(Reading time: 13 - 25 minutes)

2017 போட்டி சிறுகதை 84 - நலம் நலமறிய ஆவல்... - வசுமதி

This is entry #84 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்...

எழுத்தாளர் - வசுமதி

 Cows

திரவன் தனது கதிர்களை கொண்டு அந்த சோலையை தனக்கு இரையாக்கி கொண்டிருந்தான்..

மனிதனும் தனது இரை(உணவு)க்காக வேலைக்கு சென்று கொண்டிருந்தான்... காட்டு விலங்குகளும் இரைக்காக வேட்டையாட சென்றுவிட்டது... பறவைகளும் இரை தேட தன் கூட்டை விட்டு பறந்து சென்று கொண்டிருந்தன.. பூச்சிகளும் புழுக்களும் கூட அந்த நிலத்தில் தனது இரையை தேடி கொண்டிருந்தன...

ஆனால், செல்வியோ பிறர்க்கு இரையாக சென்று கொண்டிருக்கின்றாள்...

யாரிந்த செல்வி...???

சி வருடங்களுக்கு முன்...

சின்னவேடம்பட்டி... அமராவதி ஆற்றின் மடியில் அமைந்திருக்கும் சிறு கிராமம்.. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் மக்கள் நிறைந்த ஊர்..

தோப்புக்கள் நிறைந்த ஊரின் ஒரு கோடியில் அமைத்துள்ளது செல்வியின் இல்லம்.. இருபத்தி ஒன்றிற்கு பத்து என நீளவாக்கில் அமைத்துள்ளது அவளது அறை... 24/7 காற்றோட்ட வசதியுடனும், உணவு வசதியுடனும் அவளை பார்த்து கொண்டனர் அவள் விட்டார்... பேச்சுத்துணைக்கும் அவலொப்பம் ஐந்து தோழிகள் இருந்தனர்..

பிறகு அவளுக்கு ஏன் இந்த நிலைமை...???

"ம்மா தனம்... லட்சுமி கத்திட்டே இருக்கா என்னனு பாரு தாயி..",தூக்கக்கலக்கத்தில் தனது மருமகளை அழைத்தார் செண்பகம்..

"இதோ பாக்கறேன் அத்தே...",கொட்டாவி விட்டபடி தன் வீட்டின் பின்னால் இருக்கும் கொட்டகைக்கு விரைந்தார் தனம்.

செவலை நிறத்தில் சாம்பல் நிற கண்கள் கொண்டு முள்ளை போல் கூர்மையான கொம்புகளுடன் அழகான தோற்றத்துடன் நின்றுகொண்டிருந்தாள் லட்சுமி... ஆனால் அவளது காந்த கண்கள் கலங்கி இருந்ததோ..??

மா...மா... என்ற முனகலுடன் நின்றுகொண்டிருந்த லட்சுமியை நெருங்கிய போதே அது கன்றை ஈன்ற போகிறது என்று உணர்ந்த தனம், செய்தியை கூற வீட்டிற்கு விரைந்தார்...

விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதில் தனது கன்றை ஈன்றெடுத்தாள் லட்சுமி... கன்று குட்டி மண்ணில் காலூன்றிய நேரம் அவ்வீட்டின் குட்டி இளவரசியும் பிறந்தாள் ... ஆம், தனம் பாட்டி ஆகிவிட்டார்..

"நம்ம லட்சுமி கண்ணு போட்ட நேரம் நம்ம வீட்டிற்கு ஒரு இளவரசி வந்துட்டாள்.. எல்லாம் இந்த கண்ணு பிறந்த நேரம்..."

ஆம், கிராம புறங்களில் தனது வீட்டிற்கு வரும் மருமகளை எப்படி கொண்டாடுவார்களோ, அதுபோல் வீட்டில் கன்று பிறந்தாலும் கொண்டாடுவர்... கன்று ஈன்ற நேரம் நடக்கும் சுப துக்கங்களை அந்த கன்றின் ராசியோடு ஒப்பிடுவார்கள்...

"டேய் மாரி.. லட்சுமி போட்ட குட்டிய பாத்தியா..?? அப்டியே மான் குட்டி கலருல குறுகுறு கண்ணோட நம்ம லட்சுமியை உரிச்சு வெச்ச மாதிரி பொறந்திருக்கு..",தன் வீட்டு பண்ணைக்காரனான மாரியிடம் கூறினார் தனம்.

"ஆமாங்க அம்மா... இந்த மாட்டுக்கு என்ன பெயர் வெக்கறது..??"

"இது பொறந்த நேரம் நம்ம வீட்டுக்கு ராணி பொறந்திருக்கு... அதனால நல்ல பெயரா வெக்கணும்... ஆங்... செல்வி.. சிவசெல்வினு வெச்சிரலாம்..." , என்று கூறிக்கொண்டே செல்வியை தடவி கொடுத்தார் தனம்..

தே நேரம் அங்கே பால் வாங்க வந்த ஊர்காரரில் ஒருவர்,"என்னமா தனம் சீம்பால் காய்ச்சியாச்சா..??",என்று கேட்டார்..

"மாடு இப்போ தா நஞ்சு கொடிய வெளிய தள்ளுச்சு அண்ணே... அதனால இனிமேல் தான் பால் கறக்கணும்... சாயங்காலம் தான் எல்லாருக்கும் சீம்பால் கொடுக்கணும்.. "

கிராம புறங்களில் உள்ள வழக்கங்களில் இதுவும் ஒன்று... வீட்டில் பசு ஒரு கன்றை ஈன்றால் முதலில் கறக்கும் பாலை காய்ச்சி ஊரில் உள்ள சொந்தங்களுக்கு கொடுப்பர்.. சுமார் இருபது வருடங்களுக்கு முன் வாரத்திற்கு இரு முறையேனும் ஊர்காரர்களுக்கு சீம்பால் கிட்டும்... காரணம் - அப்பொழுதிருந்த பசுக்களின் எண்ணிக்கை...

ரண்டு வாரங்களுக்கு பிறகு...

டந்த இரு வாரங்களாக செல்வி அந்த தோப்புக்குள் சுற்றி திரிவதும், தாயின் மடியில் பால் குடிப்பதும், அந்த வீட்டிலுள்ள கோழிகளை துரத்துவதும், உறங்குவதும் என தனது நேரத்தை போக்கி கொண்டிருந்தது ...

அது போக தனம் எங்கு சென்றாலும் ஒரு காவலாளியை போல் அவரை ஒட்டி கொண்டே திரிந்து கொண்டிருந்தது...

"பாப்பு இங்க பாருங்க... இங்க பாருங்க... செல்விய பாருங்க...",என்று அந்த வீட்டு இளவரசிக்கு செல்வியை காட்டி வேடிக்கை காட்டி கொண்டிருந்தார் தனம்.

அன்று காலை முதல் தனத்தின் குரலை கேட்காமல் அங்கும் இங்கும் குதித்து கொண்டிருந்த செல்வி திடீரென்று கேட்ட தனத்தின் குரலை கேட்டு அவர் இருக்கும் திசை நோக்கி ஓடியது...

அருகில் வந்த செல்வியை அணைத்துக்கொண்டு "அடி செல்வி... இங்க பாரு நம்ம வீட்டு இளவரசிய...",என்று அதனையும் சேர்த்து கொஞ்சினார் தனம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.