(Reading time: 6 - 11 minutes)

2017 போட்டி சிறுகதை 82 - அழகிய கனாக்காலம்... - டோனா

This is entry #82 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி நாட்கள்

எழுத்தாளர் - டோனா

School Days

ள்ளி நாட்கள்... உண்மையாவே அழகான நாட்கள் அது...

ஸ்கூல்க்கு போக அடம்புடிச்சி அம்மாவ ஆத்தாவனு கைல யார் கிடைக்குறாங்களோ எது கிடைக்குதோ அத கட்டிப்புடிச்சி அழறப்போ அம்மா நம்மள ஸ்கூல் அனுப்புறதுக்கு நறுக்குனு நம்மள கிள்ளி நம்ம ஆ-னு கைய விரிச்சி கத்துறப்போ அப்படியே அலேக்கா நம்மள தூக்கி வேன்ல இருக்குற ஆயம்மாட்ட ஒப்படைச்சிட்டு போவாங்க.. போய்ட்டு நம்ம அழுதத நினைச்சியோ இல்ல அவங்க நம்மள கிள்ளுனத நினைச்சியோ அவங்களும் கண்ண கசக்கிட்டு இருப்பாங்க...(ஹிஹி... நான் டெய்லி கிள்ளு வாங்கிட்டு தாங்க போவேன் அப்போ... எங்க அம்மா use பண்ணுற டெக்னிக் இது)

அப்படி ஆரம்பிக்குற ஸ்கூல் டேஸ் அப்புறம் அப்படியே வளர்ந்து ப்ரண்ட்ஸ்,, அரட்டை,, கேங்,, பனிஷ்மன்ட்,, அஸைன்மன்ட்,, எக்ஸாம்,, பிட்டு,, காப்பி,, டூர்,, கேம்ப் இப்படி பல வழியில லைப்ல ஒரு முக்கியமான பார்ட்டா மாறிடும்... அப்புறம் நம்மள லீவ் போட வைக்கறதுக்கே நம்ம அம்மா நம்மள கெஞ்சுற மாதிரி ஆய்டும்... எம்புட்டு சேஞ்சஸ்ல????

10th,11th,12th தான் முக்கியமான வருஷங்கள்.. அதுல கிடைக்குற ப்ரண்ட்ஸ்ல சில பேர் கண்டிப்பா நம்ம lifetime ப்ரண்ட்ஸா வருவாங்க.. பெரிசா கதை எதும் சொல்ல வரல.. நான் படிக்கறப்போ நடந்த ஒரு குட்டி இன்ஸிடன்ட்ட தான் சொல்ல போறேன்.. 

பொதுவா பெஸ்ட் டீச்சர்னா யார் தெரியுமா..??

பெஸ்ட் டீச்சர்= செம knowledge + குடும்பத்துல ஒருத்தவங்க மாதிரி அக்கறை + தட்டிக் கொடுத்து படிக்க வைக்கும் திறமை + டவுட்டோ பிரச்சனையோ ஆல்வேஸ் available + ரொம்ப முக்கியமா கலாய்க்கும் திறன்...

அப்படி ரொம்ப பேர் இருக்க மாட்டாங்க.. அப்படி யாராச்சும் உங்க வாழ்க்கைல வந்துறுந்தாங்கனா நீங்களும் லக்கி தான்..

12த் படிக்கறப்போ இயற்பியல் வேதியல் பாடங்களுக்கு ட்யூஷன் போவோம்.. எங்களுக்கு காலைல 6-7 இயற்பியலும் 7.10-8.10 வேதியலும் இருக்கும்.. பிசிக்ஸ் sir வீட்டுக்கு மாடியில தான் ட்யூசன் நடக்கும்.. ஒரு பெரிய வராண்டா.. 75 பேர் உக்காந்து இருப்பாங்க.. அத தாண்டி அதே மாடியிலயே ஒரு ரூம்.. அங்க ஒரு 75 பேர் இருப்போம்.. வராண்டாவையும் ரூமையும் இணைக்குற சுவற்றுல ஒரு ஜன்னல்.. ரூம்ல இருக்குற எங்களுக்கு முதல்ல பிசிக்ஸும் வெளியில இருக்குறவங்களுக்கு கெமிஸ்ட்ரியும் நடக்கும்.. முடிஞ்சதும்10 நிமிஷம் பிரேக்.. அதுக்கு அப்பறம் ஒரு மணிநேரம் கெமிஸ்ட்ரி.. மேல சொன்ன எல்லா qualities-உம் உள்ள கெமிஸ்ட்ரி சார் தான் எங்க பெஸ்ட் டீச்சர்.. ஸ்ட்ரிக்டும் கூட.. இப்போ வரைக்கும் வேற யாரையும் பாத்ததில்ல... 

அவர் க்ளாஸ்ல சொல்லாம லீவ் போட அனுமதி இல்ல.. பிசிக்ஸ் ட்யூசன் கூட ஜாலியா கட் அடிச்சிறுவோம்.. கெமிஸ்ட்ரிக்கு கரக்ட்டா ஆஜர் ஆய்டுவோம்ல.. ஆனா பிசிக்ஸ் சார்-அ கூப்ட்டு எங்கள மாட்டி விட்டுட்டு நாங்க முழிக்கிறத பாத்து சிரிச்சிட்டு க்ளாஸ் ஆரம்பிப்பார் அந்த நல்லவர்.. 

ரு நாள் காலைல செம மழை.. ட்யூஷன்க்கு போக இஷ்டமே இல்லாம தான் போய் உட்கார்ந்திருந்தோம்.. நாங்க கவனிக்குறோமோ இல்லையோ,, பேசுறோமோ தூங்குறோமோ.. எதுக்கும் அசராம எதுக்கும் கலங்காம கருமமே கண்ணாய் நடத்திட்டு இருந்தாரு எங்க பிசிக்ஸ் சார்.. அப்போ சுவற்றுல இருக்குற ஜன்னல் open ஆச்சு.. வரண்டால இருக்கற க்ளாஸ்க்கு கெமிஸ்ட்ரி எடுத்துட்டு இருந்த சார் தான் அத open பண்ணுனது.. 

பிசிக்ஸ் சார் பாத்துட்டு ஐன்னல் பக்கம் பேசப் போனார்... க்ளாஸ தவிர எல்லாத்தையும் ஆர்வமா கவனிக்குற பழக்கம் எங்க எல்லார்க்குமே உண்டு.. சார் சொன்னத கேட்டுட்டு எல்லாரும் ரொம்ப அமைதி ஆய்ட்டோம்..

எங்க ஸ்கூல் பொண்ணு திவ்யாவோட அம்மா இறந்துட்டாங்கனு சொல்லிட்டு ஐன்னல்ல மூடிட்டாரு... பிசிக்ஸ் சார்க்கு அவர் நடத்தி முடிக்கணும்.. அத தவிர எதும் தெரியாது... கொஞ்ச நேரம் திவ்யா யாரு,, எங்க உக்காந்திருப்பாங்கனு கேட்டுட்டு "வாங்கப்பா நம்ம படிச்சிக்கிடலாம்"னு சொல்லிட்டு நடத்த ஆரம்பிச்சிட்டாரு... அழுகை, சோகம், ஏன் யாருக்கும் அவ சொல்லலங்கற குழப்பம்.. எப்படியோ 7 மணி ஆச்சு...

கெமிஸ்டரி சார் இன்னிக்கு க்ளாஸ் வேணாம்.. கிளம்புங்கனு சொல்லவும் எல்லாரும் கிளம்பிட்டோம்.. ட்யூஷன் சென்டர்ல இருந்து ஸ்கூல்க்கு போற வழியிலயே எவளோ திவ்யாக்கு கால் பண்ணி கேட்டு இறந்தது அவ பாட்டினு சொல்லவும் எல்லார்க்கும் சந்தோஷம் தான்.. 

ஆக்ஷ்வலா நடந்தது இது தான்.. திவ்யாவோட அப்பா அவரோட அம்மா இறந்தத போன் பண்ணி சார் கிட்ட 'சார் இன்னிக்கு திவ்யா ட்யூஷன் வரமாட்டா.. அம்மா இறந்துட்டாங்க'-னு சொல்ல அத எங்க சார் லைட்டா கொஞ்சம் பெருசா misunderstand பண்ணி திவ்யாவோட அம்மானு சொல்லி எல்லாரையும் கதி கலங்க வச்சிட்டாரு.. ட்யூஷன வேற லீவ் விட்டுட்டாரு அன்னிக்கு.. 

நடந்த களேபரத்துல சார்கிட்ட இறந்தது பாட்டினு சொல்றதுக்கு எல்லாரும் மிஸ் பண்ணிட்டோம்.. அவர் பிசிக்ஸ் சாரையும் கூட்டிட்டு பெரிய மாலையா வாங்கிட்டு திவ்யா வீட்டுக்கு போயிருக்காரு.. இத கேள்விப்பட்டதும் சிரிப்ப கொஞ்சம் கூட கன்ட்ரோல் பண்ணமுடியல.. அடுத்த கிளாஸ்க்கு ட்யூஷன் போனப்போ சார்கிட்ட கேட்டோம் பல்பு வாங்குன எக்ஸ்பிரியன்ஸ பத்தி.. " அத ஏன்மா கேக்குறீங்க..?? போறப்போ தெருல திவ்யா குட்டீஸோட விளையாடறத பாத்தப்போவே டவுட் வந்துச்சு.. சரினு வீட்டுக்குள்ள போனா ஒரு பழுத்த பாட்டிய படுக்க வச்சிருக்காங்கம்மா"னு ரொம்பவே பாவமா சொன்னாரு.. 

'ஹீரோ தான் சார் நீங்க.. ஸ்டூடன்டோட பாட்டி இறந்தா மாலை வாங்கிட்டு துக்கம் விசாரிச்சிட்டு வர்ற அளவுக்கு பெரிய மனசுலாம் யாருக்கு சார் இருக்கு??' என்று ஏதோ ஒரு வாலு நக்கல் டோன்ல எடுத்து விட நாங்கலாம் கோரசா ஆமாம் போட 'வேணாம்.. அழுதுறுவேன்'னு அவர் சொல்ல சிரிப்பலை தான் அங்க..

இது நடந்து கிட்டதட்ட நாலு வருஷம் தாண்டிருச்சு.. பட் இப்போவும் ட்யூஷன் பத்தியும், ஸ்கூல் பத்தியும், டீச்சர்ஸ் பத்தியும், அடிச்ச லூட்டி, வாங்குன திட்டு, போட்ட சண்டை பத்திலாம் நினைக்கிறப்போ செம பீல்.. ஸ்வீட் டேஸ்... ச்ச்ச்வீட்ட் மெமரீஸ்... மனசுக்குள்ள எந்த கவலையும் துள்ளி திரிஞ்ச டேஸ் அது... ஸ்கூல் ப்ரண்ட்ஸோட பேசறதே boost குடிச்ச மாதிரி ஒரு பீல் குடுக்கும்... அவங்கக்கூடலாம் எப்போவும் கான்டாக்ட் வச்சிக்கோங்க... கான்டாக்ட் இல்லைனா பர்ஸ்ட் தேடி கண்டுபிடிங்க....

 

This is entry #82 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி நாட்கள்

எழுத்தாளர் - டோனா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.