(Reading time: 9 - 17 minutes)

2017 போட்டி சிறுகதை 83 - மறப்பேன் என்றே நினைத்தாயோ - வத்சலா

This is entry #83 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - நட்பு

எழுத்தாளர் - வத்சலா

Remember

 

hi friends

இது ரொம்ப நாள் முன்னாடி எழுதின கதை. இது நட்புங்கிற டைட்டில்க்கு சரியா வரும்னு தோணிச்சு. அதான் அனுப்பி வெச்சேன். படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

துரையில் இருக்கும் தனது தந்தையின் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு மனைவியுடன் பெங்களுர் செல்ல ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டான் தனா. டாக்சி நகர்ந்துக்கொண்டிருந்தது.. பின் சீட்டில் அமர்ந்திருந்தனர் அவனும் அவன் மனைவி ரஞ்சனியும்.

அவனுக்கு திருமணம் ஆகி சில மாதங்களே ஆகின்றன. ஆனால் புது மாப்பிள்ளையின் எந்த ஒரு உற்சாகமும் அவனிடம் தென்படாததுதான் அவனது மனைவி ரஞ்சனியின் மிகப்பெரிய வருத்தம்.

'அவள் விரல்கள் அருகில் அமர்ந்திருந்தவனின் விரல்களோடு கோர்த்துக்கொள்ள முயல சட்டென சூடு பட்டதை விரல்களை உருவிக்கொண்டான் தனா. அதன் பிறகு எப்போதும் போல் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு கனத்த மௌனம்  நிலவிக்கொண்டிருந்தது.

இப்படிதான்!!! அவளை விட்டு விலகி விலகி செல்வதும், வார்த்தைகளை அளந்து அளந்து பேசுவதும் எப்போதும் ஏதோ ஒரு சிந்தனையிலேயே மூழ்கி கிடப்பதுமே அவனது வாடிக்கையாகி இருக்கிறது. இதற்கான காரணம் புரிந்தாலாவது ஏதாவது செய்யலாம் .எதுவுமே சொல்லாமல் இப்படி இருந்தால் என்ன செய்வதாம்?

திருமணதிற்கு முன்னால் வரை அவன் அப்படி இருந்ததில்லை. 'ஏதாவது காதல் தோல்வியாகவே இருக்க வேண்டும்' ஒரு பெருமூச்சு அவளிடம்.

ரயில் நிலையத்தை அடைந்திருந்தனர். நடை மேடையில் அவளை நிற்க வைத்துவிட்டு ஒரு ஓரமாக சென்று சிகரெட்டை வாயில் பொருத்திக்கொண்டான் தனா.

'தனா,,,,, இது எத்தனாவது சிகரெட்?' போதும் நிறுத்து.... கீழே போடு... '

...............

'இப்போ நான் ஏதாவது கெட்ட வார்த்தையிலே உன்னை திட்ட போறேன் பாரு..... கீ........ழே போ.......டு....' எங்கிருந்தோ கேட்பதை போலே இருந்தது அந்த குரல்!!!!

ஒரு காலத்தில் இப்படி திட்டி திட்டியே, எங்கிருந்தோ தொற்றிக்கொண்டுவிட்டிருந்த தனா என்ற தனஞ்செயனின் சிகரெட் பழக்கத்தை நிறுத்தியிருக்கிறது அந்த குரல். அது மதுவின் குரல்.

நின்று போயிருந்த சிகரெட் பழக்கம் சில மாதங்களாக மறுபடியும் துவங்கி இருக்கிறது.. இதற்கும் காரணம் யாராம்? 'மனம் பொங்கியது தனாவுக்கு. என்னை பார்ப்பதை... ஏன் என்னுடன் பேசுவதைக்கூட நிறுத்திவிட்ட அந்த மதுதானே? சட்டென கைவிட்டு போய்விட்ட மதுவின் அன்புதானே.?

ஒவ்வொரு முறை சிகரெட்டை தொடும் போதும் மதுவின் முகம் கண் முன்னே வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. ஒரு பெருமூச்சு எழுந்தது தனாவிடம். அவனது திருமணதிற்கு பிறகு மது ஊரை விட்டே போய்விட்டதாகத்தான் செய்தி கிடைத்தது. கைபேசியில் அழைத்து பேசும் தைரியம் கண்டிப்பாக இல்லை தனாவுக்கு.

'துரோகம் செய்தவன் நான். அதன் பின்பும் மது என்னோடே இருக்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்ப்பது எந்த வகையில் நியாயம்????'

சிகரெட்டை கீழே போட்டு அணைத்து விட்டு மதுரையிலிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட தயாராக இருந்த ரயிலில் ஏறி தனது பெட்டியை பர்த்தின் அடியில் தள்ளிவிட்டு அமர்ந்தான் தனா. அவன் அருகில் அமர்ந்தாள் ரஞ்சனி.

'பத்து நாளா இல்லையேன்னு பார்த்தேன். இன்னைக்கு ஏங்க மறுபடியும் சிகரெட்? அதுவும் பப்ளிக் ப்ளேஸ்லே. மாட்டினீங்கன்னா ஃபைன் போடுவாங்க. தெரியுமா? அதுக்கும் மேலே உடம்பை இப்படி கெடுத்துக்கறீங்களே. எனக்கு பயமா இருக்கு.' தவிப்புடன் சொன்னாள் அவள்.

'பச்... ஏதோ மனசு சரியில்லை. விடேன்.' அவளை கத்திரித்து தள்ளி நிறுத்தும் 'பட்' பதில். அவள் முகம் வாடி துவண்டு போனது.

'எந்த தவறும் செய்யாத இவளுக்கு எதற்காம் தண்டனை?' அவளது முகவாட்டம் அவனது  மனசாட்சியை பலமுறை பேசவைக்கிறது. ஆனால் அவனது குற்ற உணர்ச்சி மேலோங்கி எல்லாவற்றையும் அழுத்தி விடுகிறது.

யில் புறப்பட்டு திண்டுகல்லை தாண்டி சென்றுக்கொண்டிருந்தது. எல்லாரும் படுத்துவிட ஆயத்தமாக பாத்ரூமை நோக்கி நடந்தான் தனா. இரண்டு மூன்று கம்பார்ட்மெண்டுகளை அவன் கடந்து நடக்க, தன்னிச்சையாக அவன் கண்கள் வலப்புறம் திரும்ப, அவனுக்குள்ளே சந்தோஷ அருவி!!!!

'அங்கே ..... மது!!!! லோயர் பர்த்தின் ஜன்னலோரத்தில் மது!!! ஆம் மதுவே தான்....' பார்த்தே விட்டான் மதுவை!!! மது அவனை கவனித்ததாக தெரியவில்லை. விருட்டென திரும்பி தனது இருக்கையில் வந்து அமர்ந்துக்கொண்டான் தனா.

ரஞ்சனியின் விழிகள் அவன் முகத்தை ஆராய தவறவில்லை. திருமணம் முடிந்த இந்த சில மாதங்களில் அவன் முகத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியை அவள் பார்த்ததில்லை. திடீரென என்னவாயிற்று அவனுக்கு.???

மனதில் ஆயிரம் கேள்விகள் ஆனால் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை அவள். 'கேட்டால் மட்டும் என்ன? உண்மையான தெளிவான பதில் கிடைத்து விடவா போகிறது?'

மிடில் பர்த்தில் ஏறி உறங்க சென்று விட்டிருந்தாள் அவள். தனா சைடு லோயரில் வந்து அமர மதுதான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்து சைடு லோயரில் வந்து படுத்துக்கொள்வது தெரிகிறது.

ரயில் கரூர், ஈரோடை தாண்டி ஓடிக்கொண்டிருக்க மது இருந்த திசையையே பார்த்திருந்தான் தனா. நேரம் இரவு ஒன்றை நெருங்கிக்கொண்டிருக்க தூக்கம் தென்படாத தூரத்துக்கு சென்றிருக்க, அலைப்பாயும் மனதுடன் தனா.

ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தவனாக எழுந்தான் அவன். மெல்ல நடந்து மதுவின் காலடியில் சென்று அமர்ந்தான். காதில் ஹெட்ஃபோன் இருக்க, மதுவின் கண்கள் மூடிக்கிடந்தன. சில நிமிடங்கள் கடந்த பின்பும் கண்கள் திறக்கவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.