செல்வியும் இப்பொழுது தெய்வா, ரோஸி, மீனு என மூன்று கிடாரி கன்றுகளையும் காளி, பாண்டி என்று காளை கன்றுகளையும் ஈன்று விட்டது...
பரிதாபம் என்ன வென்றால் இதனை நாட்டு மாடுகளை பராமரிக்க போதிய வருமானம் இல்லாததால் தனம் இந்த கன்றுகளையெல்லாம் விற்று விட்டார்..
இந்த கன்றுகளை விற்ற காசில் சிந்து இன மாடுகளை வாங்க தொடங்கினார்..
நாட்டு மாடுகளை விற்க சிந்து மாடுகளை வாங்க என இருந்தவரின் கையில் மிச்சம் இருந்தது நமது செல்வி மட்டும் தான்..
தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்ற ஒன்றும் இருக்கும் அல்லவா... செல்விக்கும் ஒரு முடிவு வந்தது..
செல்விக்கு ஆறாவது சினை பிடித்த நேரம்..
தனத்தை வீட்டில் எப்பொழுதும் பட்ஜெட் போட்டே எந்த காரியத்தையும் செய்வர்.. காரணம் விவசாயத்திலிருந்து போதிய வருமானம் கிடைக்காமல் இருப்பதால்...
அந்த பட்ஜெட்டில் சிந்து மாடு சினை பிடிக்கும் போது வரும் செலவிற்கும் நாட்டு மாடு சினை பிடிக்கும் போது வரும் செலவிற்கும் உள்ள மலையளவு வித்யாசத்தை பார்த்து அதிர்ந்து தான் போனார் தனம்.. இதனால் தங்களுக்கு சில ஆயிரம் ரூபாய் நஷ்டம் வருவதையும் காசு கையை பிடிப்பதையும் உணர்ந்து கொண்டவர் எடுத்த முடிவுதான் செல்வியை விற்பது என்பது..
செல்வியை விற்பதற்கு யாருக்கும் மனதில்லை.. முக்கியமாக இளவரசிக்கு.. செல்வியுடன் வளர்ந்தவல்லவா அவள்...?? பள்ளி விடுமுறைகளின் போது ஊருக்கு வருகையில் அவள் தானே செல்வியை பராமரிப்பது... சிலது நாட்கள் செல்வியுடன் கழிக்கவேண்டும் என்பது அவளது விருப்பம்.. அதற்கான சந்தர்ப்பமும் தானாய் அமைந்தது...அவள் வீட்டினர் மூலமாய்..
சினை பிடித்த பசுவை விற்பது என்பது பாவச்செயல் என்று வீட்டில் உள்ளவர்கள் கூறியதால் கன்றை ஈன்ற பிறகு விற்கலாம் என முடிவெடுத்தார் தனம்..
செல்வியை விற்கும் நாளும் வந்தது.. துணைக்கு அதன் கன்றையும்..
மாட்டு வியாபாரியை அழைத்த தனம் செல்வியை ஐய்யாயிரம் ரூபாய்க்கும் கன்றை நான்காயிரத்திற்கும் விலைபேசி விற்றார்..
செல்வியை விற்றது தனத்திற்கும் கவலை அளிக்கும் விஷயம் தான் ... ஆனால் அதை வைத்திருப்பதற்கு அவரின் பொருளாதார சூழ்நிலை ஒத்துக்கொள்ளவில்லையே என்ன செய்ய..??
அவரை பொறுத்தவரை செல்வி எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான்.. ஆனால் இப்பொழுது அது எங்கு இருக்கின்றது தெரியுமா..??
மாட்டு சந்தைகளில் ஆறு ஏழு கன்றுகளை ஈன்ற பசுக்கள் விலைக்கு போகாததால் அந்த மாடுகளுடன் செல்வியையும் அந்த வியாபாரி மற்றொருவரிடம் அந்த மாடுகளை எல்லாம் ஏழாயிரம் ரூபாய்க்கு வெளிமாநிலத்திற்கு விற்று விட்டார்...
தமிழ்நாடு கேரளா பார்டர்...
தமிழக எல்லையை கடந்து கேரளவிற்குள் நுழைந்து கொண்டிருந்தது அந்த வாகனம்..பத்து பதினைந்து மாடுகள் நிற்க வைக்க மட்டுமே இடமிருக்கும் அந்த டெம்போவில் முப்பது மாடுகளை அடைத்து வைத்திருந்தனர்.. அந்த மாடுகளோடு தான் நமது செல்வியும் பயணம் செய்து கொண்டிருக்கின்றாள்.. எதற்கு தெரியுமா..???
இரையாக...
This is entry #84 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - நலம் நலமறிய ஆவல்...
எழுத்தாளர் - வசுமதி
{kunena_discuss:1083}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.