏதோ ஒரு சூழலில் நமது மனதின் மென்மையான அல்லது கடுமையான  மறுபக்கம் வெளிப்பட்டு விடுகிறது... அதுவே இயல்பும் கூட.. ஆதலால் நமது குடும்பத்த்தில் மட்டுமல்ல , உடன் இருப்பவர்களிடம் கூட அவர்களது  நிறைகளைப்  போற்றி , குறைகளை அகற்றி மென்மையான மனதின் பக்கத்தை உணர்ந்து கொள்வோம்....!!!!

 

This is entry #80 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - கணவனின் மறுபக்கம்

எழுத்தாளர் - மலர்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.